“நிஜமாவே உனக்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கோம்ண்ணா,” என்றாள் மைத்ரேயி!
“எனக்கா??? எதுக்கு மைத்தி வெயிட் செய்துட்டு இருந்தீங்க???”
“இன்றைய பர்த்டே பிரின்சஸ் நீ வந்தா தான் கேக் கட் செய்வேன்னு சொல்லி ஒரே அடம்... சரண்யா எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கலை...”
மித்ரன் சரண்யாவின் பக்கம் பார்த்தான்...
அவனின் பார்வை புரிந்து கஷ்டப்பட்டு முகத்தை அமைதியாக காட்ட முயன்றாலும் சரண்யாவின் கண்கள் அவனுக்கு உண்மையை எடுத்து சொல்லியது...
சரண்யாவிற்கு நிஷா அப்படி சொன்னது பிடிக்கவில்லை போலும்...
ஆனால் அவன் என்ன செய்ய முடியும்? சரண்யாவை தொல்லை செய்யாமல் விலகி இருக்க தான் அவன் முயல்கிறான்... அதற்காக நிஷாவை விட்டு தள்ளி இருக்க முடியுமா?
ஹுஹும்... வாய்ப்பே இல்லை...!
எனவே சரண்யாவிற்கு பிடிக்காமல் போனதை பற்றி அப்போதைக்கு கவலைப் படாமல், மீண்டும் நிஷாவிடம் செல்லம் கொஞ்சினான்...
“நிஷா செல்லம் தான் பெஸ்ட் செல்லம்... எனக்காக யாருமே இப்படி கேக் கட் பண்ணாம வெயிட் செய்ததில்லை... இந்த மைத்தி ஆன்ட்டி சின்ன வயசுல என் பர்த்டேக்கு நான் டென்னிஸ் க்ளாஸ் போயிட்டு வரதுக்குள்ளே என் கேக்கையும் கட் செய்து, எடுத்தும் சாப்பிட்டுட்டா... நீ தான் செல்லம் ஸ்வீட்...”
“உங்க கேக்குக்கும் அந்த கதி தானா மித்ரன்??” என்று கிடைத்த சந்தர்ப்பத்தில் ஜெயந்த் மனைவியை வார, மைத்ரேயி இருவருக்கும் பதில் சொல்லாமல் நிஷாவிடம்,