(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

வைத்திருந்திருக்கிறாள் என்ற எண்ணத்தின் காரணமாக எப்போதும் போல வருத்தமும், குற்ற உணர்வும் கூட அவளுக்குள் எழுந்தது!

   

ஒவ்வொருவரும் ஓவ்வொரு விதத்தில் யோசித்து, குற்ற உணர்வும், யோசனையுமாக இருக்க, ராகுல் அவர்கள் அனைவரையும் தேற்றினான்.

   

“நீங்க எல்லோரும் இப்படி குழம்ப வேண்டிய அவசியமே இல்லை... நீங்க கமல் மேல அன்பா இருக்கலை, புரிஞ்சுக்கலைங்குறதை விட, அவர் அப்படி இருக்க தான் விரும்பினார் என்பது தான் உண்மை... அவரோட இழப்பு பெருசு.. அதுக் கூடவே இதை எல்லாம் யோசிச்சு வருத்தப் படாம, இப்போவாவது அவரை புரிஞ்சிக்கிட்டோமேன்னு யோசிப்போம்... பிறப்பும், இறப்பும், நம்ம கையில இல்லை... இதை எல்லாம் நாம தாங்க தான் வேணும்...”

   

ஷ்யாமும், ராகுலும் தங்களின் பேச்சினால் மெல்ல, மெல்ல அனைவரையும் தேற்றினார்கள்...

   

✽✽✽

   

நாட்கள் செல்ல... கமலுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் நல்ல விதமாக நடைபெற்றது.

   

ரேஷ்மி தன் பாட்டி வீட்டில் இருந்து தன்னுடைய புதிய வீடான ஷ்யாம் வீட்டை நோக்கி காரில் பயணமானாள்...

   

அவளை அழைத்து செல்ல ஷ்யாம் மட்டுமல்லாமல் ஹேமா, ராகுல், ராகவி என அனைவருமே வந்திருந்தார்கள்.

   

ராகுல் காரை ஓட்ட, ஹேமா முன் சீட்டில் அவன் அருகே அமர்ந்திருந்தாள்.

   

பின் சீட்டில், ஷ்யாமின் அருகே அமர்ந்திருந்த ரேஷ்மிக்கு, அம்மா, அப்பாவின் நினைவு வந்தது.

   

அவர்கள் இருவர் இடையே இருந்தது என்ன மாதிரியான அன்பு.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.