(Reading time: 7 - 13 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

சித்ரா இதை எதிர்பார்த்திருந்திருக்கவில்லை! அவள் கண்ணிற்கு காலேஜ் சென்றாலும் புவனேஸ்வரி அப்போதும் சிறுக் குழந்தையாகவே தெரிந்தாள்!

  

அதற்காக சித்ரா கண் மண் தெரியாமல் கோபப் படவும் இல்லை. புவனேஸ்வரிக்கு வந்திருப்பது காதல் இல்லை கவர்ச்சி என்று நம்பினாள்.

  

ராஜேஸ்வரியிடம் பரமசிவத்திடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி விட்டு, புவனேஸ்வரியின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

  

ராஜேஸ்வரி சொன்னது உண்மை என்பதை கண்டுப்பிடிக்க சித்ராவிற்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. புவனேஸ்வரி வரும் வேளைகளில் ஜெய்யும் பக்கத்து வீட்டில் இருந்து இவர்கள் வீடு பக்கம் வருவதையும், இருவரின் பார்வை பரிமாற்றங்களையும் கவனித்தாள்.

  

எப்படி இது எதையும் இத்தனை நாட்கள் கவனிக்காமல் வளர விட்டாள்? தன்னைத் தானே முதலில் திட்டிக் கொண்டவள், புவனேஸ்வரியிடம் நேரடியாக பேசி விடும் முடிவுக்கு வந்தாள்.

  

✽✽✽

  

புவனேஸ்வரி கையிலிருந்த பெட்டியை மீண்டும் அது இருந்த இடத்திலேயே மறைத்து வைத்தாள். லைட்டை அணைத்து விட்டு படுக்கையில் படுத்தாள். தூக்கம் வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அவளுக்கு விருப்பம் இருந்ததோ இல்லையோ பழைய நினைவுகள் தொடர்ந்தது.

  

“பாப்பா, என்னடா அத்தை இப்படி கேட்குறான்னு நினைக்காதே. நான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.