(Reading time: 22 - 44 minutes)

 

ர்ஷன் தன் இல்லத்திற்கு அழைத்தது மறந்துபோக அஸ்வத் இல்லையே... என்று கூறினான்.

“குட்.... நம்ம திருப்பூர் போறோம்... தேஜுவும் நிருவும் வராங்களாம்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை என்று சிறு ஏமாற்றத்தோடு கூறினான் அஸ்வத்.

“அவங்க இப்போதான் என்கிட்டேயே சொன்னாங்க, உனக்கும் சீக்ரம் செய்தி வரும் இது திடீர் பிளான்” என்று கூறிக்கொண்டிருக்கையில் அஸ்வத்தின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது... நிரஞ்ஜன் அனுப்பி இருந்தான். அதை கண்டதும் தானாக ஒரு முறுவல் தோன்ற, அதை கண்டவள் இப்போ சந்தோஷமா என்று பதிலுக்கு கேட்டாள்... வேறு ஏதும் கூறாமல் முறுவலை மட்டும் பதிலாக தந்தான் அஸ்வத்.

“சரி என்ன திடீர் பிளான்? இப்போ போய் என்னனு சொல்லி லீவ் கேட்குறது?” என்று இன்னும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் போல் அவன் வினவ, அவனை விநோதமாக பார்த்தவள், “இது உனக்கே அதிகமாக தெரியலை கடைசி செமஸ்டர் வந்திருச்சு இன்னும் கூட எப்படி லீவ் கேட்குரதுன்னு உனக்கு தெரியலை” என்று தலையில் அடித்துக்கொண்டாள். தொடர்ந்து “அது உன் பாடு நான் பிளான் சொல்லுறேன் சாமத்தியமா லீவ் வாங்கிக்கோ” என்று கூறிவிட்டு தங்களது பிளானை கூற துவங்கினாள்.

“நான், நீ, அண்ணி, அண்ணா நாலு பெரும் கார்ல போறோம்... தேஜுவும் நிருவும் பஸ்ல வந்துடுவாங்க” என்று கூறிக்கொண்டிருந்தாள். அனு பேசுவதை எல்லாம் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கவனித்தான் அஸ்வத்.

வியாழக்கிழமை காலை வகுப்பு துவங்கவும் மறக்காமல் அஸ்வதின் அருகில் வந்தமர்ந்தவன் “இந்த வாரம் வீட்டுக்கு வரத்தானே அஸ்வத்” என்று தர்ஷன் வினவினான்....

அப்போதுதான் அவனிடம் தான் வருவதாக சொல்லியிருந்தது நினைவு வர, “அச்சோ சாரி தர்ஷன் நான் இந்த வாரம் ஊருக்கு போறேன், நேத்து தான் அனு இப்படி ஒரு பிளான் இருக்குனே சொன்னாள்... நான் சுத்தமா மறந்தே போயிட்டேன்... இன்னொரு நாள் வரேன் தர்ஷன்” என்று அவன் கூறவும்.வெளியே எதுவும் காட்டிகொள்ளவிட்டாலும் மனதில் அவ்வளவு எருச்சலாக இருந்தது அவனுக்கு... போட்ட பிளான் எல்லாம் வீணாக போய்விட்டதே என்ற எண்ணம் அதுவும் அனுவின் மூலம் என்பதால் இன்னும் அதிகமாக கோவம் வந்தது அவனுக்கு... எங்கே போயிட போறான் இந்த வாரம் இல்லாட்டி இன்னொரு வாரம் என்று கருவியது அவன் உள்ளம்...

பிளான் போட்ட நேரத்தில் இருந்து வாரம் விறுவிறுவென சென்றுவிட, தேஜுவும் நிருவும் திருப்பூர் செல்லும் பேருந்தில் கிளம்பி இருந்தனர். மற்ற நால்வரும் ஒன்றாக காரில் விடியற்காலை கிளம்பிவிட, பேசிக்கொண்டே பயணத்தை ஆரம்பித்தனர். தேஜு நிரு வந்த பேருந்து தாமதம் ஆகிவிட, காலையில் இருவரும் ஒரே வேளையில் வந்து சேரும்படி ஆனது. அவர்களையும் சேர்த்து பேருந்து நிலையத்தில் இருந்து காரில் அழைத்துக்கொண்டு பயணத்தை தொடர நினைத்தனர்.

ஆனால் அனைவருக்கும் இடம் பத்தாமல் போக, அஸ்வத் ஒரு யோசனை தந்தான், “மாமா நானும் நிருவும் ஆட்டோல வீட்டுக்கு போயிடுறோம் நீங்க நாலு பேரும் கார்ல போயிடுங்க” என்று பதில் சொல்லி ஆட்டோ ஒன்றை பிடித்தான்.

அவனை மட்டும் தனியே அனுப்ப விருப்பம் இல்லாவிட்டாலும் இடம் பத்தாமல் போக வேறுவழி இன்றி சரியென ஒப்புக்கொண்டான் அர்ஜுன்.

போகும் வழியில் தேஜுவை வீட்டில் விட்டுவிட்டு அனுவும் மற்றவரும் வீடு திரும்பினர்.

வழக்கம்போல் அன்னையிடம் அனு செல்லம் கொஞ்சி கட்டிபிடித்து தாஜா செய்து என்று எல்லாம் நடந்துகொண்டிருக்க, அஹல்யாவிற்கு ஏக்கமாக இருந்தது... அவளது ஏக்கத்தை கண்களால் உணர்ந்தவன்...

“அம்மா நானும் அஹல்யாவும் காலைல சாப்பிட்டுட்டு அஹல்யா அம்மா வீட்டுக்கு போயிட்டு வரோம்..” என்று கூறவும், அளவில்லாத மகிழ்ச்சிதான் அஹல்யாவுக்கு... சொல்லாமலே அர்ஜுனும் புரிந்துகொள்ள மனம் நிம்மதியாக இருந்தது.

“இப்போதானே அர்ஜுன் வந்தீங்க ரெஸ்ட் எடுங்க மதியானமா சாப்பிட்டுட்டு சாயங்காலம் போகலாம்” என்று ஹேமா கூறினார்... அவருக்கும் தன் மகனோடு இருக்கவேண்டும் என்ற ஆசைதான், இதை கேட்டதும் அஹல்யாவின் முகம் சோர்ந்து போனது. ஓரகண்ணால் அதை கண்டவர், “evening போயிட்டு இரவு அங்கேயே தங்கிட்டு வாங்க...” என்று அவர் சேர்த்து சொல்லவும் தான் மீண்டும் பிரகாசம் ஆனது அஹல்யாவின் முகம்.

அஸ்வதிற்கும் வீட்டிற்குள் நுழையும் போது ஏதோ குறைந்தது போல் தான் உணர்ந்தான்... உள்ளே நுழைந்தாலே வாய் ஓயாமல் பேசும் அக்கா இல்லாமல் வெறுச்சோடி இருந்தது அவனுக்கு. இருப்பினும் அதையே எப்பொதும் எதிர்பார்க்க முடியுமா என்று நினைத்துக்கொண்டு எப்போதும் போல் தாயுடன் செல்லம் கொஞ்சினான். நிருவும் இன்னொரு மகன் போலதானே, அவனுக்கு கிடைத்த சலுகைகள் இவனுக்கும் கிடைத்தது.

ஒருவழியாக அசதி குறைய நன்றாக உறங்கி எழுந்தான் அர்ஜுன். அஹல்யாவிற்கு நாள் முழுதும் ஹேமாவோடு பேசுவதிலேயே சென்றது.. ஒவ்வொன்றாக விசாரித்தார். சென்னை வாழ்க்கை எப்படி இருக்கிறது, அர்ஜுன் நேரத்திற்கு வந்துவிடுகிறானா? என்றெல்லாம் கேள்விக்கேட்டு கொண்டிருந்தார்.

ஹேமா ஏதோ கேட்க நினைத்து அருகில் இருந்த அனுவை பார்த்துவிட்டு அஹல்யாவின் காதில் கிசுகிசுத்தார். முந்திரிபருப்பை ஒவ்வொன்றாய் கொரித்துக்கொண்டிருந்தவள் அவர்கள் சைகை கவனித்தாள்... ஹேமா ஏதோ கேட்க, அதற்கு அஹல்யா இல்லை என்பது போல் பவ்யமாக தலையாட்டினாள். அதை பார்த்த உடனே அவளுக்கு என்ன விஷயமாக இருக்கும் என்று புரிந்து போக, லேசான முறுவல் தோன்றியது இன்னுமும் இந்த உலகம் நம்பலை ஒன்னும் தெரியாத பிள்ளைன்னு நம்புது... என்று மனதில் நினைத்துக்கொண்டு தன் வேலையை செவ்வன செய்தாள்.

எப்போதும் போல் அஹல்யா அருகிலேயே நின்று அனு பேசிக்கொண்டிருக்க, ஹேமா அதட்டினார். “ஏய் வாழு ஒன்னு அண்ணிக்கு ஹெல்ப் பண்ணு இல்லை இடத்தை காலி பண்ணு வேலை பார்க்க வேணாமா???” என்று அதட்டவும்.. “அய்ய எனக்குலாம் சமைக்க தெரியாதுப்பா” என்று சிலிர்த்துக்கொண்டு சென்றாள்...

“ஹ்ம்ம் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எதெல்லாம் பெருமையா சொல்லிக்குரதுனே தெரியலை. சமைக்க தெரியாதுன்றது ஒரு பெருமையா???” என்று எப்பொதும் போல் நொந்துக்கொண்டார் ஹேமா.

அவரது புலம்பலை பார்த்த அஹல்யாவிற்கு உண்மை தானே சமையல் ஒரு கலை அல்லவோ, மனதிற்கு பிடித்தவர்களை வசீகரிக்க ஒரு துடுப்புஅல்லவோ என்று தோன்றியது. சமையலிலும், உணவு உண்டு ஓய்வெடுத்ததிலுமே நேரம் சென்றுவிட மாலை நேரமும் வந்துவிட்டது. அர்ஜுன் தன் உறக்கத்தை களைத்து கண்திறந்த பொழுது அஹல்யா தயாராகிக்கொண்டிருந்தாள். எங்கு என்று அவன் அறிந்தாலும் அவளை சீண்ட நினைத்து, “எங்கே லியா இவ்வளவு வேகமா கிளம்புற? எங்கயாவது போறியா??” என்று ஒன்றுமே தெரியாதவன் போல் நடித்தான்.

அவன் அவ்வாறு கேட்டதும் முகம் சோர்ந்து போய்விட்டது அவளுக்கு. அவள் முகம் பார்க்க பரிதாபமாக தோன்றிவிட, “சரி சரி அழுகாத போகலாம் போகலாம் யெப்பா... என்னமாய் முகம் மாறிடுது” என்று கிண்டல் செய்தவாறு அவள் அருகில் வந்தான். அவன் என்ன கூறியும் அவள் முகம் மாறவில்லை சோகமாகவே இருந்தாள்.

“சாரிடா இப்படி முகத்தை வச்சுக்காதேடி நல்லாவே இல்லை” என்று அவன் முகம் திருப்ப முயல அவள் வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்... அவள் கோவம் புரிந்துபோக, “சாரிடா கொஞ்சமா சிறியேன்” என்று அவன் கொஞ்ச அவள் உம்மென்றே முகத்தை வைத்துக்கொண்டு பதில் தந்தாள். “நான் எத்தனை மாசம் கழிச்சு எங்க அம்மாவை பார்க்க போறேன் தெரியுமா!?” என்று கூறினாள். அவள் சிறுபிள்ளை போல் சிணுங்குவதை பார்த்துவிட்டு, “சரிடா நான் சும்மா கிண்டலுக்கு தானே சொன்னேன் எனக்கும் அவங்க அம்மா மாதிரி தானே கூட்டிட்டு போகாம இருப்பேனா? அழகா சிரிங்க பாப்போம்...” என்று அவன் கூற அந்த செய்தியே அவள் முகத்தில் தானாக முறுவலை கொண்டுவந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.