(Reading time: 32 - 64 minutes)

துன்னாலும் என்னை முன்னாடி தள்ளி விட்டு தியாகி ஆக்கி, நீ மட்டும் ஹீரோவா இரு. நல்லாயிருப்ப.. வா போலாம்..”, என்றான் வேண்டா வெறுப்பாக.

“என் செல்லம்..”, என கொஞ்சினான் கார்த்திக்.

“என்கிட்டே திருப்பி விடுறியா? இப்படி கர்ணக்கொடூரமா கொஞ்சுனா அவ அடிக்காம என்ன செய்வா?”, கேட்டான் சிவா.

“என்ன மச்சி பண்ண, நமக்கு ரொமான்ஸ் சரியாய் வர மாட்டேங்குதே!”, போலியாக வருத்தப்பட்டான் கார்த்திக்.

“ம்ம்க்கும்... என் வாழ்க்கையில் விளையாட மட்டும் நல்லா வரும்”, அலுத்துக் கொண்டான்.

அன்பு இல்லைத்தை அடைந்ததும், போனை கொடுத்து விடுமாறு சிவாவிடம் கொடுக்க, “உன் ஆள் நீ போய் குடு...என்னை எதுக்கு தூது அனுப்புற?”

“வென் ட்ரெஸ்ட் இஸ் லாஸ்ட் எவ்ரிதிங் இஸ் லாஸ்ட்... என்னை பார்க்க விரும்ப மாட்டா. நான் இங்கே வெயிட் பண்றேன்.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் சமயம் சற்று தொலைவில் அர்ஜூன் கை கால்கள் வெட்டி வெட்டி இழுத்த வண்ணம் தரையில் சரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தான். அதைக் கண்ட சிவா, “வாடா மாப்ளே... ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்”, துரிதப் படுத்த, வேகமாக அவனிடம் ஓடினர் இருவரும். “நாக்கை கடித்து விடாம பாருங்க” என்று சொல்லிக் கொண்டே சிவா ஓட, அர்ஜூன் அருகில் இருந்த அவன் நண்பன் வேகமாக பாக்கெட்டில் இருந்த ரப்பர் பந்து போன்ற பொருளை வாயில் திணித்தான்.

கை கால்கள் வெட்டி இழுப்பது நிற்காமல் தொடரவே பயந்து போன கார்த்திக். ”நான் கார் சாவியை எடுத்து வரட்டா” என சிவாவிடம் கேட்க, “அது சினிமால தான். அதனால் ஒரு பிரயோஜனம் இல்லை” என சிவா சொல்லி முடிப்பதற்குள் வாய் வழியே நுரைதள்ள, கருவிழிகள் காணாமல் போய் கண்கள் நிலைகுத்த சுயநினைவை இழந்தது அந்த இளங்கன்று!

தீவிர சிகிட்சை பிரிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அர்ஜூன் நிலையில் முன்னேற்றம் இருந்தது. உடம்பை கட்டிப் போட்டு ஓராயிரம் ஆயிரம் பேர் அடித்தால் கூட இந்த வலி இருக்காது! அணு அணுவாய் துளைத்த வலியிலும், தன்னை எதிர்த்து  போராட முடியாமல் உண்டான சோர்விலும் மருந்தின் தாக்கத்திலும்   கண் மூடிக் கிடந்தான். அவன் அருகில் பரிதவிப்புடன் வாடிய மலராய் சந்தியா... மாலையில் அவன் சற்று தெளிந்து கண் விழிக்க, “அஜூ முழிச்சிட்டான்” மகிழ்ச்சியோடு அருணகிரி தாத்தாவை பார்க்க திரும்பியவளின் முகம் நொடிப்பொழுதில்  இறுகியது.

தன் காரணம் தான் என்று அறிந்த கார்த்திக், அருணகிரியிடம் “சந்தியாவோட போன்”, என சொல்லிக் கொடுத்து விட்டு கிளம்ப எதிர்பட்டார் தன்ராஜ். மரியாதை நிமித்தம் ஒரு நொடி பேசி விட்டு அவன் செல்ல எத்தனிக்கும் பொழுது,

“பத்து மணிக்கு  பஸ். அர்ஜூனை பாத்துக்க நாங்க இருக்கோம். நீ சீக்கிரம் கிளம்பு” என சந்தியாவை தன்ராஜ் அவசரப்படுத்த, திகைத்தான் கார்த்திக். 

“ஊருக்கா? என்ன அங்கிள் திடீர்னு?” அதிர்ச்சியாய் கேட்டான் கார்த்திக்.

“காலேஜ் ரிசர்ச் வேலைக்கு ப்ரபசர் பார்க்க நாளைக்கே போகணும்னு சொன்னா. உங்களுக்கு தெரியாதா? ஆபிஸ்க்கு ஈமெயில் அனுப்பிட்டேன்னு சொன்னாளே?” சந்தேகமாய் கேட்டவாறே சந்தியாவைப் பார்த்தார் தன்ராஜ்.

என்ன சொல்வதென்று சந்தியா யோசிக்கும் முன்னரே இடைபுகுந்த கார்த்திக், “நான் வெளி வேலையில் இருந்ததுனால ஈமெயில் செக் பண்ணலை. வேலை விஷயமா சந்தியா கூட பேச வேண்டியிருக்கே! முன்னாடியே கவனிக்காம விட்டுட்டேன்! ப்ச்...”, யோசனையாய் சொன்னவன் பின் ஏதோ வழி கண்டுபிடித்தவன் போல், “இப்படி செய்தா என்ன? அவளை நானே ட்ராப் பண்ணட்டா? போற வழியிலே டிச்கஷனையும் முடித்து விடலாம். ” என அவனே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல, தன்ராஜோ லேசான தயக்கத்துடன்,

“உங்களுக்கு வீண் அலைச்சலாகி விடும்..வேண்டாம் தம்பி. எப்படியும் பஸ் ஏத்தி விட நான் போய் தான் ஆகணும்”, என மறுத்தார்.

“தேட்ஸ் ஓகே அங்கிள். எனக்கு வேலை முடிந்தா போதும். ஒரு வேளை என்கூட தனியா அனுப்பி வைங்க யோசிக்கிறீங்களா?”, என்றான் கார்த்திக். 

“சே...சே...அப்படியெல்லாம் இல்ல தம்பி, உங்களை பத்தி தெரியாத? மணி ஏழு தான ஆகுது. வீட்டுல வேணா விட்டுடுங்க. பஸ்ஸுக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்“ என்றவர்,

“சந்தியா தம்பி கூட கிளம்பு.”, என தந்தையின் கட்டளைக்கு   “சரிப்பா” என்ற ஒற்றை சொல்லை உணர்ச்சியற்று உதிர்த்து விட்டு, அர்ஜூன் அருகில் சென்றாள். அவள் வருவதாக ஒத்துக் கொண்டதே கார்த்திக்கிற்கு தெம்பை அளித்தது!

மூக்கில் செயற்கை சுவாசம் பொருத்திய நிலையில் இருந்த அர்ஜூனை சகோதரப் பாசத்தில் தலையைக் கோதியாவாறு கனிவாக ஓரிரு வார்த்தை பேசி விட்டு அருணகிரியிடமும்  தன்ராஜிடம் விடைபெற்று கார்த்திக்குடன் கிளம்பினாள்.

அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறி வரும் பொழுது சூர்யா எதிர்பட்டான். “ஏய் என்னடா சொல்லாம கிளம்புற?. நானும் வர்றேன்.” என அவர்களுடன் சேர்ந்து வர தயாராக, அவனிடம் அரைமனதாக தலையாட்டி விட்டு, 

“சரி நீங்க முன்னாடி வந்து வெயிட் பண்ணுங்க. நான் காரை எடுத்துட்டு வாரேன்” என்று கார்த்திக் முன்னே சென்று விட, அவனை இரு கண்கள் பார்த்த வண்ணம் இருந்தது!

செயின்ட் ஜோசப் மருத்துவமனை வளாக வாயிலை நோக்கி கார்த்திக்கின் கார் ஊர்ந்து வர, அவன் பார்வை சூர்யாவிடம் கவலையுடன் தலையாட்டிக் கொண்டிருந்த சந்தியாவின் மீது பதிந்தது.

“ஹ்ம்...அர்ஜூனுக்கு சர்ஜெரின்னு பயப்படுவா” தனக்குள் சொல்லிக் கொண்டே, அவர்கள் அருகில் சென்று ஹார்னை அழுத்த, இருவரும் அவன் புறம் திரும்பினர். சூர்யா அவளிடம் இருந்து விடை பெற, “நீங்க வரலையா?”, குழப்பமாகக் கேட்டாள் சந்தியா.

“எங்க வர்றது? தயவுசெய்து வந்துடாதன்னு அப்போவே போன் பண்ணிட்டான்” என்று சூர்யா போலி கவலையுடன் சொல்ல பதிலுக்கு செயற்கை புன்னகை உதிர்த்து காரை நோக்கி நடந்தாள். ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திக், சற்று எக்கி கதவை உள்ளிருந்து கொண்டே  திறந்து விட்டான். அவள் சீட்டில் அமர்ந்ததும் அவளை உற்று நோக்கியவாறு,

“அர்ஜூனுக்கு சர்ஜெரி பண்ணா சீஷர் வர்றது குறையுமாம். மெதுவா அடுத்த வருசம் கூட செய்திடலாம். இதுல பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லைடா” என்றான் ஆறுதலாக.

அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் சீட்டில் தலைசாய்த்து விரல்களால் கண்களை மூடிக் கொள்ள, மறு பேச்சின்றி காரை கிளப்பினான்.

ற்று நேரம் அமைதியாக காரை செலுத்தியவன்,

“ரிசர்ச் வொர்க்குக்கு  கண்டிப்பா போகணுமா?”, கனிவும், ஏக்கமும் கலந்து கேட்க,

“................” அவளிடம் பதில் இல்லை. சில நொடி அமைதிக்கு பின்,

“அப்போ அன்பு இல்லம், உன் ஆம்பிஷன் எல்லாம் அவ்வளவு தானா?”, மீண்டும் கேட்டவனின் கேள்வியில் ஏமாற்றம் ஒலித்தது

அதற்கும் பதில் இல்லை...காது கேட்காதது போல வெளியில் வேடிக்கைப் பார்த்து வந்தாள். சற்று நேரத்தில் கார் அவள் வீடு நோக்கி செல்லாமல் வேறு திசையில் சென்று கொண்டிருந்ததை கவனித்து,

“எங்க போறீங்க?”, கேள்வியாய் விழி விரிய, வாய் திறந்து முத்தை உதிர்த்தாள்.. 

இப்பொழுது இவனிடம் இருந்து பதில் இல்லை.

“ஸ்டாப் இட். நான் வீட்டுக்கு போகணும்”, காட்டமாக சொன்னாள்.

அவனோ வாயை திறக்கவே இல்லை. அடுத்த விநாடி கார் கதவை அவள் திறக்க முயல, “யேய்...யேய்....நோ...நோ” பதறியவாறு வேகமாக காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.