(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

எடுப்படாது! வெள்ளைக் கொடி காட்டுறதை தவிர எனக்கு வேற வழி இல்ல!”

   

“அப்படி வாங்க வழிக்கு!”

   

“எப்போவும் நடக்குறது தானே சுபா! சரி, நீங்க இரண்டு பேரும் செல்லம் கொஞ்சி முடிச்சிட்டு சொல்லுங்க, நான் வெயிட் செய்றேன்... என்ன வசீகரனோட ஃபேமிலி தான் பாவம் அங்கே ரெஸ்டாரன்ட்ல காத்துட்டு இருப்பாங்க.”

   

“அச்சோ, ஆகாஷ் நான் அதை மறந்துட்டேனே!!! ஜோதி அரை மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்புறோம்னு சொன்னா. நாமளும் கிளம்புவோமா???”

   

“ஆன்ட்டி, அங்கிளும் இன்னைக்கு வராங்களாம்மா?”

   

“அவங்க மட்டும் இல்லப்பா என் வருங்கால மருமகளும் வரா. சரி, வா, கிளம்பலாம்... கார்ல போய் பேசலாம்,” என்று அவனை அவசரப் படுத்திய சுபாஷினி, மறக்காமல் அவன் கொடுத்த பூங்கொத்தில் இருந்து மூன்று மலர்களை கையில் எடுத்துக் கொண்டாள்.

   

அப்படியே, மீதி இருந்த மலர்களை ஒரு பூச் சாடியை காலி செய்து அதனுள் வைத்து, பூக்களை அழகாக அடுக்கினாள்.

   

அம்மா செய்வதை கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷிற்கு, அந்த பூக்கள் சினேகாவை நினைவூட்டின...

   

அவள் முகமும் கூட ரோஜாப்பூ தான்...

   

ஒரு சில நிமிடங்களுக்கு முன் எதிர்பாராமல் அவள் அவன் முன் வந்ததையும், அதுவும் சுரிதாரில் இருந்ததையும் நினைத்து அவனின் முகமும், மனமும் கனிந்தது...

   

இதுப்போல அவளுக்கு பூக்கள் வாங்கி கொடுக்கும் உரிமை கிடைத்தால் எப்படி இருக்கும்... பூக்களை பார்த்து அவளின் முகம் எப்படி மலரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.