(Reading time: 32 - 64 minutes)

ப்படி ஒரு பாட்டை என் வாழ்க்கையில் கேட்டதே இல்லை”, மது வாய்விட்டு சிரித்தாள்.... பின், அன்று நடந்தவைகளை கூற,

 

“நான் காதி திட்டுது...சந்தியாவே ஹேப்பி ஆக்குது... யு கீப் ஸ்மைலிங்”

என்று உறுதியளித்து விட்டு விடைபெற்றான்.

 

ந்தியாவின் வீட்டிற்கு சென்ற கார்த்திக்கை  வரவேற்றார் லக்ஷ்மி.

 

“ஆண்ட்டி சந்தியா இன்னும் வரலையா?””, கேட்டான் கார்த்திக்.

 

“இல்லை தம்பி. நகை வாங்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வர்றேன்னு சொன்னா. வர முன்ன பின்ன ஆகும். அவகிட்ட எதுவும் விவரம் சொல்லணுமா?”, வினவினார் லக்ஷ்மி.

 

“விவரம் ஒன்னும் இல்லை. சாரி கேக்க தான் வந்தேன். மது தியேட்...இல்ல கோவிலுக்கு சொல்லாம போயிட்டா. கோபத்தில் சந்தியாவையும் சேர்த்து திட்டிட்டேன். அதான்..” என இழுத்தான்.

 

“கோவிலுக்கு தான போனாங்க. அதுக்கு போய் கோபப்பட்டீங்களா? அதெல்லாம் சந்தியா ஒன்னும் நினைக்க மாட்டா. உங்களை மாதிரி தான் அவங்க அப்பாவுக்கும் இப்படி தான். கண்ணு மண்ணு தெரியாம கோபம் வரும்.” சொல்லிக் கொண்டே  பருக காபியை கொடுத்தார்.

 

“பூமாவை நேரில் போய் பார்த்தீங்கன்னு பூமா சொன்னா. எப்படி இருக்கா? பார்க்க தெளிச்சியா இருக்காளா?” ஆசையும் ஏக்கமுமாய் கேட்டது தாய் மனம்.

 

“பூமா நல்லாயிருக்காங்க ஆன்ட்டி. குணா கைல வைச்சு தாங்குறார். நீங்க கவலையேப் படத் தேவையில்லை” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது,   வீட்டு எண்ணிற்கு  சந்தியா அழைப்பு வர எடுத்தார் லக்ஷ்மி.

 

“அம்மா நான் அன்பு இல்லத்திற்கு போறேன். வர லேட் ஆகும். “ என்றாள்.

 

“கார்த்திக் தம்பி உன்னைப் பார்க்க வெயிட் பண்றார். வீட்டுக்கு வந்துட்டு போ’, லக்ஷ்மி.

 

“எதுக்காம்?”, வெறுப்பாகக் கேட்டாள்...

 

“சாரி கேக்கணுமாம்.”

 

‘அவரைப் போக சொல்லிடுங்க. நான் அன்பு இல்லத்திற்கு போறேன்னு எதுவும் சொல்ல வேண்டாம்.”,

 

“ஏன் பாப்பா?’, கேட்டார் லக்ஷ்மி புரியாமல்.

 

“அவர் ஹால்ல தான் இருப்பார். நீங்க பேசுறது அவருக்கு கேட்கும். நான் நேரில் வந்து சொல்றேன்.” என்று சொல்லி அவனை எப்படி வீட்டை விட்டு காலி பண்ணுவது என யோசனை கூறி விட்டு வைத்தாள். அதையே லக்ஷ்மி அவனிடம் கூற,

 

“எத்தனை மணி ஆனாலும் இருந்து பார்த்துட்டு போறேன் ஆண்ட்டி.”, என்றான் கார்த்திக்.

 

“அது எட்டு மணிக்கு மேல ஆகிடும் சொன்னாளே!”, என்றார் லஷ்மி.

 

“அங்கிள் எட்டு மணிக்கு உள்ள வீட்டில் இருக்கணும்ன்னு சொல்லுவாங்களே”, சந்தேகமாய் கேட்டான்.

 

“அது அன்பு இல்லத்துக்குன்னா முன்ன பின்ன ஆனாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க தம்பி.”, உணர்ச்சி வசப்பட்டு உண்மையை சொன்னவர் அதை சரிக்கட்ட, “படிப்பு விஷயத்துக்கு லேட் ஆனாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க” என்றார் மழுப்பலாக.

 

“சரி ஆன்ட்டி.. அப்போ நாளைக்கே வந்து பார்க்கிறேன்” என்று விடைபெற்றான்.

 

னதை தளர்த்த அன்பு இல்லத்தில் தோட்டப்பகுதியில் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

‘அக்கா நான் தான் அவுட். எனக்கு கட்டி விடுங்க” என்று அவளிடம் துணியை நீட்டிய குழந்தையின் கண்களை கட்டி விட்டு, அக்குழந்தை முன் ஒற்றை விரலை நீட்டி

 

“இது எத்தனை?”

 

“நாலு “, என்றது குழந்தை...

 

“வெரிகுட். இனி பிடிக்க வரலாம்” கட்டளையிட்டவுடன் சுற்றி நின்ற குழந்தைகள் தெறித்து ஓட,  இவள் லாவகமாக பின்னோக்கி எட்டு வைக்க எத்தனிக்கும் பொழுது அவளை நோக்கி கார்த்திக் வருவதை பார்த்து விட்டாள்.

 

“நிம்மதியா இருக்கலாம்னு இங்க வந்தா இங்கேயும் துரத்தி வர்றானே” அதிர்ச்சியோடு அழுகையும் சேர்ந்து வர அங்கே சமைந்து நின்றாள்.

 

“அய் அக்கா அவுட்...அக்கா அவுட்”, அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு  குஷியில் குதித்தது குழந்தை. அந்த குழந்தையிடமிருந்து அவள் கரத்தை பற்றிய கார்த்திக், குழந்தையின் உயரத்திற்கு உடம்பை தாழ்த்தி அவள் காதிற்குள் ஏதோ சொல்ல, விழி விரிய

 

“அய் ஐஸ்கீர்ம்.. தேங்க்ஸ் சார்” சொல்லிக் கொண்டே மற்ற குழந்தைகளிடம் சேதியை தெரிவிக்க ஓடினாள்... அவள் கரத்தை விடாமல் பற்றியவாறு “ஹே...ஐ டின்ட் மீன் டு ஹர்ட் யு” சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று தோற்று,

 

“சை...” என்றாள் எரிச்சலுடன்....

 

அந்த முகச்சுளிப்பை எதிர்கொள்ள முடியாமல் நொடிப்பொழுதில்  முகத்தில் கவலை ரேகை பரவ,  அவள் கரத்தை தன் தலை மீது வைத்து அழுத்தி,

 

“எது உன்னை வருத்தப்பட வச்சதோ  அதை இனி செய்ய மாட்டேன். ஐ ப்ராமிஸ்”, என்றான் உறுதியான குரலில்.

 

அதை காதிலே வாங்காதது போல வேறு திசையில் வெறித்து பார்த்தாள். அவள் முகவாயை தன்புறம் திருப்பி,

 

“ஹே...கோவிச்சுக்காதீங்க பாஸ். பழச பத்தி நினைக்காம சியர் அப் அண்ட் பி ஹேப்பி”, கொஞ்சலாக சமாதான மந்திரத்தை சொல்லி முடிக்கும் முன், அவள் பூ போன்ற உள்ளங்கை புயல் வேகத்தில் அவன் கன்னத்தில் உரசி முள்ளாய் குத்தியது.

 

திடீர் என்று விழுந்த அறையில், வலியை விட வேகமாக ஏறியது  அவன் கோபம்...அது அனலாய் அவன் பார்வையில் வீச, அதை துட்ச்சமாக எதிர்கொண்டு, அவன் சட்டையைப் பிடித்து,

 

“இன்னும் பழிவாங்க என்கிட்ட என்னடா  இருக்கு? என் மனசை பிடுங்கி போட்டது பத்தாதுன்னு, இப்போ இந்த உட....உட....ம்பும் வேண்டுமா? அப்படி என்னடா பாவம் செய்தேன் உனக்கு?“ உலுக்கியவாறு ஆவேசமாக  கேட்க ஆரம்பித்தவள் தொடர முடியாமல் வெடித்து அழுதாள்...

 

தணலாய் எரிந்த அவன் கோபம் அந்த அழுகையில் ஆவியாய் கரைய, அவளை ஆதரவாய் இறுக அணைத்து, “தியாக்குட்டி அழாதடா...ப்ளீஸ்”, என்றான் முடியை மென்மையாக கோதியவாறு.

 

“ச்சீ... என்னைத் தொடாதீங்க கார்த்திக்” அருவருப்புடன் அவனை  முழு பலம் கொண்டு தள்ளி விட்டாள்... அவனோ அசைந்து கூட கொடுக்கமால் அணைத்தவளை விடுவிக்காமல், அவள் முகவாயை பற்றி,

 

“இதுக்கு ஏன்டா டென்ஷன் ஆகுற. நானும் தானே மனசை பறி கொடுத்தேன். என்னை உடம்புக்கு அலையுற மிருகம்ன்னு நினைக்கிறியா?” குரல் கரகரக்க வேதனையுடன் கேட்டான்.

 

“ப்ச்...” என்று எரிச்சலாய் அவன் கையை தட்டி விட்டவள், கண்களை சுருக்கி அவனை கூர்மையாக நோக்கி, “உங்களை மாதிரி பணம் அந்தஸ்து உள்ளவங்க ஒரு பொண்ணை பழி வாங்க அதைத் தான செய்வாங்க. எங்க அப்படி நினைக்கலைன்னு உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க பாப்போம்?”, கேட்டாள்.

 

”ஹாஸ்பிட்டல்ல எனக்கு ஏற்பட்ட அவமானத்தில அப்படி ஒரு எண்ணம் வந்தது! அது வெறும் எண்ணம் தான்.. உன்கூட பழக பழக அந்த எண்ணம் கூட அழிந்து விட்டது! நம்புடா”, கெஞ்சினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.