“அவன் நிஷாவை கைல தூக்கிட்டு வந்தான்...”
“ஆமாம்... அதுல என்ன இருக்கு?”
“சிங்கப்பூர்ல இருந்து அண்ணன் வந்து கொஞ்சம் மாசம் ஆச்சு தானே?”
“ஆமாம்...”
“இது வரைக்கும் அவன் மோனியை தூக்கி பார்த்திருக்கீங்களா?”
யோசித்து பார்த்த ஜெயந்த, “ஹ்ம்ம்... இல்லையே,” என்று தலை அசைத்தான்...
“அதை தான் சொல்றேன்... மித்ரன் குழந்தைங்க கிட்ட ஒன்னு இரண்டு வார்த்தை பேசுவான்... செல்லம் கொஞ்சுவான்... ஆனால் தூக்கி எல்லாம் வைக்க மாட்டான்... சின்ன வயசில இருந்தே அப்படி தான்... குட்டீஸ் கிட்ட இருந்து நாலு அடி தள்ளி தான் நிற்பான்... எனக்கு தெரிஞ்சு முதல் முதலா இப்போ தான் அவன் ஒரு குழந்தையை கையில தூக்கி வச்சிருக்கான்...”
“ஓ...! இன்ட்ரஸ்டிங்...! ஏன் இந்த மாற்றம்னு நினைக்குற?”
மைத்ரேயி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்...
மைத்ரேயியும் ஜெயந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...!
✽✽✽
நாட்கள் வாரங்களாகி... வாரங்கள் மாதங்களாகி, ஓடிக் கொண்டே இருந்தது...
சரண்யாவும், நிஷாவும் மைத்ரேயியின் வீட்டிற்கு குடி வந்து ஆறு மாதங்கள் ஓடிச் சென்றிருந்தது...