(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

அவன் வேற டைமாச்சுன்னு சொல்லிட்டு இருக்கான்,” என சாரதா கொஞ்சலாக கேட்கவும், மறுக்க முடியாமல் டம்ப்ளரில் தண்ணீர் எடுத்துச் சென்றாள் ரோஹினி.

  

‘ஹ்க்... ஹ்க்...”

  

விக்கலுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அஜயின் முன் டம்பளரை வைத்தாள்.

  

ரோஹினியை பார்த்த படி டம்ப்ளரை அவன் கையில் எடுக்கவும்... ரோஹினி சமையலறை செல்ல திரும்பினாள்...

  

“ரோ... ரோ... ரோஹினி... ஹ்க்... அப்படி என்ன அவசரம்?”

  

மெல்லியக் குரலில் அஜய் கேட்கவும், அவன் எதை பற்றி பேசப் போகிறான் என்பதை ரோஹினியின் உள்ளுணர்வு முன் கூட்டியே எடுத்துச் சொன்னது!

  

நிற்காமல் சென்றால் என்ன சொல்வானோ என்றுத் தோன்றவும், அசையாமல் நின்றாள்...

  

“நீ யாரோ என்னவோன்னு நினைச்சேன்... பெரிய பியூட்டிஷியன்னு இன்னைக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்... தாடி மீசை எல்லாம் சூப்பரா இருந்துச்சு...”

  

“அது... அது....”

  

“இந்த மாதிரி திருட்டுத் தனம் எல்லாம் செஞ்சுட்டு அம்மா பின்னாடி நல்ல பொண்ணு மாதிரி ஒளிஞ்சு நடிக்குற???”

  

“அப்படி.. எல்லாம்... இல்லை... அம்மா.... எனக்கு நல்ல ஃப்ரென்ட்... நெருங்கிய தோழி...”

  

"ஹைய! இதப் பாருடா!!!! அவ்வளவு பெஸ்ட் ஃப்ரென்ட்ன்னா விடியக் காலையில என் ரூமுல வந்து நீ என்ன செய்துட்டு இருந்தேன்னும் அம்மாட்ட சொல்ல வேண்டியது தானே?"

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.