(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”ஓ தாங்க்யூ ஆபிசர்” என சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் செல்ல கான்ஸ்டபிளோ சிதம்பரத்திடம்

   

”சார் ரொம்ப வழியறீங்க சார், முதல்ல போய் குளிச்சிட்டு வேற ட்ரஸ்ல வாங்க சார், சின்ன பொண்ணு புருஷன் வேற இல்லை, மனசு அலைபாய போகுது”

   

”அப்படியா இதுவும் நல்லதுதான் உள்ள வா” என சொல்லிவிட்டு உள்ளே சென்ற சிதம்பரத்தை குழப்பமாக பார்த்தான் கான்ஸ்டபிள்

   

”இப்ப நாம என்ன சொல்லிட்டோம்னு சந்தோஷமா குதிச்சி குதிச்சி உள்ள போறாரு, நட்டு கழண்டுடிச்சா என்ன சே நமக்குன்னு வந்து சேர்றதுங்கலாம் பாரு, இனி இந்தப் பொண்ணால என்னென்ன பிரச்சனை வருமோ, முதல்ல இந்த பொண்ணுகிட்டயிருந்து சிதம்பரத்தை காப்பாத்தனும், விட்டா தில்லையை பிடிச்சி நியாயம் கேட்கறேன்னு அவனை படாதபாடு பட வைச்ச மாதிரி தில்லை வேணும்னு இந்தாளை படாதபாடு பட வைச்சிடும் இந்தப் பொண்ணு

   

இந்தாளுக்கென்ன ஏதோ காதலியை பார்க்கற மாதிரி அடுத்தவன் பொண்டாட்டியை பார்த்து வைக்கறாரு, இதுல தில்லையை கண்டுபிடிச்சி கொன்னுட்டு சம்யுக்தாவை கல்யாணம் பண்ணிக்கனுமாம், இதெல்லாம் நடக்கற விசயமா, நமக்கென்ன இப்பவே போன் மூலம் சாரை பிடிச்சி வைக்கலாம், இங்க நடக்கறதை அவரும் போன் மூலம் கேட்டுக்கட்டும்” என நினைத்தபடியே தனது செல்போன் மூலம் யாருக்கோ தொடர்பு கொண்டான்

   

”ஹலோ சார் நான்தான் சார்”

   

”என்னய்யா இந்நேரத்தில போன் பண்ணியிருக்க”

   

”என்னத்த சொல்றது, அந்த சம்யுக்தா பொண்ணு சிதம்பரத்தோட குவார்ட்டர்ஸ்க்கே வந்து நின்னுடுச்சி சார்“

   

”என்னயா சொல்ற” என அந்தப் பக்கம் அலற

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.