”அவங்களா அங்க பாருங்க சொன்னா கேட்காம என்னை இழுத்துக்கிட்டு இங்க வந்துட்டாங்க” என சொல்ல சிதம்பரமோ மகிழ்ந்தான், ஆசையாக வீட்டைவிட்டு வெளியேறி பார்த்தான்.
கார் நின்றிருக்க அதற்குள் சம்யுக்தா இருந்தாள், சிதம்பரத்தை கண்டதும் காரை விட்டு இறங்கி அவனிடம் வந்தாள், சிதம்பரமோ வெறும் லுங்கி பனியனுடன் இருக்கவே கூச்சத்தில் நெளிந்தான்
”சாரி ஆபிசர், உங்களை தொந்தரவு பண்ணதுக்கு மன்னிக்கனும்”
”நோ ப்ராப்ளம் ப்ளீஸ் உள்ள வாங்க ஆமா உங்கப்பா எங்க”
”அவருக்கு சென்னையில முக்கியமான வேலை வந்துடுச்சி, காலையிலயே கிளம்பிட்டாரு, அதான் நான் தனியா வந்தேன்”
”ஓகே ஓகே நானே உங்களை தேடி ஓட்டலுக்கு வரலாம்னு இருந்தேன்”
”ஆமாம் ஆனா, ஓட்டலுக்கு வந்தா தேவையில்லாம என்னை உங்களோட சேர்த்து வைச்சி கதை கட்டுவாங்க, அதான் நானே ஸ்டேஷனுக்கு வந்தேன், நீங்க இல்லையா அதான் இங்கயே வந்துட்டேன், நான் இங்க வந்ததுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே”
”நோ நோ எப்படியும் நீங்க வர வேண்டிய இடம் இதுதானே”
”புரியலை ஆபிசர்“
”கேஸ் விசயமா ஸ்டேஷன்ல பேச முடியாது, தில்லையோட விசுவாசிங்க இருப்பாங்க, யாருக்காவது தகவல் கிடைச்சா தில்லையை கண்டுபிடிக்கறது கஷ்டம், இந்த வீடு எனக்காக ஒதுக்கின வீடு, இங்க யாரும் வரமாட்டாங்க ஸோ நாம தைரியமா இங்க பேசலாம் உள்ள வாங்களேன் ப்ளீஸ்”