Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 24 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மித்ரன் மைத்ரேயியின் முகத்தை கவனிக்கவில்லை. ஆனால், மைத்ரேயியின் பக்கத்தில் இருந்த குஷன் நாற்காலியில் அமர்ந்து பிஸ்னஸ் டைம்ஸ் படித்துக் கொண்டிருந்த ஜெயந்த் கவனித்தான்...
அவன் பிரத்தியேகமாக அந்த இடத்தில் வந்து அமர்ந்து பேப்பர் படிக்க காரணமே மனைவியை சைட் அடிக்கத் தானே...!
மித்ரன் அங்கிருந்து நளினியை தேடி சென்ற உடனே,
“மைத்தி டியர்... என்ன உன் அண்ணனை அப்படி ஒரு லுக் விடுற?” என மனைவியிடம் கேட்டான்...
மித்ரன் போன பக்கமே பார்த்துக் கொண்டிருந்த பார்வையை திருப்பி கணவனை பார்த்த மைத்ரேயியின் விழிகளில் பாராட்டு இருந்தது...!
அதையும் கண்டுக் கொண்ட ஜெயந்த்...
“நான் மைத்ரேயி எனும் புக்கை கரைச்சு குடிச்ச எக்ஸ்பெர்ட் கண்ணா,” என்று பீற்றிக் கொண்டான்...
“ஹையோ போதும் போதும் உங்க அருமை பெருமை... எனக்கே அதெல்லாம் தெரியும்... நீங்க மித்ரனை கவனிச்சீங்களா?”
“ம்ம்ம்... புது டாய்ஸ் வாங்கி தராம பழைய டாய்ஸ் எடுத்து தரேன்னு சொல்றாரே அதை சொல்றீயா? உங்க அண்ணா கஞ்ச பிஸ்னாரியா மாறிட்டார் போலருக்கு...”
“ஆனாலும் உங்களை விட பரவாயில்லை...! நான் சொல்றது அது இல்லை...”
“வேற என்ன டியர்?”