(Reading time: 39 - 77 minutes)

காதிக்கு கூட கோபம் வரும். ஆனா, நிரு இத்தனை வருஷத்தில் கோபப்பட்டதே கிடையாதே!” அவள்  மனம்  நெகிழ்ந்தது.

‘தனக்காக’ என அவளுக்கு அக்கறை காட்டுவதில் குடும்பத்தாரை அடுத்து தோழிகள் மற்றும் நிரஞ்சன். இதற்கு முன் வரை காதியின் நண்பன் என்று இருந்த நிரஞ்சன், சந்தியாவின் வருகையில் மது  உருவாக்கிய நட்பு வட்டத்திற்கு முன்னேறியிருந்தான்.

அவள் பேசி முடித்த பின், விளக்கை அணைத்து விட்டு சந்தியா வர, அனைவரும் படுக்க தயாராக, மனதிற்குள் பரவிய நிம்மதியில் சிறிது நேரம் புரண்டு புரண்டு படுத்த மது  சற்று நேரத்தில் கண் அயர்ந்தாள்…

ற்று முன்னர், மாலை பொழுது தருணை ஸ்ட்ராலரில் போட்டு தங்கள் குடியிருப்பு பகுதியினுள் நடந்து கொண்டிருந்த ஸ்ரீமாவின் மனதில் பல யோசனைகள்....

”சந்தியா விவரம் பற்றி யாரிடம் பேசுவது? கணவரிடம் தங்கையை பற்றி எப்படி சொல்வது….இவர் கல்லாரி மாணவர்களையே ஒழுக்கம் ஒழுக்கம்ன்னு  உருட்டி மிரட்டுவார்.. இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாரோ??”

என்று, பிறந்த வீட்டு விஷயத்தை கணவனிடம் எடுத்த எடுப்பில் போட்டு உடைக்க தயங்கினாள். பின், “அம்மாவுக்கு தெரிந்தால்  வருத்தப்பட்டு உடல்நிலை மோசமாகி விடும். அப்பாவோ  ஆத்திரப்படுவார். விந்தியா ஓட்டை வாய்...அப்படியே அப்பாவிடம் சொல்லி விடுவாள். “ என்று நினைத்தவள் பூமாவிடம் சொல்ல தீர்மானித்து அவளை போனில் அழைத்தாள்.

அன்று கோவிலுக்கு செல்ல சற்று சீக்கிரமாகவே விழித்து கிளம்பிக் கொண்டிருந்தாள் பூமா.  “பாப்பூ உன்னை  கோவில் கோவில்லா சுத்த விட்டாளே அந்த வாலு” தலைய தலைய பட்டு  புடவையில் ஜொலித்த மனைவியை ரசித்துக் கொண்டே, அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த குணா அவளருகில் வந்தான்.

பின்னாலிருந்து அவளை அணைத்து, “எனக்கு உன்னை மாதிரி அழகா ஒரு பொண்ணு வேணும்..” ரகசிய குரலில் அவள் காதோடு சொல்லிக் கொண்டே கன்னத்தில் சூடான முத்தத்தை பதித்தான்.

அவன் முத்தம் இதமாக்கினாலும் அவன் கோரிக்கை மனத்தை கனமாக்கியது… பெண் குழந்தை என்றதும், ஈன்று எடுத்த மரித்துப் போன குழந்தை கண் முன் வர, நாடி நரம்பெல்லாம் சில்லிட்டு, மார்பகங்கள் கனத்து பாலை சுரப்பது போன்ற உணர்வு கொடுக்க விரக்தியில், “என்  அழகான பொண்ணை தான் முருகன் உயிரில்லாம குடுத்தானே! அவ அழு குரலை கேக்கிற பாக்கியம்  இல்லாத பாவியாகிட்டேனே குணா…” விரக்தி தன் மீதே பாவப் பட வைத்தது! கவலையில் அவன்புறம் திரும்பி அவன் மார்பில் சாய்ந்த பூமா, “அந்த முகம் இன்னும் கண்ணுக்குள்ளே  நிக்குதே...அவளை நினைச்சாலே...நெஞ்சில பால் சுரக்குது குணா...” தேய்ந்த குரலில் சொல்லிய படி கண்ணீர் மல்க கதறி அழ ஆரம்பித்தாள். அதைக் கண்டதும் கலங்கின குணாவின்  கண்கள், அதை வெளிக் காட்டாது, அவளை அணைத்துக் கொண்டு, அவள் முடியை வருடியவாறு  தொண்டையை செருமி,

“எதுக்கு அழுகுற? அவளே தான் மறுபடியும் வரப்போறா…. அவ வந்துட்டா உன்னை கண்டுக்கவே மாட்டேன் பாப்பூ. இந்த முத்தம் எல்லாம் அவளுக்கு போயிடும். கிடைக்கிறப்போவே  வாங்கி ஸ்டாக் வைத்துக்கோ”, ஆறுதலை காதலாய் வடித்து, மென்மையாக அவள் முகவாயை தன்புறம் திருப்பி நிமிர்த்தி அவள் இதழ்களில் முத்தமிட்டான். அந்த கணத்தில், தாய்மை உணர்வு பெண்மை உணர்வாய்  உருமாற அவன் இதழ்களில் இருந்து மெல்ல தன்னை விடுவித்த பூமா,

“கோவிலுக்கு கிளம்புறேன். இப்போ தான் இந்த வேலை பார்க்கணுமா…”, அவனை பார்த்து போலியாக அலுத்துக் கொண்டாள்.

“அம்மாடி…இது டீம் வொர்க். சும்மா ஒரு ஆளை மட்டும் குறை சொல்லக் கூடாது. ஒரு பைனல் டச் குடுத்துட்டு ஆபிஸ்க்கு கிளம்புறேன்” என்று அவன் சொல்லும் பொழுதே போனில் அழைப்பு மணி அடிக்க,  படுக்கைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த போனை இரு எட்டுக்களில் எடுத்த குணா அழைப்பு எண்ணைப் பார்த்து,

“உன் ஜெராக்ஸ் பேசுது பாப்பூ… இந்தா..நீங்க ஆரம்பிச்சா டிநகர்ல உள்ள போத்தீஸ் ல இருந்து சரவணா ஸ்டோர்ஸ் வரைக்கும் எல்லா கடைக்கும் டெலி ஷாப்பிங் பண்ணுவீங்க. நான் ஆபிஸ் கிளம்புறேன். பை”  என்று போனை அவளிடம் கொடுத்து விட்டு கிளம்பினான்.

பேசிக் கொண்டே குணாவை  பின் தொடர்ந்து அவனை  வழியனுப்பி விட்டு கதவை தாளிட்டு திரும்பியவளிடம் ஸ்ரீமா,

“சந்தியா பத்தி ஒன்னு சொல்லணும்” என ஆரம்பித்து நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் ஸ்ரீமா.

“என்ன ?” என கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்தவளின் எதிரில்  இருந்த பீன் பேக்கில் அமர்ந்து சரண் ‘எக்ஸ்பாக்ஸ்’  விளையாட்டில்  மூழ்கி இருந்தான்.

பேசிக் கொண்டிருக்கும் போதே திடீர் என வெடித்த பூமா, “அவனுக்கு என்ன தைரியம் இருந்தா இந்த வேலை பாப்பான்? கேக்குறதுக்கு ஆளு இல்லைன்னு நினைச்சிட்டானா? எங்க வீட்டுக்கு வந்துப்போ   நல்லவனாட்டம் நடிச்சான். ராஸ்கல். பணக்காரக்  கொழுப்பு! இவன் லிப்ஸ்டிக் வாங்கி குடுக்க என் தங்கச்சி தான் கிடைத்தாளா? “ பட படப்பில் எரிமலையாய் வெடித்தாள்.

எதிர்முனையில் ஸ்ரீமா ஏதோ சொல்ல, அதை கவனிக்க ஒரு நொடி அமைதியானவள், “என்ன சந்து அழுதாளா?” என மேலும் அதிர்ச்சியுற்றவளாய் தானே தொடர்ந்தாள்...அழுகையுடன்…”நான் கல்யாணமாகி வந்தப்போ கூட அவ அழுத்து இல்லையே...இவன் ஏதாவது அவளை டார்ச்சர் பண்ணியிருப்பானா ? அதை அந்த பிள்ளை  வெளிய சொல்ல முடியாம தவிக்குதா? அய்யோ சந்து”, தவிப்பு அழுகையாய் பொங்கி வழிந்தது.

துவரை விளையாட்டில் மூழ்கி இருந்தாலும், பூமாவின் பேச்சு தானாக சரண் காதில் வந்து விழுந்தது. காதுகள், இமைகள் அகற்றப்பட்ட இன்னொரு  ஜோடி கண்கள் அன்றோ! சந்தியாவை பற்றிய பேச்சு  என்றதும் அதில் கவனம் காட்டிக் கொண்டிருந்தான்  சரண், மறைமுகமாக! பூமா அழுததும், விளையாட்டை நிறுத்தி விட்டு அவள் பக்கம் திரும்பினான்.

அதே நேரம், தங்கை பாசத்தில் அழுதவளுக்கு கார்த்திக் மீது ஆத்திரம் பொங்க, கண்ணீரை துடைத்து விட்டு, “தட்டி கேட்க ஆள் இல்லைன்னு நினைக்கிறானா? அவனை நாலு கேள்வி கேட்க்காம  விட மாட்டேன். நீ விடு ஸ்ரீ. அவன் எங்க இருக்கான்னு எனக்கு தெரியும். அவனை இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்றேன் பாரு”, ஆவேசமாக சொல்லி விட்டு போனை வைக்க போனவள் அப்பொழுது தான் சரண் முன் உணர்ச்சிபூர்வமாக பேசியதை உணர்ந்தாள்.

“பூமா மந்திக்கு  யாரு லிப்ஸ்டிக் குடுத்தது?”, நேரடியாக கேட்டான், ஆராயும் பார்வையுடன்.

“எல்லாத்தையும் கேட்டுட்டானா ?” என பூமா ஒரு நொடி அதிர்ந்தாள். பொதுவாக அவளின் சொந்த விஷயங்களில் சரண் தலையிட மாட்டான்  என்று அவள் அறிந்ததே!

ஒரு நொடி திகைத்தாலும் எல்லாத்தையும் அவனிடம் எல்லாத்தையும் கொட்டி விட வேண்டும் போல இருந்தது.

“அது... அவங்க பாஸ்…. அவளுக்கு கிப்ட் பண்ணிட்டு உனக்கு நான் என்ன உறவுன்னு கேட்டிருக்கான், ராஸ்கல்! என்ன கொழுப்பு? இவனை எல்லாம்” சினத்தில் சிவந்தவள், மறுபடியும் கார்த்திக்கை திட்ட ஆரம்பித்தாள்.

சரண் “அய்யோ... பூமா“ சொல்லிவிட்டு லேசாக சிரித்தான்.

“என்ன சரண்?”, எரிச்சலாகி கேட்டாள் பூமா.

“நேத்து தான் அவனை அப்படியே மவுன்ட் எவரெஸ்ட்ல தூக்கி வைச்சு பெருமை அடிச்சீங்க… இன்னைக்கு அப்படியே அதல பாதாளத்தில் தள்ளி விடுறீங்களே! நேற்று இல்லாத மாற்றம் என்னது?” கிண்டலாக வினவினான்.

“நடிச்சிருக்கான் சரண். எங்க  சந்துவை ஏமாத்த ஏதோ திட்டம் போட்டிருக்கான். அவ இப்படி எல்லாம் அழ மாட்டா...ஏதோ செய்து வைத்துட்டானோன்னு பயமா இருக்கு” பதற்றத்துடன் சொன்னாள்.

“மூச்சுக்கு முன்னூறு தடவை சைக்காலஜி படிச்சிருக்கேன் சொன்னா மட்டும் போதாது! நீங்க உணர்ச்சி வசப்பட்டீங்கன்னா, ஒன்னும் தோணாது. கூல் டவுன் அண்ட் காம் டவுன். நிதானமா யோசிங்க. நீங்க பேசுறதை கேட்டேன். எனக்கு தெரிஞ்ச சந்தியாவை பத்தி உங்ககிட்ட சொல்லிடுறேன்.“ என்றவன் பூமாவை சோபாவில் அமரச் சொல்லி, பீன் பேக்கில் அவளை பார்த்து அமர்ந்து கொண்டு,

“மந்தி உலகம் தெரியாத அப்பாவி கிடையாது. இந்த வயசுல ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து சேரிட்டி நடத்துறா…சாதாரண விஷயமில்ல! எவ்வளோ மன முதிர்ச்சி வேணும்? இது என்ன, நேஹாகிட்ட கேட்டு பாருங்க, அவளை மாதிரி ஸ்ட்ராங்  பெர்சனாலிட்டிய  பார்க்கவே  முடியாதுன்னு சொல்லுவா அந்த அளவுக்கு அவளுக்கு ஊக்கம் கொடுத்தவ. அதனால, நீங்க அனாவசியமா பயப்படாம ரிலாக்ஸ்டா யோசிங்க. “ முடிந்த அளவிற்கு அவளை சமாதானப்படுத்தினான்.

அவன் சொல்வது கேட்டு மனத்தை தளர்த்தியவள், கார்த்திக்கின் வருகையின் போது நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள்.

“ஆமா, பால்கனில காயூவை  பாத்தப்ப கூட அவன் உங்களை மாதிரி கடலை வறுக்கலை சரண். முறைச்சிட்டு வந்தான். ஒரு வேளை நல்லவனா இருப்பானோ ?”, பூமா கேட்க,

பீன் பேக்கில் உட்கார்ந்திருந்தவன் வேகமாக, “ஹே ...ஹே ...சந்தடி சாக்குல என்னை போட்டு தள்ளுறீங்க. குரைக்கிற டாக் கடிக்காது.. முறைக்கிற டாக்  மேல தான் டவுட் வரணும்” என்றான் குறும்பாக.

அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்க,  

“ஹூ லெட் தி டாக் அவுட்..” என பாடிக் கொண்டே சரண் கதவை  திறக்க, அங்கே நின்றது ….

முறைக்கிற டாக்...ஹி ஹி… கார்த்திக்!!! சிவந்த கண்களுடன்!

கார்த்திக்கை யாரென்று சரண் கேட்க்கும் முன்னரே,

“சரண்?”, சந்தேகமாய் கேட்டான் கார்த்திக்.

“எஸ் சரண். அண்ட் யு ஆர்…..”

“சந்தியாஸ் பியான்சி” , இறுகிய முகத்துடன் அவனை முறைத்துக் கொண்டே சொன்னான்.

சந்தியாவை கட்டிக் கொள்ள போகிறவன் என்று சொன்னதும் திகைத்த போய், நெற்றியையும் புருவத்தையும்  சுருக்கி, “வாட்?” நம்ப முடியாமல்  நீட்டி முழக்கினான் சரண்…

கார்த்திக்கோ பல்லைக் கடித்துக் கொண்டு “ஐ செட் ஷி இஸ் மைன்”, கர்ஜித்தப்படி, சரணின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “சும்மா எங்க விஷயத்துல மூக்கை நுழைச்சே உன்னை”, கண்களில் கோப அனல் கக்க மிரட்ட, திடீர் தாக்குதலில் பேதலித்துப் போனான் சரண். அவன் சுதாரிக்கும் முன், இடை புகுந்த பூமா,

“என்ன தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து எங்களை மிரட்டுவ? ”, ஆங்காரமாக  சொல்லிக் கொண்டே வந்த பூமாவை பார்த்ததும்  கார்த்திக் கொத்தா பிடித்திருந்த சட்டையை படக்கென விடுவித்தான்.

லேசாக நிலைகுலைந்த சரண் தன்னிலைக்கு வரும் பொழுது, பின்னாலிருந்து வந்த பூமாவின் ஆக்ரோஷக குரலைக் கேட்டு திரும்பிப் பார்க்க அவளோ,

“உன்னை என்ன பண்றேன் பாரு” , கோபமாக சூளுரைத்துக் கொண்டே வேகமாக கையிலிருந்த போனில் அவள் விரல்களால் அழுத்தியது அமெரிக்காவின் அவசர உதவி கோரும்  அழைப்பு எண் 911….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.