(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

காணோம்.

   

கண்களை நன்றாக திறந்து சுற்றிப் பார்த்தான். 

   

மூடி இருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே காலை வெயில் ஒளியை நிறைத்துக் கொண்டிருந்தது.

   

கமலுக்கு மெல்ல விபரம் புரிந்தது!

   

அழுது அழுது ஓய்ந்து போய் அவன் எப்போதோ தூங்கி போயிருக்க வேண்டும்.

   

பக்கத்தில் இருந்த டேபிளில் தான் இப்போது தலையை இடித்துக் கொண்டிருக்கிறான்...

   

சுமி பேசியதாக அவன் நினைத்தது கனவில் நடந்ததா??? 

   

மனம் முழுக்க ஏமாற்றம் பரவியது!

   

மீண்டும் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. ஆனாலும் உடனேயே கண்களை துடைத்துக் கொண்டான்.

   

கனவில் என்றாலும் சுமி சொன்னது சரி தான்... அவன் அழுதால் அவளுக்கு பிடிக்காது.

   

சுமி இங்கேயே அவனுடனே தான் இருக்கிறாள்! அவனை விட்டு விலகி செல்ல அவளாலும் முடியாது...!

   

மனம் தெளிவாகவும், வேறு எதை பற்றியும் யோசிக்காமல் வேக வேகமாக அலுவலகம் செல்ல கிளம்பினான்.

   

தயாராகி அவன் கீழிறங்கி செல்ல அங்கிருந்த உறவினர் அனைவருமே அவனை வித்தியாசமாக பார்ப்பது அவனுக்கு புரிந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.