(Reading time: 25 - 50 minutes)

ரு நிமிடம் யோசித்த இளவரசன் “இல்லம்மா. எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட் வொர்க் இருக்கு. சந்துருவை கூட்டிட்டு போய் விட சொல்லுங்க” என்றான்.

“சரி சந்துரு. நீ கூட்டிட்டு போய் பவித்ராவை அங்கே விட்டுடு”

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் “ம்ம்ம்” என்று முணுமுணுத்தான்.

பின்பு அவன் பவித்ராவை பார்க்க அவனை பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா தலை கவிழ்ந்தாள்.

வித்ராவை காரில் கூட்டிக் கொண்டு சென்ற சந்துரு மெதுவாக அவளை திரும்பி பார்த்தான். ஆனால் அவளோ நார்மலாக இல்லை.

“என்ன பவித்ரா” என்றான்.

“ஒண்ணுமில்லையே” என்றவளால் அவனை பார்த்து பேச இயலவில்லை.

“இல்ல ஏதோ ஒரு மாதிரி இருக்கீங்களே”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை” என்று முணுமுணுத்தாள்.

அவளை இறக்கி விட்டு விட்டு சந்துரு அவளையே பார்த்தபடி காரில் அமர்ந்திருந்தான்.

அவனும் உள்ளே வருவான் என்று எதிர்பார்த்த பவித்ரா அவன் இறங்கிய சத்தம் கேட்காததால் திரும்பி பார்த்தாள்.

அவன் ஏதும் சொல்லாமல் மௌனப் பார்வை பார்த்தான்.

“உள்ளே வரலியா” என்றாள் அவள்.

“இல்லை. கொஞ்சம் வேலை இருக்கு. சொல்லிடுங்க” என்றான்.

“ம்ம்ம்.” என்றவள் திரும்பும் போது

“ஒரு நிமிஷம்” என்றான் அவன்.

திரும்பிய பவித்ரா “என்ன” என்ற கேள்வியோடு நின்றாள்.

அவளை பார்த்தவன் “சாரி” என்றான்.

“எதுக்கு”

“தெரியலை. நான் உங்களை ஏதோ ஒரு வகையில காயப் படுத்திட்டேன்னு நினைக்கறேன். அதான் சாரி” என்றான்.

என்ன சொல்வது என்று தெரியாமல், ஏதும் சொல்லாமல் அவள் திரும்பி வீட்டினுள் ஓடி விட்டாள்.

டுத்த நாள் வரையும் பொறுத்து பொறுத்து பார்த்த இனியாவால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. சண்டை போடவாவது பேசினால் பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு.

அதற்கு மேலும் பொறுக்க இயலாமல் அவளே அவனுக்கு போன் செய்தாள்.

ஆனால் அவனோ எடுக்கவில்லை. இரண்டு முறை ட்ரை செய்தும் அவன் எடுக்கவில்லை.

அன்னைக்கு ப்ராமிஸ் செஞ்சது என்ன, இன்னைக்கு நடந்துக்கறது என்ன என்று பொறுமி விட்டு திரும்ப ட்ரை செய்தாள்.

அப்போது எடுத்தவன் “ஹலோ” என்றான்.

“ஹலோ” என்றவளால் அதற்கு மேல் பேச பயமாக இருந்தது.

“பேசறதுன்னா பேசு. இல்லன்னா போனை வச்சிட்டு போ. டைம் வேஸ்ட் பண்ணாத”

அவ்வளவு நேரம் எப்படி பேசுவது என்று இருந்த தயக்கம் போய் அவன் மேல் கோபம் தான் வந்தது.

“என்ன ரொம்ப தான் பண்றீங்க. அன்னைக்கு என்ன ப்ராமிஸ் பண்ணீங்க. ஆனா இப்ப போனை எடுக்க கூட மாற்றீங்க. போனை எடுத்தாலும் திற்றீங்க” என்றாள்.

“நான் வேணும்னு எல்லாம் போன் எடுக்காம இல்லை. மீட்டிங் இருந்துச்சி. மொபைல் சைலென்ட்ல இருந்துச்சி. அன்னைக்கு பண்ண ப்ராமிஸ்க்கு மதிப்பு குடுத்து தான் இப்ப பிடிக்கலைன்னாலும் உன் போன் அட்டென்ட் பண்ணேன்” என்றான் கோபத்துடன்.

“இளா” என்றவள் விக்கித்து நின்றாள்.

“என்ன” என்றவனின் குரல் சீறிக் கொண்டு வந்தது.

“என்ன இப்படி பேசறீங்க”

“வேற எப்படி பேசணும். எனக்கு வொர்க் இருக்கு. டைம் வேஸ்ட் பண்ணாத”

“ஓ. உங்களுக்கு தோணினா பேசுவீங்க. இல்லன்னா பேச மாட்டீங்களா. என் கூட சண்டை போட்டா மட்டும் உங்களுக்கு எங்கிருந்து தான் இந்த வேலை ஓடி வருமோ தெரியலை எனக்கு” என்றவளின் குரலில் அழுகை கலந்திருந்தது.

“நிஜமாவே வேலை இருக்கு” என்றான் இறுக்கத்துடன்.

“நம்பிட்டேன். பிடிச்சா ஒரு பேச்சு. பிடிக்கலைன்னா ஒரு பேச்சு உங்களால தான் பேச முடியும். இப்ப என்ன பிடிக்கலை அதானே. அதனால தானே வேலை இருக்குன்னு என்ன இப்படி பண்றீங்க. இதுவே நமக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி இருந்தா இப்படி பண்ணுவீங்களா. சரி என்னை கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவாவது இருக்கா இல்லையா.”

“போதும் நிறுத்து டீ. பேசிட்டே போற. இங்க வேலை இல்லைன்னு நீ வந்து பார்த்தியா. பிடிச்சா ஒரு பேச்சு பிடிக்கலைன்னா ஒரு பேச்சு நான் பேசறேனா. அவ்வளவு வேலை இருந்தும் நீ அழுத அழுகை எந்த வேலையும் பார்க்க விடாம அடுத்த நாளே என்னை இங்க வர வைச்சது. ஆனா நீ நான் வந்ததுக்கு நல்ல பரிசு கொடுத்த. அப்பவும் பல்லை கடிச்சிட்டு நீ சொன்னதுக்கு தலையாட்டிட்டு தானே வந்தேன். இப்ப நீ போன் பண்ணா நான் எடுக்க தானே செஞ்சேன்.”

“நான் பாதியில விட்டுட்டு வந்த வேலையை பார்க்க வேற யாரையும் அனுப்ப வேண்டாமா, அதுக்கு யாரை அனுப்பலாம்ன்னு மீட்டிங் போட்டு பேசிட்டிருக்கேன். இவ வந்து பார்த்தாளாம் இங்க வேலை இல்லைன்னு. அதெப்படி டீ நீ உன் வாய்ல இருந்து இப்படி எல்லாம் வார்த்தை வந்து விழுகுது. பிடிச்சா ஒரு பேச்சு பிடிக்கலன்னா ஒரு பேச்சுன்னு. நீ இவ்வளவு பண்ணி இருக்க. உன்ன நான் ஏன்னு ஒரு வார்த்தை கேட்க கூடாதா. உனக்கு என் கிட்ட சொல்லிட்டு செய்யணும்ன்னு ஏதும் தோணாது. ஆனா நான் அதை பத்தி எல்லாம் ஏதும் கேட்க கூடாது. மீறி பேசினா என்ன வேணும்னாலும் சொல்லுவியா. ஏன் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருந்தா மட்டும் நான் உன்ன திட்ட மாட்டேனா. உன் கிட்ட எனக்கு அந்த உரிமை கூட இல்லையா. உனக்கு வேணும்னா நமக்கு கல்யாணம் ஆகலைன்னு எல்லாம் டிபரன்ஸ் தெரியலாம். எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் நீ தான் என் பொண்டாட்டி. ஆனா உனக்கு தான் அப்படி ஏதும் நினைப்பில்லை.” என்று பொரிந்து தள்ளி விட்டான்.

இனியாவின் மனது நிறைந்து இருந்தது. திட்டினா கூட சுகமா இருக்கும் என்று அன்று தான் தெரிந்துக் கொண்டாள் இனியா.

“சாரி இளா”

“போனை வைடி” என்று வைத்து விட்டான்.   

தொடரும்

En Iniyavale - 26

En Iniyavale - 28

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.