அணிந்திருந்த கலர்ஃபுல் ஃபிராக்கை ரசித்தப் படி அவளை கையில் தூக்கிக் கொண்டான் மித்ரன்...
“நிஷாவோட ஃப்ராக் அழகா இருக்கே,” என்று அவன் சொல்ல,
“பர்த் டே ஃப்ராக்,” என்றாள் நிஷா மகிழ்ச்சி பொங்க...
“பர்த் டேவா??? யாருக்கு பர்த் டே...? நிஷா செல்லதுக்கா??? எனக்கு தெரியாமல் போச்சே... ஹாப்பி பர்த் டே நிஷா...”
நிஷாவை வாழ்த்தியபடி மித்ரன் கைககளை மேலே உயர்த்தி அவளை உயரமாக தூக்க, அதை ரசித்து கிளுக்கி சிரித்தாள் நிஷா..
“தாங்க்ஸ்ஸ்ஸ் மித்ரன்...”
“தேங்க்ஸ் மட்டும் தானா??? கேக், சாக்லேட் எல்லாம் இல்லையா?”
“இக்கே... அங்க ருக்கு...”
நிஷா கை காட்டிய பக்கம் இருந்த டைனிங் ஹாலை பார்த்த மித்ரன், அங்கே மைத்ரேயி, ஜெயந்த், மோனிக்கா, நளினி, சரண்யா அனைவரும் இருப்பதை கவனித்து அந்த பக்கமாக சென்றான்...
உற்றுக் கவனிக்காமல் பொதுவாக பார்த்ததிலேயே சரண்யாவின் முகம் சரியில்லை என்று அவனுக்கு தோன்றியது...
நிஷாவின் பிறந்தநாள் அன்று சரண்யா ஏன் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறாள்???
மனதில் ஓடிய கேள்வியுடனே, “என்ன எல்லோரும் எனக்காக வெயிட் செய்ற மாதிரி நிக்குறீங்க??? என்ன ஆச்சு???” என்று பொதுப்படையாக கேட்டு வைத்தான்.