சரண்யாவின் குரலில் இப்போதும் தயக்கம் நிறைந்து இருப்பது மித்ரனுக்கு புரிந்தது.
அவள் மனதை மாற்ற, “இது என்னோட ஐடியா இல்லை சரண்யா... அம்மா சஜஸ்ட் செய்த ஐடியா... அதனால தான் சொன்னேன்,” என்று கூசாமல் பொய் சொன்னான்!
ஐடியா சொன்னது நளினி என்று தெரிந்த பிறகும் மறுக்க சரண்யாவிற்கு தயக்கமாக இருந்தது...
இருந்தாலும் மித்ரனிடம் இருந்து ஒன்றை பெற்றுக் கொள்வதா...
சரண்யாவின் அமைதியும், தயக்கமும் மித்ரனுக்கு புரிந்தது... அம்மா என்றதும் அவள் முகத்தில் வந்த மாற்றம் அவனுடைய அம்மா மீது அவள் வைத்திருக்கும் மதிப்பையும் அவனுக்கு எடுத்து சொன்னது...! அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று தெரிந்துக் கொள்ள காத்திருந்தான்!
ஆனால் சரண்யா மேலும் சில வினாடிகள் அமைதியாகவே இருக்கவும்,
“உனக்கு ஒகேன்னு நினைக்கிறேன்,“ என்று அவளிடம் சொன்ன மித்ரன், அவளின் கையில் இருந்த நிஷாவிடம்,
“அம்மா ஓகே சொல்லிட்டாங்க நிஷா, வா போகலாம்,” என்றான் கொஞ்சலாக!
இப்போதும் பர்மிஷன் கேட்டு அம்மா பக்கமாக பார்த்த நிஷா, சரண்யா சரி என்பது போல மெல்ல தலை அசைக்கவும், சந்தோஷத்துடன் தாவிக் குதித்து மித்ரனிடம் சென்றாள்.
நிஷா கையில் வந்த உடனே மேலே எதுவும் பேசாமல் அங்கிருந்து நடக்க தொடங்கினான் மித்ரன்...
“பிரின்சஸ் castle இருக்கா மித்ரன்?” என்று நிஷா அவனிடம் கேட்பது சரண்யாவின் காதிலும் விழுந்தது...