ஒருவருக்கொருவர் புரிந்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து, நீ தான் என் உலகம் என்று வாழ்ந்து...
“என்ன ரேஷூ அமைதியா வர?” ஹேமாவின் கேள்வி ரேஷ்மியை அவளின் யோசனையில் இருந்து வெளியே அழைத்து வந்தது.
“அம்மா, அப்பாவை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன் ஆன்ட்டி... இரண்டு பேரும் கொஞ்சம் வருஷம் தான் ஒன்னா வாழ்ந்தாங்க... ஆனாலும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க...”
“ம்ம்ம்.. உன் அப்பா மாதிரி மனுஷங்களை பார்க்குறது ரொம்பவே கஷ்டம் தான்... மனைவின்னு ஒருத்தி பக்கத்துல இருக்கும் போதே வேற பொண்ணுங்களை பார்க்குறவங்க நிறைய பேர் இருக்குறாங்க... ஆனால் சுமி இறந்து இவ்வளவு வருஷம் ஆன பிறகும் அவளை தவிர வேற நினைப்பே இல்லாம, அவளுக்கு கொடுத்த ப்ராமிஸ்க்காக வாழ்ந்து...”
ஹேமா பேசிக் கொண்டே போக, குறுக்கிட்டு,
“வாட் அ வேஸ்ட் ஆஃப் லைஃப்,” என்றாள் ராகவி கிண்டலாக.
திரும்பி மகளை பார்த்து முறைத்த ஹேமா,
“ராகவி! என்ன பேசுற? எதுல எல்லாம் கேலி பேச்சுன்னு இல்லை?” என கோபமாக பொரிந்து தள்ளினாள்.
“ப்ச்... விடுங்க ஆன்ட்டி... ராகவி சின்ன பொண்ணு... இதெல்லாம் புரிஞ்சுக்குற வயசு இல்லை... நானே ஷ்யாமை சந்திக்காம இருந்திருந்தா அப்பா எழுதி இருக்குறதை புரிஞ்சிருப்பேனோ என்னவோ,” என்றாள் ரேஷ்மி!
அவளின் அருகே இருந்த ஷ்யாம், மனைவியின் கையை தன்னுடன் சேர்த்து கோர்த்துக்
Vanakam...
By this story you give new definition for unconditional love.
This is story really amazing...
Thank you