(Reading time: 8 - 16 minutes)

 

னிதாய் அமைந்தது அன்றைய காலை பொழுது... அன்று சித்திரை பௌர்ணமி .... அபியின் வீட்டில் விமர்சையாக கொண்டாடப்படும் தினம்.... கிரீம் நிற காஞ்சி பட்டில் தலையில் மல்லிகை சரம் அழகோவியமாய் இருந்தாள் அபி......

பூஜையறையில் தன் தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள் அபி.... அவளை கண்களால் பின் தொடர்ந்தவாறே ஹாலில் அமர்ந்திருந்தான்  ஹரி...... காலை பூஜை முடிந்ததும், பெரியர்வர் இருவரும் வேளை காரணமாக வெளியில் சென்றிருந்தனர்... பிரேமா சமையற்கட்டில் இருக்க, அபி பூஜையறையில் இருந்தாள்.... அவளின் இரு சுட்டி தங்கைகள் அபியின் அறையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.... அபியின் அறையில் இருந்த அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவளிடம் ஓடி வந்தனர்...

“அக்கா...... இதென்ன புக்..... உள்ளே ஒன்னுமேயில்லை.......”

திடுக்கிட்டு நிமிர்ந்தனர் அபியும் ஹரியும்....... முதலில் சமாளித்து கொண்டான் ஹரி....

“அது ஒன்னுமில்லை குட்டி சுட்டி, இது வெறும் நோட்.... புக் போல டிசைன் பன்ணியிருக்காங்க... அபிக்கு அவங்க ப்ரென்ட் ப்ரெசென்ட் பண்ணது.....”

“ஓஹோ...... அப்போ இந்தாங்க அக்கா.......... நீங்களே வச்சுகோங்க........” அவளிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டனர் அந்த வாண்டு குழந்தைகள்.....

அதை ஓரிடத்தில் வைத்து விட்டு வேலையை தொடர்ந்தாள் அபி.. ஹரியும் அதை அதற்கு மேல் கண்டு கொள்ளாமல், ஹாலில் அமர்ந்து அவனது மிக மிக்கிய வேலையை செய்துக் கொண்டிருந்தான்.... அப்பொழுது மெல்ல மெல்ல அந்த புத்தகம் ஒளி பெற துவங்கியது ..... இருவருமே முதலில் கவனிக்கவில்லை.... ஒளி குடிக் கொண்டே இருக்கவும் இருவரும் பயந்தனர்... அதை கையிலெடுத்த ஹரி திறக்க முற்படுகையில் வைரம் போல் மின்னியது அந்த புத்தகம்...... அவன் திறக்க முற்பட்டான். ஆனால், திறக்க முடியவில்லை... யாரோ வரும் சத்தம் கேட்கவும், பயந்து போனார்கள்...

“இப்போ என்ன செய்வது மாமா..?.......”

“எனக்கும் ஒன்றும் புரியவில்லை ... “

அபியை அழைத்துக் கொண்டே பிரேமா பூஜையறையை நோக்கி வந்தாள்... “அச்சோ அம்மா வராங்க.....அந்த சாமி வேற இது ரகசியமாய் இருக்கணும் னு சொன்னாரே....”

அவர்கள் குழம்பிகொண்டிருக்கையில் பிரேமா அவர்கள் கிட்டே வந்திருந்தாள்...

வர்களை காப்பாற்றும் விதமாக சுட்டிகள் இருவரும் அம்மா வென்று கத்த அங்கே ஓடி சென்றாள் பிரேமா.... அவர்கள் கத்தலில் அபியுமே பதறித் தான் போனாள்.... பயத்தில் ஹரியின் கையை பற்றியிருந்த அபி அவர்கள் கத்தவும் அவனையும் இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.... சட்டென ஒளி குறைந்தது.. பழைய நிலைமைக்கு திரும்பியது புத்தகம்..... அபி இதை முதலில் கவனிக்கவில்லை... ஹரி அவளை தடுத்துக்கொண்டிருந்தான்... அவனை தன் பிடியில் வைத்திருக்கிரோமென்று தெரியாமல், அவன் தடுத்ததில் கடுப்பான அபி

“என்ன மாமா?” சற்று அழுத்தமாகவே கேட்டாள்...

முதலில் அவன் புத்தகத்தை காட்டி பழையபடி வந்துவிட்டது என்றும் அவனின் கையை காட்டி சிரித்தான்.... புத்தகம் பழைய நிலை வந்துவிட்டதை எண்ணி பெருமூச்சு விட்டவள்... அவனின் அடுத்த சைகையில் முகம்சிவந்து ஓடிவிட்டாள்....

விஷ்ணுவுடன் திருச்சி சென்றிருந்தாள் சுபி... அவன் ஏதோ கிப்ட் வாங்கவேண்டுமென்று அவளையும் உடன் அழைத்து சென்றிருந்தான்..... தேர்வு செய்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்...

“சுபி அக்கா... உங்களுக்கு ரவி தெரியுமா ?....... சோழனோட நண்பர்....”

“ம்ம்ம்... தெரியும் விஷ்ணு... “

“அவருக்கு அடித்தது பாருங்க லக்கு.... திருவிழாக்கு வந்த இடத்தில் எதோ ஒரு பொண்ணை பார்த்து லவில் விழுந்துட்டாராம்... அவங்க வீட்டிலே பொண்ணு கேட்டு வரப்போறாங்களாம் .... அந்த பொண்ணு வீட்லையும் சம்மதம் சொல்லிட்டாங்க ....திருவிழா பாக்க வந்து பொண்ணெடுத்துட்டு தான் இந்த ஊரை விட்டு ஐயா நகர போறாரு.....”

“என்ன..............?.... யாரு பொண்ணு....?.....” அதிர்ந்தே விட்டிருந்தாள்... ஒரே ஒரு சந்திப்பு என்றாலும், அந்த ஒரு சந்திப்பிலே மனதை தொலைத்து விட்டிருந்தாள் அவள்.... அவளால் தங்கிக்கொள்ளவே முடியவில்லை... ஒருவேளை விஷ்ணு விளையாடுகிறானோ.. சந்தேகப் பட்டாள் ... அப்படியே இருந்தாலும் நான் அவரை விரும்புவது விஷ்ணுவிற்கு எப்படி தெரியும்... எண்ண ஓட்டங்களுக்கிடையே அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்... 

Go to Episode # 09

Go to Episode # 11

தொடர்ந்து பாயும்.......

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.