(Reading time: 32 - 64 minutes)

ழக ஆரம்பித்ததே மட்டமான எண்ணத்தில் தானா? அப்போ உடம்புக்கு அலையறவன் தான்! சந்தேகமே இல்லை.... ”, எரிமலையாய் வெடித்தாள்...

 

வார்த்தைகள் தீப்பிழம்பாக உள்ளத்தை எரித்துக் கொள்ள, அதற்கு மேல் என்ன பேச? இதயத்தின் கண்ணாடியாய் கண்கள் பனித்தது! அவளை வளைத்திருந்த கரங்களை விலக்கியவன்  அங்கே நிற்க திராணியற்று தளர்ந்த நடையில் இரு எட்டுக்குள் பின்னோக்கி வைத்து,  பின் திரும்பி அகல எட்டுக்களில் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

 

ஒரு பெண் கண்கலங்குவது உணர்ச்சி வசப்படுவதன் அடையாளம்! ஒரு ஆண் கண் கலங்குவது நேர்மையின் அடையாளமாம்! எங்கோ எதிலோ படித்தது அவன் கலங்கிய கண்களை கண்டதும் நினைவுக்கு வர, கண் கலங்கினாள்! “முந்தின நிமிசம் வரை பழகின மனுசனையே நம்ப முடியலை...சர்வேயை எப்படி நம்ம?” தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். மீண்டும் ஏமாற்றப் பட்ட வலி வர, அழுகை வந்தது. “முருகா! நேற்று இரவு மனசுல  பனியை கொட்டி குளிர வைச்சிட்டு, இப்போ வெக்கையில் புழுங்க வைக்கிறியே... இவனை மறுபடியும் பார்க்காம இருக்க வழி சொல்லு முருகா” வேதனையுடன் வேண்டினாள்.   

 

சோர்ந்த போன முகத்துடன் வீட்டிற்கு திரும்பிய கார்த்திக் முன் எதிர்பட்டது சிவா.

 

“மாப்ளே... உனக்கு இவ்வளோ நேரம் வெயிட் பண்ணேன். இப்போ வர்ற. எனக்கு லேட் ஆகுது, நான் கிளம்புறேன். பை பை.”, என்றான் அவசரமாக.

 

“எங்க போற?”, சோர்ந்த குரலில் கார்த்திக் கேட்க,

 

“பொண்ணு பாக்க போறேன் மாப்ளே...”, சந்தோஷமும் வெட்கமுமாய் சொன்னான் சிவா.

  

“பொண்ணு பாக்க போறியா? சாரி மச்சி. நல்ல விஷயத்துக்கு போறப்போ எங்க போறேன்னு அபசகுனமா கேட்டுட்டேன். இதுனால உனக்கு போறப்போ ஆக்சிடென்ட் இந்த மாதிரி தடங்கல் எதுவும் வராதுல “, போலிக் கரிசனம் காட்டுவது போல சொல்ல,

 

“நீ வாயை விட்டேல்ல, இனி தடங்கல் வராட்டினா தான் ஆச்சர்யம்”, அலுத்துக் கொண்டவனாய் சொன்னான் சிவா.

 

“சாரி மச்சி.. மனசு சரியில்லை...எனக்கு ஒரு ப்ரிச்சனைன்னா, நீ சந்தோஷமா இருக்க முடியுமா?”, கவலையுடன் கேட்டான் கார்த்திக்.

 

“சந்தோஷமா இருக்க தான் விடுவியா? “, அதே நொந்த குரலில் சொன்னான் சிவா.

 

“ச்சே...என்னை போய் அப்படி நினைத்துட்ட. நான் கவலைப்பட்டாலும் நீ நல்லாயிருக்கணும் மச்சி. ஒரு சூப்பர் பெர்பூயூம் வாங்கிட்டு வந்தேன். போட்டுட்டு  கும்முன்னு போ! அதுல மயங்கி பொண்ணு  நாளைக்கே கல்யாணம் வைங்கன்னு அடம் பிடிக்கும் பாரு!” என ஆசை காட்ட,

 

“அப்படியா? குடு மாப்ளே! செம கெத்து காமிக்கலாம்!”, கண்களில் ஆர்வத்துடன் சிவா சொன்னான்.

 

“காதி, ஐ வான்ட் மேங்கோ ஷேக் ப்ளீஸ்”, என்று அந்த நேரம் நித்தி ஒரு மாம்பழத்தை எடுத்து வந்து நீட்ட,

“மச்சி, ஜஸ்ட் 2 மினிட்ஸ்... மேங்கோ ஷேக் போட்டு குடுத்திட்டு வர்றேன்” என்று கார்த்திக் சமையலறையை நோக்கி நடக்க, அவனைத் தொடர்ந்து சிவா நடந்தான்.

“காதி எனக்கும் அத்தைக்கும் சேர்த்து போடு”, ஏதோ ஒரு அறைக்குள் இருந்து மீராவின் குரல் மட்டும் வந்தது.

“உங்கள் வீட்டில் பொம்பளைங்க யாருமே சமைக்க மாட்டாங்களா?” எரிச்சலாக கேட்ட சிவாவின் பின்னால் இருந்து,

“என்னது” அதட்டலாக சௌபர்ணிகா கேட்க,

“ஆண்ட்டி மாதிரியே கார்த்திக் நல்லா சமைப்பான்னு சொன்னேன்...அவ்வளவு தான் ஹி...ஹி...” என்றான் தொடை நடுங்க.

அவனை ஏற இறங்க பார்த்து விட்டு,

“இன்னைக்கு தான் உருப்படியான விஷயம் சொல்லியிருக்க” என்றார் சௌபர்ணிகா மெச்சுதலாக.

மாம்பழத்தின் தோலை சீவியக் கொண்டே, “என் ரூம்ல டேபிள் மேல வைச்சிருப்பேன். ரெட் கலர் பாட்டில். நீயே போய் எடுத்து போட்டுக்கோ” என சிவாவிடம் சொல்ல,

“என்ன ப்ராண்ட் மாப்ளே?”, சிவா கேட்க,

“சொல்லி என்ன பிரயோஜனம் மச்சி. எழுத்து கூட்டி நீ வாசிக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும்”, என்றான் கார்த்திக் கிண்டலாக.

“கலாய்க்கிறீங்களாக்கும்...நாங்கெல்லாம் வெள்ளக்காரனுக்கே டிக்ஸ்னரி வாங்கி கொடுத்த பரம்பரை” தற்பெருமை அடித்துக் கொண்டே செல்ல,

“மச்சி... அங்க க்ளீனிங் ஸ்பிரேயும் ஒரு ரெட் கலர் பாட்டில்ல இருக்கும். மாத்தி அடித்து விடாத... அது C ல ஆரம்பிக்கும்...கவனம்”, எச்சரித்தான் கார்த்திக்.

அதைக் கேட்டு அதிர்ந்த சிவா, “டேய்...ஆளை விடு. இருக்கிறது போதும். பை”, என்க,

“மச்சி...அந்த பெர்பூயூம் போட்டு ப்ளைட்ல வந்தப்போ ஏர் ஹாஸ்டஸ் அத்தனை பேரும் எனக்கு லைக் போட்டு...கமென்ட் போட்டு....சரி  வேண்டாம்ன்னா போ”, மீண்டும் ஆசை வார்த்தைகள் கூற,

“நீ இவ்வளோ கேக்குறதுனால நான் ஷேர் பண்ணிக்கிடுறேன் மாப்ளே! ” சொல்லி விட்டு கார்த்திக் அறையை நோக்கிச் சென்றான்...

அடுத்த சில நொடிகளில் “மாப்ளே..” என்ற சிவாவின் அவலக் குரல் கேட்க கார்த்திக் வேகமாகச் சென்று பார்த்தான்...

சிவா கருப்பு சாயத்தில் குளித்திருந்தான். என்னவென்று ஆராய்ந்ததில் கதவின் மேல் சிரட்டையில் கருப்பு மை வைக்கப் பட்டிருந்தது சிவா திறந்ததும் அபிஷேகம் நடந்து விட்டது!

சந்தியாவின் குறும்பை நினைத்து கார்த்திக் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டேயிருக்க கடுப்பானான் சிவா.

“ப்ளான் பண்ணி அனுப்பி வைச்சியாடா ?”, கோபமாகக் கேட்டான்.

“இல்லடா... உன் சிஸ்டர்கிட்ட இருந்து பேதி மருந்துல இருந்து தப்பிச்சாலும் விதி வலியது. இதுல சிக்கிட்ட. எனக்கு வர்றது எல்லாம் வழில வந்து தாங்குற உன்னை நினைக்கிறப்பவே மச்சி, அப்படியே புல்லரி”

“போதும்! “ வாயை மூடு என்பதை சைகையாய் செய்தான் சிவா.

ஒரு வழியாக சிவாவை குளிக்க அனுப்பி விட்டு சந்தியாவின் கைவரிசையில் போர்க்களம் போல் காட்சி அளித்த அறையை சீர் செய்தான். குளித்து புது மாப்பிளை போல கிளம்பிய சிவா, அவன் கட்டிலை பார்த்து. “என்ன மாப்ளே இது?” என கேட்க, கார்த்திக் அருகில் சென்று பார்த்தான்...

படுக்கை விரிப்பில் ஒரு குழந்தை வாயை மூடி “ஷ்ஷ்.. சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்...திறந்து பார்...” என்று  சொல்வது போல படம் போட்ட குறிப்பு இருந்தது.

“இதுக்கும் திறப்பு விழா நடத்து  மச்சி”, சிவாவைப் பார்த்து குறும்பாகக் கேட்டான் கார்த்திக்.

“போதும்டா.... ஆர்வக்கோளாறுல பட்டது போதும். இதுக்குள்ள ஏதாவது பாம் செட் பண்ணி வைச்சிருப்பா...நீயாச்சு...உன் பேயாச்சு..என்னை விடு.” என்று கிளம்பியவனை,

“இரு மச்சி. நானும் வர்றேன். போற வழியில் அவ போனை குடுத்திட்டு போகலாம்.” என்றான் கார்த்திக்.

“அந்தானைக்கு பச்ச புள்ள! துணைக்கு ஆள் கூப்பிட்டு தான் போவீங்களோ?” நக்கலாக சிவா கேட்டான்.

“தனியா போனா  அடிக்கிறா மச்சி... பயமாயிருக்கு. அதான்”, என்றான் கார்த்திக் பயந்தது போல முகத்தை வைத்துக் கொண்டு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.