(Reading time: 39 - 77 minutes)

மே 25, வெள்ளிக்கிழமை

தாய் வீட்டிற்கு சென்றிருந்த மீரா வெள்ளிக் கிழமை வந்து விட, இரவு விருந்துக்கு சந்தியா குடும்பத்தாரையும் சக்தி குடும்பத்தாரையும் அழைத்தார் சதாசிவம். விருந்து முடிந்ததும் அனைவரும் கிளம்ப, சந்தியாவும் சக்தியும் மதுவுடன் தங்கி விட்டு அடுத்த நாள் ஒன்றாக நகைக் கடைக்கு செல்வதென முடிவாயிற்று. மது அறையில் வழக்கம் போல தங்கள் அரட்டையை முடித்து விட்டு தூங்க துவங்கிய நேரம், சந்தியாவின் செல்போனில் அழைப்பு வந்தது. பாதி தூக்கத்திலே அழைப்பை எடுத்தாள் சந்தியா.

“யேய்...மந்தி உங்க பாஸ் கார்த்திக்கை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டாங்க”

சரண் பரபரப்பான சொல்வதை கேட்டு பதறி அடித்து எழுந்தாள் சந்தியா.

“என்ன சரண் உங்களுக்கு விளையாட வேற விஷயமே கிடைக்கலையா”  தன் படபடப்பை மறைத்த படி சொன்னாள்.

“ஹே, ஐ ஆம் சீரியஸ். நிஜமா தான். அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.”, என்றான் சரண்.

அவன் சொல்ல சொல்ல தலையில் பேரிடி விழுந்தது போல போல அவள் பேச்சு மூச்சின்றி நிற்க, மறுமுனையில் தொடர்ந்தான் சரண்.

“அவன் நீ தான் என் ஆளுன்னு நினைச்சுகிட்டு என்னை வீடு தேடி  அடிக்க வந்துட்டான்...பூமா டென்ஷனாகி போலீஸ்ல சொல்லி”, என்று சரண் சொன்னதும், சந்தியாவிற்கு துக்கம் தொண்டையை அடைக்க... கண்ணீர் பெருக்கெடுத்தது.

“பாவி பூ... அய்யோ கார்த்திக்.. எல்லாம் என்னால தான்” சொல்லிக் கொண்டே குமுறி அழுதாள்.

 சரணிடம் இருந்து படக்கென போனை பிடுங்கிய பூமா, “என்ன கொழுப்பு இருந்தா என் வீட்டுக்கே வந்து என் கொளுந்தனையே  சட்டையை பிடித்து சண்டை போடுவான்? நாகரிகம் தெரியாதவனுக்கு இது தான் சரியான தண்டனை. என் தங்கச்சியை கட்டிக்கப் போறேன்னு எகத்தாளமா பேசுறவனை சும்மா விடச் சொல்றியா? ” காட்டமாய் ஒலித்தது பூமாவின் குரல்.

“அவர் ஒன்னும்..”, என்று சொல்லிக் கேவியவள், “தப்பா சொல்லலை… ” சொல்லி விட்டு மீண்டும் அழுதாள்…

“என்னது? நீ பேசுறது ஒன்னும் கேக்கலை. அப்புறமா பேசு”, எரிச்சலாகி  போனை வைக்கப் போனாள்…

“பூ..பூ.. வச்சிடாத… ப்ளீஸ்...ப்ளீஸ்...சிக்னல் கிடைக்கலைன்னு நினைக்கிறேன். நான் வெளில வந்து பேசுறேன்..” சொல்லிக் கொண்டே,

பால்கனிக்கு ஓடினாள்… அப்பொழுதும் பூமாவிற்கு கேட்கவில்லை…அவள் இணைப்பை துண்டித்து விடக் கூடாது என,

மதுவின்  அறைக் கதவை திறந்து கொண்டு அருகில் இருந்த மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் வேகமாக ஏறினாள்... மாடியை அடைந்ததும், மூச்சிரைக்க,

“இப்போவாது கேக்குதாடி?” பதைபதைப்புடன் கேட்கும் போதே இளைத்தது...

“ம்ம்.. சொல்லு “,  என்றாள் பூமா அலட்சியமாக.

“நாங்க...நாங்க” மூச்சு வாங்கியவள் “லவ் பண்றோம் பூமா… அவரை வெளியே எடுக்க”, என்று மூச்சு வாங்கியவள்,

”ஏதாவது பண்ணு… பூ...ப்ளீஸ்..” கதறிக் கொண்டே சொல்லும் போதே இரட்டை நீர்வீழ்ச்சி பொங்கியது கண்களில் இருந்து…

அப்போது ஒரு கரம் வந்து கண்ணீரைத் துடைக்க கண்டு அதிர்ந்து, கையிலிருந்த  போனை  நழுவ விட்டபடி சிலையாக சமைந்து நின்றாள்.

வன் வாசத்தை நாசி நுகரும் முன், அவன் முகத்தை விழிகள் பார்க்கும் முன், அவன் குரலை காதுகள் கேட்க்கும் முன் அந்த தொடுதலிலே உணர்ந்தாள் இது அவன் என்று!....யாருக்காக இத்தனை நேரம் அலைமோதினாளோ அவன் என்று....

கண்ணீரைத் துடைத்தவன் காதலுடன் அவளை நெஞ்சோடு  இறுக அணைத்துக் கொள்ள பதட்டத்தில் இருந்தவள்,

அவனை தன்னிடம் இருந்து  விலக்கி “கார்த்திக்….” சொல்லத் திறந்த வாயிலிருந்து வெறும் காற்றுத் தான் வந்தது. கவலையும்  பதற்றமுமாய்  உச்சி முதல் பாதம் வரை.. கருவிழிகள் நாலா திசையும் உருள பரபரப்பாக  ஆராய்ந்து விட்டு,

“போலீஸ் அடிச்சாங்களா?… ”, குரல் நடுங்க  கேட்டாள்..

அவள் உளறுவதை ரசித்தவன், “அமெரிக்கா போலீஸ் என்னை அடிச்சிட்டு இப்போ தான் கீழே இறங்கி போனாங்க..நீ பாக்கலையா? ” என்றான் சிரித்துக் கொண்டே...

“ம்ம்ம்ம்???? “ விழித்தாள்…

கீழே கிடந்த போனை எடுத்து இணைப்பை துண்டித்து தனது பாக்கெட்டில் போட்டு விட்டு, அருகில் நின்றவளின் தலையில் முட்டியவாறு,  “மயக்கு மோகினிக்கு  இன்னும் பல்பு எரியலையாக்கும்??? “, கொஞ்சலாக கேட்டுக் கொண்டே புன்னகைத்தான்...

இன்னும் தெளியாமல் மலங்க மலங்க முழித்த சந்தியா...அவனிடம் இருந்து சிரத்தை விலக்கி, 

“‘நீங்க இங்க... எப்படி?”, குழம்பியவாறு கேட்டாள்.

சிரித்துக் கொண்டே அவளை தன்னோடு அணைத்தவன், “என் செல்ல பேய்க்கு இன்னும் புத்தி தெளியலையே...” என்றான் அவள் முடியை கோதியவாறு,

“ஆர் யு சுயர்...உங்களுக்கு ஒன்னும் இல்லையே!” அவன் மார்ப்பில் சாய்ந்திருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து உறுதி படுத்த மீண்டும் கேட்டாள். “ஒன்னும் இல்லைடா..” உறுதியான குரலில் சொல்லிக் கொண்டே அவள் கரத்தை தன் கரத்தோடு கோர்த்துக் கொண்டு,

“ஆக்சுவலி, உங்க அக்கா ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் என்னை வெள்ளைக்கார மாமாகிட்ட மாட்டிவிட்டு கம்பி என்ன வைக்க தான் குறியா இருந்தாங்க... நல்ல வேளைக்கு சரண் உங்க குடும்பத்தில் பிறக்கலைல. அதான் கொஞ்சம் புத்திசாலியா போயிட்டான். உங்க அக்காவை கூல் டவுன் பண்ணி ஒரு கட்ட பஞ்சாயத்தை நடத்தி அது ஒரு பெரிய கதை.” என்று நெடிய மூச்சை விட்டவன், “உனக்கு கால் வந்தது எல்லாம் வெளிநாட்டு சதி... திட்டம் தீட்டியது சரண். நீ பேசியதை அமைதியா கான்பரன்ஸ் போட்டு கேட்டுகிட்டு தான் இருந்தேன்... நீ எனக்காக இந்த அளவுக்கு பதறி அழுவன்னு எதிர்பார்க்கவே இல்லைடா...”, நேசத்தில் கரகரத்த அவன் குரலில் நிமிர்ந்து, கண்கலங்க பார்த்தவளின் தலையில் முட்டியவன்,

“ஐ நீட் யு தியாக்குட்டி....”

கண்களை மூடி இருவரும் இத்தனை நாள் ஏக்கம் தீர்ந்தது என காதல் மழையில் நனைந்தனர்... நேரம் ஆக ஆக, அவள் அருகாமையில் திளைத்தவன்,

“போலீஸ் அடிச்சதுல உள்காயம் ஆயிடுச்சு... கொஞ்சம் மருந்து போட்டுட்டு போங்க பாஸ்”, ரகசிய குரலில் சொல்லிக் கொண்டே அவள் முகத்தருகே நெருங்கினான். அதுவரை அவன் கதகதப்பில் கிறங்கி நின்றவள் நெருங்கி வந்தவனின் சுவாசக் காற்றில் மேனி சிலிர்த்து, தள்ளி விட்டு ஓட முயன்றாள். அடுத்த  எட்டு வைப்பதற்குள்  அவள்  கரம் பிடித்தவன், தன்னருகில் இழுத்து  நாணமேறிய முகத்தை ரசித்துக் கொண்டே

தொடத் தொட மறந்ததென்ன ...பூவே

தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

என்று பாட, அதில் மயங்கி நின்றாள் சந்தியா.

ஒரு கையால் அவள் முகவாயை நிமிர்த்தியவன், அவன் தரிசனத்திற்கு தடையாக முகத்தில் வந்து விழுந்த அவள் கேசத்தை   மறு கையால் ஒதுக்கி விட்டு,

“ஹூ ஆம் ஐ டு யு?”, கேட்டு விட்டு குறும்பாக பார்த்துக் கொண்டேயிருந்தான்.  அந்த பார்வையில் ஒரு நொடி ஸ்தம்பித்து, என்ன சொல்வதென்று தெரியாமல்,

“தெரி...ய..லை”,  என்று ரகசிய குரலில் தயங்கிய படி பார்வை தாழ்த்தி சொன்னாள்.

“இன்னும் தெரியலையா?” கேட்டு விட்டு வாய்விட்டு சிரித்துக் கொண்டே,

“கமுக்க கள்ளி!!” என்று அவள் கன்னத்தை அழுத்திக் கிள்ளினான்.

“ஸ்ஸ்...ஆஆ.. வலிக்குது”  வலி பொறுக்காமல் கன்னத்தை தடவிக் கொண்டே அவள் சத்தமாக கத்த,

“ஏய் கத்தாத”, ரகசியக் குரலில் எச்சரித்து,  கன்னத்தை நுனி விரலால் மென்மையாக வருடினான்… வருடல் மெதுவாக அவள் இதழ்களை நோக்கி தவழ்ந்தது. அந்த தீண்டலில் தன் தடுமாற்றத்தை மறைக்க, அவன் கையைத் தட்டி விட்டு சிட்டாய் பறந்தாள்.

கதவருகே சென்றதும் அவன் துரத்தி வரவில்லை என உறுதி செய்து கொண்டு,

“ஆசை தோசை” அவனைப் பார்த்து   அழகு காட்டி விட்டு, படிகளில் இறங்கி அவன் பார்வையில் இருந்து மறைந்தாள்.

மொட்டை மாடியில் மணிக்கணக்கில்  மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தவனின் பாக்கெட்டில் இருந்த சந்தியாவின் போனில் அழைப்பு வர அதை எடுத்துப் பார்த்தான். அழைத்தது நிரஞ்சன்.

“நிரு, எதுக்கு இந்த நேரம் சந்தியாவிற்கு கால் பண்ற?”, கேட்டான் கார்த்திக்.

“மது ஸ்லீப் பண்ணுதா செக் செய்யுது…” என்றான் நிரஞ்சன்.

“அதுக்கு சந்தியாவை எழுப்பி விட்டு கேப்பியா ?”, கார்த்திக்.

“இல்லே மது நேத்து பேய்ந்தது  அத்தான்”, தயங்கிய படி சொன்னான் நிரஞ்சன்.

“அத்தானா? உன் தமிழை கேட்டு அத்தான் செத்தான். மது எங்க வீடுன்னா பயப்பட மாட்டா. நீங்க பயப்படாம தூங்குங்க சார். குட் நைட்” என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.