சரண்யா திகைத்துப் போய் சிலையாக மாறி நிற்கவும், மித்ரனே, நிஷாவை கையில் வைத்துக் கொண்டு சரண்யா நின்றிருந்த இடத்துக்கு வந்தான்...
“அம்மா...”
ஏதோ வெகு நாட்கள் அம்மாவை பார்க்காமல் இருந்ததை போல சரண்யாவிடம் துள்ளலுடன் தாவி சென்றாள் நிஷா...!
அதை எதிர்பார்த்திருந்தவளை போல லாவகமாக மகளை தாங்கி பிடித்துக் கொண்டாள் சரண்யா...
“அம்மா, மித்ரன் நிறைய டாய்ஸ் வச்சிருக்காராம். எனக்கு தரேன்னு சொன்னார். நான் வாங்கிக்கட்டுமா?”
நிஷா சொனனதைக் கேட்டு சரண்யா மயக்கம் போட்டு விழாத குறை தான்..!!!!
நம்ப முடியாமல் மித்ரனை பார்த்தாள்!!!!
அவன் சின்ன புன்னகை உதட்டில் மின்ன அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தான்!
முதல் முதலாக மித்ரனை கோபம் இல்லாமல், கண்ணில் வெறுப்பு இல்லாமல், ஆக்ரோஷம் இல்லாமல் பார்க்கிறாள்...!
இவனுக்கு இப்படி கூட ஒரு முகம் இருக்கிறதா??? சிங்கம் புலிக்கு எல்லாம் புன்னகைக்க தெரியுமா என்ன???
தன்னுடைய யோசனையில் மகளுக்கு பதில் சொல்லாமல் சரண்யா அமைதியாக நிற்க, மித்ரன் அவளை ஒரு பார்வை பார்த்தான். அவளின் ஆச்சர்யத்தை அவனால் ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது. சரண்யாவை இயல்புக்கு கொண்டு வர உதவ விரும்பியவனாய்,