(Reading time: 8 - 16 minutes)

10. நீரும் நெருப்பும் - மோஹனா

திருச்சியில் வேளை முடிந்ததால் இரண்டாவது நாள் இறுதியில் சோலைபுரம் வந்து சேர்ந்தான்... அறையில் உலாவிக்கொண்டிருந்தவன் உள்ளுணர்வு காரணமாக அவளின் அறைக்கு வந்தான்... வந்தவன் அவளின் முகத்தில் திகைப்பை எதிர்பார்த்தான்....திகைப்பிற்கு பதிலாக பயத்தை காணவும் பதறினான்...

“என்ன அபி?. என்ன ஆச்சு?...”

Neerum neruppumபதில் அழுகையாக தான் வந்தது... புத்தகம் இருந்த திசையை பயத்துடன் நோக்கினாள்.. உடல் நடுங்கயது... அவளின் கண்ணில் நீரை காணவும், மேலும் பதறினான் அவன்... அவளின் அருகில் சென்று ‘என்ன ஆயிற்று?’ என்று கேட்டான்.. அப்போதும் பதிலில்லை.. அழுவது முட்டாள் தனம் என்று தோன்றினாலும் , நம் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களை சந்தோசத்திலோ, சோகத்திலோ, பயத்திலோ கண்டால், அவர்களை அறியாமலே கண்ணில் நீர் சுரக்கும்.. இது தெரிந்தமையால் அவளை மேலும் கேள்வி கேட்டு தொந்தரவு செய்யவில்லை.. அதே சமயம் அவளின் பயம், கண்ணீர் அவனை எதோ செய்யதது... அவளின் பயத்தை போக்க அவளை அணைத்து கொண்டான்.. அந்த அணைப்பில் அவளது அழுகை மெல்ல குறைந்தது, பயம் குறைய துவங்கியது.. ஒரு இதமான உணர்வு, பாதுகாப்பாக இருப்பது போல் உணர்ந்தாள் அவள்.... அழுகை, பயம் நின்றது.. தன் நிலை உணர்ந்து இருவரும் விலகிவிட்டனர்.. அவளின் முகத்தை கையில் ஏந்தி ‘என்ன ஆயிற்று? ஏன் அந்த புத்தகத்தை பார்த்து பயபடுகிறாய்?.’ என்று வினாவினான்..

அவளின் கண்களில் ஒருகணம் பய உணர்வு வந்து மறைந்தது.. அதை கண்டவன் குழம்பினான்.. அந்த புத்தகம் தான் இப்பொழுது அவளின் பயத்திற்கு காரணம் என்று தெரிந்து விட்டது... அவளை கையணைப்பில் வைத்துக்கொண்டு மீண்டும் அதே கேள்வியை கேட்டான்... இந்த முறை அவள் கண்களில் பயம் இல்லை.. உடல் நடுங்கவில்லை... அவன் வரும்முன் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டாள்... இப்பொழுது திகில் அடைவது ஹரியின் முறையாக இருந்தது... யாராவது விளையாடுகிறார்களா? என்று சந்தேகித்தான்.. எழுந்து அறை முழுவதும் நோட்டம் விட்டான்.. அவர்களை தவிர யாரும் உள்ளே இருப்பதாக தெரியவில்லை.. ‘பின் யார் பேசியிருப்பார்கள்?’ குழப்பத்துடன் அந்த புத்தகத்தை நோக்கி சென்றான்... அதை கையிலெடுத்து புரட்ட ஆரம்பித்தான்...  ஒன்றும் தெரியவில்லை... அதை கிழே வைத்துவிட்டு அதை வைத்திருந்த மேசையை ஆராய்ந்தான்... சந்தேகிக்கும் படி ஏதும் கிடைக்கவில்லை... பின் அதை சுற்றி ஆராய்ந்தான்.. அந்த மேசை அவளது தாய் வம்சத்தில் வாழ்ந்த ஒரு பெண் மணியின் புகைப்படத்திற்கு கிழே இருந்தது.. அந்த புகைப்படத்தை உற்று நோக்கினான்... பிரமாண்டமாய் அமைத்திருந்தார்கள்... அந்த புகைப்பாட தாங்கியில் இழுக்கும் வகையில் சின்னதாக ஓர் வளையம் அமைக்கபட்டிருந்தது.. அதை இழுத்தான்... அதில் சிறு மர அறை வெளியில் வந்தது... அதில் , இரும்பில் ஒரு அங்குல அளவில் உருண்டையாக ஒரு முனையில் இரும்பினாலான முத்தை இணைத்திருந்தனர்.... விரைவாக யோசிக்க ஆரம்பித்தான்... ‘இது இது .... இதை பற்றி நான் படித்திருக்கிறேன்... ஆனால், எங்கே?... ‘ அதையே உற்று நோக்கினான்.... அபி அவனையும் அந்த பொருளையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள்.... ஒரு பெருமூச்சுடன் அதை இருந்த இடத்தில் வைத்து விட்டு அவளை நோக்கினான்....

“என்ன அது?....”

“அது எனக்கும் தெரியவில்லை..... ஆனால், அதை பற்றி நான் படித்த நியாபகம்... பார்போம் நினைவு வருகிறதா என்று....”

“ம்ம்ம்.... நீங்க எப்போது வந்தீங்க...?.. எங்கே போனீங்க?... எதுவுமே என்கிட்ட சொல்லலை....” அவனை முறைக்கும் பாவனையில் கேட்டாள்...

அதில் தடுமாறிய படியே “நான் கொஞ்சம் முன் தான் வந்தேன்.... இந்த நேரத்தில் எல்லோரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், காலையில் பேசிக்கொள்ளலாம்னு அறைக்கு போய்டேன்... ஆனால், தூக்கம் தான் வரலை.... திடிர்னு உன்ன பாக்கணும் தோனுச்சு வந்துட்டேன்....”

“ம்ம்ம் .........” நம்பாத தோரணையில் அவள் பார்க்க, அவன் ‘ப்ராமிஸ்’ என்று சத்தியம் செய்தான்......

“நம்புறேன் நம்புறேன்.....”

“அது சரி நான் கேட்ட கேள்விக்கு பதிலே வரலை.....”

அவன் என்ன கேள்வி என்பதுபோல் பார்க்க “நீங்க எங்கே போனீங்க?..... “

“அது... ஒரு முக்கிய வேளை...”

“உங்களுக்கு இங்கே முக்கிய வேளை?...... உங்க வர்த்தகம் லண்டனில் தானே....”

“ஆனாலும் நீ இவ்ளோ ஷார்ப்பா இருக்க கூடாது....”

“ஹேலோ ... நோ சமாளிபிக்கேஷன் ...... ”

“ஓகே மேடம்.... அது சர்ப்ரைஸ்.....” என்று சொல்லி சிரிக்க, அவள் என்ன சர்ப்ரைசாக இருக்கும் என்று யோசிக்கும் பாவனை செய்தாள்...

“ரொம்ப யோசிக்காதே ......அதுக்கெல்லாம் தலையில் ஏதாவது வேணும்.... “

“ரொம்ப பண்ணாதிங்க மாமா.....”

“அப்பாடியோ! என் மாமன் பொன்னு என்னை மாமான்னு சொல்லிட்டா......”

“சரி சரி ... தூங்கலையா?.......”

“தூங்கனும் தூங்கனும்...... ஆனால், நீ தனியாக தூங்க வேண்டாம்... சுபாவை அனுப்புறேன்......”

“சரி........”

வன் சென்று சுபாவை அவளுடன் உறங்குமாறு அனுப்பிவைத்தான்... பின் அவன் அறைக்கு சென்று அவனும் உறங்கி விட்டிருந்தான்... சிறிது நேரம் பேசிவிட்டு தோழிகள் இருவரும் உறங்க எத்தனித்தனர்.. அப்பொழுது அபி அவளின் தலையணையை இருக்கமாக பற்றிய படி உறங்கி கொண்டிருந்தாள்... அது வித்தியாசமாக தோன்றினாலும் ஹரி அவளிடம் ‘அபி கொஞ்சம் பயந்திருக்கிறாள், அதனால் நீ இன்று அவளுடன் உறங்கு’ என்று சொல்லி அனுப்பியிருந்தான்... ஒரு வேளை பயத்தின் காரணமாக அவள் அப்படி பற்றிக்கொண்டிருக்கிறாலோ?... அப்படித் தான் இருக்கும்... அதன் பின் உறங்கி விட்டாள் சுபா... இரவில் தண்ணிர் குடிக்க சுபா எழுந்த பொழுதும் அபி அப்படியே உறங்கிக் கொண்டிருக்க சற்று யோசித்தாள்....

இது பயத்தின் தாக்கம் போல் தெரியவில்லையே!???.... மெதுவாக அவளை நகர்த்திவிட்டு அந்த தலையணையை எடுத்தாள்... அதன் அடியில் ஒரு புகைப்படம் இருந்தது .. அதில் ஒரு சின்ன பையன் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான்... கன்னத்தில் குழி.... காந்த கண்கள் .... குழந்தைக்கே உரிய சிரிப்பு... ‘நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தை .... ஆனால், இது யார் குழந்தை....?... இப்படி தலையணையில் வைத்து கொண்டு உறங்குகிறாலே!...‘ சற்று உற்று நோக்கினாள் ... எங்கையோ பார்த்த மாறி இருக்கே...... அட! நம்ம ஹரி தானே இது..... ஹரியின் வீட்டில் ஹேமா மாட்டியிருந்த படத்தின் இன்னொரு பிரதி தான் அது..... அடி சக்கை.... அபி நீ எங்கையோ போய்ட..... இது நாம ஹரிக்கு தெரிஞ்ச எப்படி ரியாக்ட் பன்னுவான்.... ம்ம்ம்ம் ...... சரி எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்... அதை தலையணையில் வைத்து விட்டு உறங்க சென்றாள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.