(Reading time: 22 - 44 minutes)

 

ருவரும் சேர்ந்து கிளம்ப சோகமாக அமர்ந்து ஒரு ஜீவன் கை அசைத்து வழியனுப்பியது... வாசலுக்கு சென்றுகொண்டிருந்தவள் ஒரு யோசனை தோன்றிவிட நின்று ஹேமாவிடம் திரும்பி “அத்தை அனுவை நான் கூட்டிட்டு போகவா? அவளுக்கும் இங்க போர் அடிக்கும்ல நாளைக்கு வரும் போது கூட்டிட்டு வந்திடுறேன்” என்று அவள் விண்ணப்பிப்பது போல் பேசவும் ஹேமாவுக்கு தயக்கமாகவே இருந்தது. “இல்லை அஹல்யா நீங்க இரண்டு பேரும் போயிட்டு வாங்க இவள் எதுக்கு அங்க...” என்று தயங்கினர். என்னதான் சம்பந்தி வீடு என்றாலும் அங்கு அர்ஜுனும் அஹல்யாவும் போவதற்கும் அனு போவதற்கும் வித்தியாசம் இருக்கிறதே என்று தோன்றிவிட, மறுத்துக்கொண்டிருந்தார். இவர்கள் மாறி மாறி பேச அனுவின் முகம் மாறி மாறி சந்தோஷத்தையும் சோகத்தையும் காட்டிக்கொண்டிருந்தது. அவள் அங்கே போக விரும்புகிறாள் என்று அவள் முகமே காட்டிக்கொடுக்க, அதை கவனித்த வெங்கட், “விடு ஹேமா ஒரு நாள் தானே போயிட்டு வரட்டும்” என்று அவரும் பரிந்துரைக்க ஹேமா ஒத்துக்கொண்டார்.

சந்தோஷமாக அர்ஜுன் அஹல்யா அனு கிளம்பிவிட, கார் பறந்தது. என்னங்க கொஞ்சம் மெதுவாவே போங்க என்று கூறினாள் அஹல்யா.

“ஏண்டி என்ன பண்ண போற?”

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?” என்று கூறிவிட்டு தன் கைபேசியை எடுத்தாள். மறுமுனை 2 முறை ஒலி எழுப்பி அழைப்பை எடுத்தனர்.

ஹலோ ஆன்டி நான் தான் அஹல்யா பேசுறேன் அனுவோட அண்ணி...

....

“நான் நல்லா இருக்கேன் ஆன்டி, நீங்களும் அங்கிளும் எப்படி இருக்கீங்க?”

....

“அப்படி எல்லாம் இல்லை ஆன்டி இதோ இப்போ அங்க தான் வரோம்....”

....

“சரி ஆன்டி வச்சிடுறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு அர்ஜுனை பார்த்தாள்.

“சரி அர்ஜுன் தேஜு வீட்டுக்கு போங்க பார்ப்போம்...” என்று ஆணை இடுவது போல் கூறினாள்.

“அது மகாராணி பேசும் போதே புரிஞ்சிது ஆனால் எதுக்கு இப்போ அங்கேன்னு சொல்லவே இல்லையே மகாராணி” என்று பவ்யமாக கேட்டான்.

அவனது செயலில் சிரிப்பு வந்தாலும், “அதெல்லாம் சொல்ல முடியாதுப்பா போக சொன்னா போக வேண்டியது தானே” என்று கூறிவிட்டு மிடுக்காக பார்த்தாள்.

“அது சரி” என்று கூறி தலை அசைத்தான் அர்ஜுன். இருவரின் செயலையும் கவனித்த அனுவிற்கும் ஏன் அஹல்யா அங்கே போக சொல்கிறாள் என்று புரியவில்லை இருப்பினும் அங்கே இருக்கும் நேரம் வரை தேஜுவோடு நேரம் செலவலிக்களாமே என்ற எண்ணமே சந்தோஷமாக இருந்தது அவளுக்கு.

பேசிக்கொண்டே சென்றுவிட தேஜுவின் வீட்டிற்கும் வந்துவிட்டனர். திருமணம் நடந்து பல மாதங்கள் கடந்தாலும் புதுமண தம்பதியர்கான கவனிப்பெல்லாம் அமோகமாக இருந்தது. இனிமையான உரையாடல் லதாவும் சரி அவரது கணவரும் சரி வயதிற்கேற்றார் போல் பேசுவதில் சளைத்தவர்கள் இல்லை... அவர்களின் இனிமையான பேச்சிலேயே நேரம் கடந்துவிட, அஹல்யா துவங்கினாள்.

“ஆன்டி நாங்க இப்போ என் அம்மா வீட்டுக்கு போறோம் தேஜுவையும் கூட்டிட்டு போறோம் ஆன்டி அவளுக்கும் பேச்சு துணைக்கு ஆள் கிடைச்ச மாதிரி இருக்குமில்லை” என்று இங்கேயும் அதே பாடலை இசைத்தாள். அவள் கேட்பாள் என்று அர்ஜுன் அனு இருவருமே எதிர்பார்க்கவில்லை எதுக்கு இப்போ இவள் ஆள் சேர்த்துக்கிட்டு இருக்காள் என்று யோசித்தாலும் பிறகு கேட்டுகொள்ளலாம் என்று விட்டுவிட்டான் அர்ஜுன்.

தேஜுவின் பெற்றோரும் தயங்கினர். ஆனால் தன் பேச்சிலேயே அவர்களை சமாளித்து அவளையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள் அஹல்யா. 

தேஜுக்கு நிருவை மீண்டும் பார்க்க போகும் ஆவல் இருந்தாலும் அதைவிட அனைவரும் சேர்ந்து இருந்தாள் நேரம் செல்வதே தெரியாமல் இனிமையாக செல்லும் என்ற சந்தோஷத்தில் இருந்தாள். அனுவிற்கும் அதே சந்தோஷம் தான் ஆனால் அஹல்யாவின் வீட்டில் திடிரென்று காரணம் இல்லாமல் தங்கவும் தயக்கமாக தான் இருந்தது.. அஹல்யா அனைவரும் சேர்ந்து இருந்தாள் நன்றாக இருக்கும் என்று தோன்றிவிடவே இருவரையும் அழைத்து சென்றாள் அதற்கேற்றார் போல் துளசியிடமும் இருவரின் வருகையையும் சொல்லி இருந்தாள்... அரட்டை பேச்சோடு வீட்டை அடைந்தனர் நால்வரும்.

இருவரும் எதிர்பார்க்காத வண்ணம் துளசி வெகு இயல்பாக பேசி வரவேற்க, சூழ்நிலை இதமாக சென்றது. தேஜுவும் அனுவும் நுழையவும் அஸ்வத்தும் நிருவும் ஒருவரைஒருவர்  பார்த்து ரகசியமாக சிரித்துக்கொண்டனர். அதை கண்ட அஹல்யா உள்ளே செல்லும்போதே யாரும் அறியாமல் இருவரின் காதையும் பிடித்து மெதுவாக திருகி, “ஏய் கேடி பசங்களா உங்களுக்காக கூட்டிட்டு வரலை ஒழுங்கா வாலை சுருட்டி வச்சிட்டு இருங்க புரியுதா?” என்று கிண்டல் செய்யவும் இருவருக்கும் சிரிப்பாக வந்தது மேலும் நல்ல பிள்ளைகள் போல் தலையை ஆட்டி நடித்தனர். அன்று இரவு வெகு நேரம் சேர்ந்து அரட்டை அடிக்க, அர்ஜூனால் தான் ஈடுகுடுக்க முடியாமல் போனது. நால்வரும் போர் அடித்தால் கடைசியாக அர்ஜுனை வாருவதையே வேலையாக வைத்திருந்தனர். அஹல்யா மட்டுமே காக்கும் தெய்வமாக இருந்து அர்ஜுனை பாதுகாத்தாள்.

நன்றாக பேசிவிட்டு முன்னரையிலேயே அமர்ந்த இடத்திலேயே உறங்கி போனனர் ஐவரும். காலை அனு கண் விழித்து பார்க்கும் பொழுது அனுவும் தேஜுவும் மட்டும் ஒரு அறையில் படுத்திருந்தனர். எப்போது தூங்கினாள் எப்போது அங்கு வந்து படுத்தனர் எதுவும் அறியாமல் தூங்கிபோனாள்.

கையில் காபி கோப்பைகளோடு ஒவ்வுருவராக எழுப்பிவிட்டாள் அஹல்யா. “ஹே கிளம்புங்க கிளம்புங்க...”

“எங்க அண்ணி?” என்று தூக்கத்தோடு கேட்டாள்

“எல்லாம் நம்ம அடுத்த ஹீரோயினை பார்க்கத்தான்” என்று கூறவும் அவசர அவசரமாக தயாராகி சென்றனர் மூவரும். அவர்களை தொடர்ந்து அர்ஜுன் அஸ்வத் நிருவும் சென்றுவிட இப்பொது கலைகட்டியது அர்ச்சனாவின் வீடு...

டபடவென கதவை தட்ட, அன்புக்கரசி பயந்துபோய் கதவை திறந்தார். அங்கே அஹல்யாவும் அவளை சுற்றி அனைவரும் நிற்க, “அட வாலுங்களா நீங்க தானா வாங்க வாங்க...” என்று அன்பாக அழைத்தார் அன்புக்கரசி.

முகத்தை மிடுக்காக திருப்பிக்கொண்ட அஹல்யா, “நாங்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்திருக்கோம்” என்று கூறவும் அன்புக்கு சிரிப்பாக இருந்தது. “ அச்சோ அப்படியாங்க வாங்க வாங்க” என்று பவ்வியமாக உள்ளே அழைத்து சென்றார்.

உள்ளே நுழைந்த ஆண்கள் அனைவரும் அமைதியாக வெளியே அமர்ந்துவிட, பெண்கள் மூவரும் படுக்கை அறைக்கு சென்று ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த அர்ச்சனாவை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

“ஏய் அர்ச்சு எழுந்திரிடி....”

“ம்ம்ம்ம்....”

“அக்கா எழுந்திரிங்க...”

“ம்ம்ம் ம்ம்ம் இன்னும் கொஞ்ச நேரம்மா....”

“யாரு எழுப்புராங்கனு கூட தெரியாம தூங்குரதை பாரேன்” என்று இடுப்பில் கையை வைத்துக்கொண்டு தோரணையாக தூங்குபவளை பார்த்தாள் அஹல்யா. இடையில் அனு மீண்டும் எழுப்ப முயழ, அவள் வாய்பொத்தி, “அர்ச்சும்மா யாரு வந்திருக்கா பாரேன், உன் நவீன் மாமா வந்திருக்காங்க எழுந்திரிடா” என்று ஒரு ராகத்தோடு அஹல்யா கூறிமுடிக்கவும், அர்ச்சனா சட்டென எழுந்து அமரவும் சரியாக இருந்தது. அவளது செயலைகண்டு மூவரும் சேர்ந்து சிரிக்க, வெட்கத்தில் தன்மேல் இருந்த போர்வையை இழுத்து முகத்தை மறைத்துக்கொண்டாள் அர்ச்சனா.

“ஹே பாருடா அர்ச்சனாவுக்கு வெட்கமெல்லாம் வருது...” என்று கிண்டல்களில் முதல் வசனத்தை கில்லிபோட, உடனேயே அர்ச்சனா சுதாரித்துக் கொண்டு “நான் போய் பல்லு விளக்கிட்டு வரேன்” என்று கிடுகிடுவென ஓடிவிட்டாள். அவளது செயல்களை கண்ட அஹல்யாவிற்கு சிரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.