(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“பாட்டி... அப்பா...” விசும்பலுடன் பேசினாள் ரேஷ்மி!

   

“புரியுது கண்ணா... எனக்கும் கஷ்டமா தான் இருக்கு...”

   

“இல்ல பாட்டி... அப்பா...” தொடர்ந்து பேச முடியாமல் தொண்டை அடைக்கவும், கையிலிருந்த டைரியை காட்டினாள் ரேஷ்மி!

   

புரியாமல் பார்த்த பூங்கோதையிடம், அழுகை கலந்த கேவலுடன் தான் படித்து தெரிந்துக் கொண்டதை மேலோட்டமாக ஒப்பித்தாள்.

   

மற்றபடி தன் அப்பா எழுதி இருந்த அந்த டைரியை மற்றவர்கள் யாரிடமும் கொடுத்து படிக்க சொல்ல ரேஷ்மிக்கு மனம் வரவில்லை. அது அவளுக்கு மட்டுமே சொந்தமான பொக்கிஷம்!!!

   

ஷ்யாம் - பூங்கோதை – ரோஷனி – கவிதா – விமல் – ஹேமா – ராகுல் என மெல்ல அனைவருக்கும் கமல் பற்றியும், அவன் சுமித்ரா மீது வைத்திருந்த அன்பு பற்றியும், அவன் ஏன் அப்படி இருந்தான், அவனின் உண்மையான குணம் என்ன என்று முழுக்க தெரிய வந்தது.

   

“என் பிள்ளையை நானே சரியா புரிஞ்சுக்காம இருந்திருக்கேனே...” பூங்கோதை வாய் விட்டு புலம்ப, மற்றவர்கள் அதையே மனதினுள் நினைத்தார்கள்.

   

கவிதாவிற்கும், விமலுக்கும் அண்ணனை புரிந்துக் கொள்ளாமல் திட்டி விட்டோமே என்ற குற்ற உணர்வு எழுந்தது...

   

ரோஷனியின் மனதை பல வருடங்களாக குழப்பிக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது தெளிவாகி இருந்தது. கமலை பற்றி முழுவதுமாக தெரியாத போதே அவன் மீது பெரிய அளவில் மரியாதை வைத்திருந்தவளுக்கு, இப்போது அந்த மரியாதை மேலும் பல மடங்கு அதிகமாகி போனது.

   

முன்பே கமலுடன் பேசி, அவனுக்கு கவுன்சலிங் உதவி வழங்கி இருக்க வேண்டுமோ என்று ஹேமா யோசித்துக் கொண்டிருந்தாள்... சுமித்ரா எந்த அளவிற்கு கமலை தெரிந்து 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.