கொண்டான்.
தடை செய்யாமல் கணவனின் செய்கையை அனுமதித்த ரேஷ்மி, மற்றவர்களுக்கு உறுத்தாத விதத்தில் அவனின் தோளில் பாதி சாய்ந்துக் கொண்டாள்.
சொர்க்கம் என்று ஒன்று இருக்குமா??? அங்கே, அப்பா, அம்மாவை இந்நேரம் சந்தித்திருப்பாரா??
அவளின் மனதில் ஓடிய எண்ணமே காட்சியானது போல காரின் ஜன்னல் வழியே தெரிந்த மேகத்தின் நடுவே சுமித்ரா மற்றும் கமலின் உருவங்கள் புகை வடிவமாக அவளுக்கு தெரிந்தது...
இருவரும் கைகளை பற்றியபடி, அருகருகே நின்று அவளை நோக்கி புன்னகைப்பது போல அவளுக்கு தோன்றியது...
டைரியில் அப்பா எழுதி இருந்த கடைசி வார்த்தைகள் நினைவுக்கு வந்து... அவளுக்கு மெய் சிலிர்த்தது...
தந்தை, தாயின் ஆசி கிடைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அருகே இருந்த கணவனிடம் இன்னமும் ஒண்டிக் கொண்டாள்.
என்ன ஏது என்று புரியா விட்டாலும், மனைவியின் தோளில் கை வைத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் ஷ்யாம்...
“எப்போ அமெரிக்கா போறதுன்னு ப்ளான் செய்துட்டீங்களா???”
ஹேமாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஷ்யாமும், ரேஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பின், அம்மா, அப்பாவின் உருவம் தெரிந்த இடத்தை மீண்டும் பார்த்தாள் ரேஷ்மி... அங்கே இப்போது மேகங்களை தவிர வேறு ஒன்றும் கண்ணில் படவில்லை...
Vanakam...
By this story you give new definition for unconditional love.
This is story really amazing...
Thank you