(Reading time: 11 - 21 minutes)

ன்று இரவு நேரம். அரவிந்துக்கு மறுநாள் முழு ஆண்டுத்தேர்வு இருந்தது. அதனால் அவன் தன் அறையில் படித்துக் கொண்டிருந்தான். அருகிலே அந்த பொம்மை இருந்தது. ஏனென்றால் அவன் இப்போதெல்லாம் அந்த பொம்மை தோழியுடன் தான் நிம்மதியாக இருக்கின்றான்.

“அரவிந்த் உன்னோட ஹால் டிக்கெட்டை பத்திரமா உன் பையில வை! நாளைக்கு மறந்திட்டு போய்ட போற” என்றார் தேவி.

“வச்சுகிறேன் அம்மா...”என்றான் அரவிந்த். ஆனால் அவன் தற்போது கணக்கு பாடத்தில் தீவிரமாக இருந்தான்.

“கருக் ! முருக்!” என்று ஏதோ சத்தம் கேட்டது. அது ஒரு ஒரு சாக்குலேட் கவரின் சத்தம். அரவிந்த் மெல்ல எழுந்து தன் அறைக்கு வெளிய எட்டிப் பார்த்தான். குளிர் பெட்டியில்ருந்து அரவிந்தின் சாக்குலேட்களை திருட்டுத்தனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சஞ்சய்.

“அம்மா ! இந்த குட்டி பிசாசு என்னோட சாக்குலேட்கள தின்னுடான்.”என்று கோவத்தோடு சஞ்சை பிடிக்க ஓடினான் அரவிந்த். அதற்குள் சஞ்சய் அலறியடித்துக் கொண்டு அவனுடைய அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டான். அரவிந்துக்கு கோவத்தில் கண்ணீரே வந்துவிட்டது. சத்தம் கேட்டு அங்கே அவசரமாக வந்தார் தேவி.

“அரவிந்த் விடுப்பபா. சாக்குலேட் தான? உனக்கு நாளைக்கு வாங்கி தரேன்” என்று சமாதானப் படுத்தினார். தேவி.

“அது எனக்கு பிடிச்ச சாக்குலேட். நாளைக்கு எக்ஸாம் முடிஞ்சு பஸ்ல வரும்போது சாப்பிட்டுகிட்டே வரலாம்னு நினைச்சேன்.”என்று அரவிந்த் ஏக்கத்தோடு சொன்னான். அவன் கண்ணீர் நிற்கவில்லை.

“விடுப்பா. அவன் தம்பிதானே?...விட்டுக்குடுக்கலாம்ல?”என்று தேவி அரவிந்த் கன்னத்தை தொட வர அவரின் கையை தட்டி விட்டான் அரவிந்த்.

“எப்பவுமே நான்தான் விட்டுக் குடுக்கணுமா?” என்று அரவிந்த் கோவமாக தன் அறைக்கு சென்று தாழ்பாள் போட்டுக்கொண்டான்.

மறுநாள் காலை பள்ளிக்கு வேகவேகமாக கிளம்பினான் அரவிந்த். வழியில் சஞ்சய் தன் சாக்குலேட்களை தின்று போட்ட கவர்களை கண்டான். அரவிந்துக்கு கோவம் குறையவில்லை.

“ஹே அரவிந்த் ! பாலாவது குடிச்சுட்டு போடா...”என்று அவன் அம்மா தேவி எவ்வளவோ கத்தியும் காதில் வாங்காமல் விட்டாய் விட்டு பள்ளிக்கு கிளம்பினான் அரவிந்த்.

தன் பள்ளிப் பேருந்து வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றான். தேர்வு நேரம் ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தது. மாணவர்கள் அனைவரும் பள்ளி வாளகத்தில் ஆங்காங்கே கையில் புத்தகத்துடன் நின்றுக்கொண்டு படிக்க ஆரம்பித்தனர்.

“ட்ட்ரீங்” என்று பள்ளி மணியடித்தது. மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்ல ஆரம்பித்தனர். தேர்வு அறைக்கு வெளியே நின்றிருந்த அரவிந்த் தன்னுடைய ஹால் டிக்கெட்டை எடுக்க பையை திறந்தான். அரவிந்த் அதிர்ந்து போனான். ஹால் டிக்கெட்டை வீட்டிலேயே மறந்து வைத்தாது அப்போதுதான் அவனுக்கு நியாபகம் வந்தது. அரவிந்துக்கு பயத்தில் உடன் நடுங்க ஆரம்பித்தது. மற்ற மாணவர்கள் அரவிந்த் தயங்கியபடி அறைக்கு வெளியே நிற்பதின் காரணம் புரியவில்லை. 

தேர்வு ஆரம்பிக்க இன்னும் 2 நிமிடங்களே உள்ளன. உள்ளே கண்டிப்பாக அனுமதி கிடையாது என்று தெரிந்தும் தேர்வர்யின் ஆசியர் கண்ணில் படும்படி நின்றான் அரவிந்த். ஆசிரியர் அவனை நோக்கி வந்தார்.

“என்னப்பா ஏன் வெளியே நிக்கிற?” என்று கேட்டார் ஆசிரியர்.

இதயம் படபடப்பாக இருந்த அரவிந்த்க்கு பேச வாய் வரவில்லை. இருந்தாலும் சொல்லிவிட வேண்டுமென்று சொல்ல முன் வந்தான்.

“அரவிந்த்!” என்று ஒரு குரல் அவனை கூப்பிட உடனே திரும்பி யாரென்று பார்த்தான் அரவிந்த். பள்ளியின் காவலாளி .அவனை நோக்கி வந்தார்.

“இந்தாப்பா உன்னோட ஹால் டிக்கெட்! என் டேபிள்ள கிடந்தது. உங்க அம்மா தான் கொண்டு வந்து வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறன்!” என்று காவலாளி அரவிந்தின் ஹால் டிக்கெட்டை அவனிடம் குடுத்தார்.

உயிர் போய் வந்தது போல இருந்தது அரவிந்துக்கு.

“”ஒ ! அதான் வெளிய நின்னுகிட்டு இருந்தியா? சரி சரி, சீக்கிரம் பொய் எக்ஸாம் எழுத ஆரம்பி!” என்றார் ஆசிரியர்.

“ரொம்ப தேங்க்ஸ் வாட்ச் மேன்!” என்று புன்னகையுடன் தேர்வறைக்கு சென்று தேர்வு எழுத ஆரம்பித்தான் அரவிந்த். பிறகு தேர்வை வெற்றிகரமாக முடித்து விட்ட .அரவிந்த் மதியம் பள்ளி பேருந்தில் விடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அரவிந்த் தன்னுடைய சாக்குலேடின் நியாபகம் வந்தது.

பள்ளி பேருந்தின் சிறைய அதிர்வில் அரவிந்தின் பையில் கரகரவென சத்தம் கேட்டது.  உடனே தன் பையை திறந்து ஆராய்ந்தான் அரவிந்த். அவன் பையில் அவனுக்கு பிடித்த அந்த சாக்குலேட்கள் இருந்தன. அரவிந்துக்கு ஒரே சந்தோஷம்தான். தன் தம்பி தன் உணர்வை புரிந்து இந்த காரியத்தை செய்திருகின்றான் என்று எண்ணி மனம் குளிர்ந்த அரவிந்த் சாக்குலேட்களை சுவைக்க ஆரம்பித்தான்.

பள்ளி பேருந்திலிருந்து வீடு வந்து சேர்ந்தான் அரவிந்த். வாசலில் சஞ்சய் தேம்பி அழுதுக் கொண்டிருக்க அவன் அம்மா தேவி அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருப்பதை கண்டான் அரவிந்த்.

“என்னமா ஆச்சு?” என்று கேட்டான். அரவிந்த்.

“சஞ்சயோட உண்டியல் உடிஞ்சுப்ப் போச்சாம் அதான் அழுதுக் கிட்டு இருக்கான்.”என்று தலையில் கை வைத்தபடி கூறினார் தேவி.

“சஞ்சய் உனக்கு என்னோட உண்டியல் தரேண்டா!”என்றான் அரவிந்த்.

“வேணாம் போடா !”என்றான் சஞ்சய் அழுதபடி.

“நீ எனக்காக சாக்குடேட்லாம் வாங்கி பையில வச்சிருந்தியே...நான் உனக்கு உண்டியல் தரக்கூடாதா?”என்றான் அரவிந்த் சிரித்தபடி.

“போடா லூசு! எனக்கு சாக்குலேட் வாங்கிகவே காசில்லை உனக்கு எவண்டா வாங்கி வாங்கித் தருவான்” என்றான் தேம்பியபடி சஞ்சய்.

“அப்போ நீ வாங்கி வைக்கலயா? அம்மா நீங்க வச்சீங்களா?”என்றான் குழம்பிய படி அரவிந்த்.

“காலைல வீடு முடிச்சிட்டு உன் சித்தி வீட்டுக்கு சஞ்சயோட போயிட்டு இப்பதான் வந்தேன்.உனக்கு சாக்குலேட் வாங்க எனக்கு ஏது நேரம்?”என்றார் தேவி.

“என்ன சொல்றீங்க? அப்போ நீங்க என் ஸ்சூலுக்கு வரவே இல்லையா?” என்றான் அரவிந்த் அதிர்ச்சியாக.

“உனக்கு நெறைய கற்பனை சக்தி ஜாஸ்தி ஆயிடுச்சு போல....போய் முகத்தை அலம்பிட்டு வா “என்று சிரித்தபடி கூறினார் தேவி.

மீண்டும் ஒரு குழப்பத்தில் சிக்கினான் அரவிந்த்.

தொடரும்

Go to Bommuvin thedal episode # 02

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.