(Reading time: 6 - 11 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

மித்ரன் இப்போதும் முடிந்த அளவு சரண்யாவின் பார்வையில் படாமல் ஒதுங்கியே இருந்தான்... ஆனால் நிஷாவிற்கு மட்டும் மிக மிக நெருங்கிய நண்பனாக மாறிப் போயிருந்தான்...

   

வார இறுதி நாட்களில் மோனிக்காவுடன் விளையாட வரும் நிஷா, முதலில் நேராக மித்ரனை தான் தேடி வருவாள்.

   

“மித்ரன்,” எனும் அவளின் மழலை கொஞ்சும் அழைப்பை கேட்டாலே அவனுக்கு இனிக்கும்.

   

நிஷாவை தூக்கி வைத்துக் கொண்டு அந்த வாரம் நடந்த கதைகளை கேட்பான்...

   

மற்றவர்களிடம் ஒரு வினாடி தாமதத்தைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் காச் மூச்சென்று கத்துபவன், நிஷா குழந்தைத்தனம் மிளிர இழுத்து, இழுத்து பேசுவதை பொறுமையுடன் கேட்பான்...

   

அவளுடைய ஃப்ரென்ட் கரிஷ்மா ஷார்ப்னர் தொலைத்தது, ஹேமந்தின் கையை நரேன் கிள்ளியது என நிஷாவின் அனைத்து விதமான ஸ்கூல் கதைகளும் அவனுக்கும் தெரியும்...!

   

எப்போதும் போல அன்றும் இரவு எட்டரை மணி அளவில் வீட்டிற்கு வந்தவன், நிஷா கண்ணில் படுகிறாளா என அவளின் வீட்டின் பக்கம் பார்த்தான்... 

   

வழக்கத்திற்கு மாறாக அங்கே வீட்டினுள் விளக்கு வெளிச்சம் எதுவுமில்லை... வெளியே இருக்கும் ஒற்றை விளக்கு மட்டும் எரிந்துக் கொண்டிருந்தது...

   

சரண்யா நிஷாவை எங்கேயாவது அழைத்து சென்றிருக்கிறாளா???

   

யோசனையுடன் வீட்டிற்குள் சென்றவனை, “மித்ரன்,” என்ற அழைப்புடன், வீட்டில் எங்கிருந்தோ ஓடி வந்து கட்டிக் கொண்டாள் நிஷா...

   

மற்ற நாட்களைப் போல காட்டன் ஃப்ராக் அணியாமல் கொஞ்சம் கிராண்டாக அவள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.