“அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க நிஷா... நீ வா... டாய்ஸ் எடுத்துட்டு உன் ஃப்ரென்ட் மோனி கூட விளையாடலாம்... அங்கே மைத்ரேயி ஆன்ட்டி, ஜெயந்த் அங்கிள் எல்லோரும் கூட இருக்காங்க,” என்றான் தண்மையாக.
ஆனால் அவன் எதிர்பார்த்ததுப் போல நிஷா உடனே தாவிக் குதித்து அவனிடம் வரவில்லை! மாறாக சரண்யாவின் முகத்தைப் பார்த்தாள்...!
சரண்யாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...!
“ஹ்ம்ம்... சாருக்கு... நிறைய வேலை இருக்கும் நிஷா... உன் கிட்ட இப்போவே நிறைய டாய்ஸ் இருக்கே,” என்றாள் தயக்கத்துடன்...
ஆனால் சொல்லி முடித்ததுமே மித்ரனை பார்த்தாள்...
இப்போது என்ன செய்ய போகிறான்??? அவன் சொன்னதற்கு அவள் வேண்டாம் என்று சொல்லி விட்டாள் என்று கத்தப் போகிறானா???
மித்ரன் சரண்யாவின் பார்வையை கவனிக்க தான் செய்தான்... இப்போதும் அவளின் யோசனை அவனுக்குப் புரிந்தது...
ஆனாலும் அதை புரிந்துக் கொள்ளாதவனை போல காட்டிக் கொண்டு,
“இட்ஸ் ஓகே, இன்னைக்கு நான் ஃப்ரீ தான்... என் அம்மா, நானும் மைத்தியும் சின்ன வயசுல விளையாடின டாய்ஸ் எல்லாத்தையும் எடுத்து நீட்டா பேக் செய்து வச்சிருக்காங்க... அது அங்கே வேஸ்டா இருக்கிறதுக்கு, நிஷா விளையாடினா யூஸாவது ஆகுமே... ஐ ஹோப் யூ டோன்ட் ஹேவ் எனி இஷ்யூஸ்,” என்றான்.
மித்ரன் அவளிடம் சாதராணமாக பேசுகிறான்!!!! வாயை பிளக்க எழுந்த எண்ணத்தை அடக்கி விட்டு, “இல்லை... சார்... பரவாயில்லை... எதுக்கு வேண்டாம்,” என்றாள் மெல்லியக் குரலில்.