உனக்கு அம்மா போல, அதான் கேட்குறேன்!” சித்ரா பில்ட்-அப் கொடுத்து பேச ஆரம்பித்த உடன் என்ன விஷயம் என்று தெரியாமலே அத்தையை பாசத்துடன் கட்டிக் கொண்டாள் புவனேஸ்வரி.
“எதுவா இருந்தாலும் கேளுங்க அத்தை. நீங்க சொன்னா நான் எதுவும் நினைக்க மாட்டேன்,” புவனேஸ்வரி மனதில் இருந்ததை சொன்னாள்.
“நீயும், பக்கத்துல வேலை செய்ற அந்த ஜெய்யும்,“ சித்ரா முழுவதும் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் புவனேஸ்வரி முகம் நிறம் மாறி உண்மையை போட்டு உடைத்தது.
“எப்படி அத்தை கண்டுப்பிடிச்சீங்க? நானே உங்க கிட்ட எப்படியாவது சொல்லனும்னு இருந்தேன். உங்க கிட்ட சொல்லாம நான் எதையுமே மறைச்சது கிடையாது!” அப்பாவித்தனம் மின்ன பேசிய அண்ணன் மகளை அன்புடன் அணைத்துக் கொண்டாள் சித்ரா.
புரியாத வயதில் தவறான முடிவு எடுத்திருக்கும் அண்ணன் மகளுக்கு புரிய வைப்பது தன் கடமை என்று சித்ரா நினைத்தாள். அதனால் தொடர்ந்து பொறுமையாக பேசினாள்.
“நீ சின்னக் குழந்தை பாப்பா. இப்போ இந்த காதல், கல்யாணம் பத்தின யோசனை எல்லாம் தேவையா?”
“ஜெய் வேலைக்கு போய் செட்டிலான அப்புறம் தான் அத்தை கல்யாணம். ஜெய் நிறைய ப்ளான் வச்சிருக்கான். படிச்சுட்டு, முதல்ல கிடைக்குற வேலையை எடுத்து செய்வான். எக்ஸ்பீரியன்ஸ் வந்தப்புறம் ஃபாரின்ல வேலை ட்ரை செய்யப் போறான்.” பெருமை மின்ன பேசியவளை யோசனையுடன் கவனித்தாள் சித்ரா.
“நீ சொல்றது சரி பாப்பா. ஆனா நாம நினைக்குறது எல்லாம் அப்படியே