(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”போனை ஆன்லயே வை, அங்க நடக்கற எல்லாமே நான் தெரிஞ்சிக்கனும்”

   

”சரிங்க சார் அப்படியே செய்றேன், இப்ப நான் உள்ள போறேன் சார்”

   

”சம்யுக்தாவை கவனமா பார்த்துக்க, சிதம்பரத்தால அவளுக்கு எதுவும் ஆக கூடாது”

   

”நீங்க ஒண்ணு அந்தப் பொண்ணால சிதம்பரத்துக்கு எதுவும் ஆகாம இருந்தா சரி”

   

என சொல்ல மறுபக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது, அதோடு கான்ஸ்டபிளும் அந்த செல்போனை ஆப் செய்யாமல் ஆன் செய்தபடியே தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு உள்ளே சென்றார்

   

அங்கு ஹாலில் இருந்த சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்தாள் சம்யுக்தா, அவளின் முகத்தில் துளியும் கவலையில்லை, மகிழ்ச்சியாக இருந்தாள். இதில் கழுத்தில் தாலி வேறு மறுபக்கம் சிதம்பரமோ அரக்க பரக்க குளித்துக் கொண்டிருந்தான்.

   

கான்ஸ்டபிளோ

   

”என்னம்மா சந்தோஷமா இருக்க, என்ன விசயம்” என சம்யுக்தாவிடம் கேட்க அவளோ

   

”இப்பதான் ஆபிசர் சொன்னாரு, தில்லை சம்பந்தமா ஏதோ ஒரு தகவல் கிடைச்சிருக்குன்னு, அதனால நான் சந்தோஷமா இருக்கேன்”

   

”தகவல்தானே கிடைச்சிருக்கு, என்னவோ தில்லையே கிடைச்சிட்ட மாதிரி சந்தோஷப்படறியே“

   

”கூடிய சீக்கிரம் தில்லையும் கிடைச்சிடுவாரு”

   

”ஆமா ஒருவேளை அவன் கிடைச்சிட்டான்னு வை, என்ன செய்யப் போற அவன்கூட வாழப்போறியா இல்லை உனக்கு நடந்த அநியாயத்துக்கு மறுபடியும் நியாயம் கேட்கப் போறியா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.