(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 32 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ம்மாவின் மறைவுக்கு முன் வரை தொகுப்பாக இருந்த டைரியின் எழுத்துக்கள், அதன் பின் நேரடி பேச்சு பாணிக்கு மாறி போய் இருந்தது.

   

படிக்க, படிக்க அங்கே சொல்லப்பட்டிருந்த நிகழ்வுகள் ரேஷ்மியின் கண் முன்னே காட்சியாக விரிந்தது...

   

✽✽✽

   

சுமித்ரா அவனை விட்டு சென்று விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளவே கமலால் முடியவில்லை.

   

இறந்து போயாவது அவளிடம் போய் விடலாம் என்றால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டல்லவா சென்று விட்டாள்...

   

ஏன், என்னை விட்டுட்டு போன சுமி... என அவளின் அஸ்தியை கட்டி அணைத்தப் படி எத்தனை நேரம் அழுதான் என்றே அவனுக்கு தெரியவில்லை.

   

திடீரென மென்மையான விரல்கள் அவனின் தலை முடியை வருடிக் கொடுத்தது.

   

யார் என்று பார்க்கும் அவசியம் இல்லாமலே பரிச்சயமான அந்த தீண்டல் புரிய, “சுமி...” என்றான் நம்ப முடியாத குரலில்.

   

“நான் தான் உங்க கூடவே இருக்கேனே, அப்புறம் எதுக்கு இந்த அழுகை? என் கமல் அழுதா நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்??? எனக்கும் அழுகை வரும்... நீங்க இப்படி அழுதா மத்தவங்களை யார் சரி செய்றது?”

   

சுமித்ராவின் குரல் புரிந்து துள்ளிக் குதித்த மனதுடன் அவன் அவளை பார்க்க அசைய, எதிலோ நச்சென தலையை இடித்துக் கொண்டான்.

   

வலியை பற்றிக் கவலைப் படாமல் மனைவியை தேடினான் கமல். அவளை எங்கும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.