(Reading time: 22 - 44 minutes)

 

ர்ச்சனா திரும்பி வந்ததும், பின்புறம் உள்ள தோட்ட பகுதியில் மொத்த கூட்டமும் அமர்ந்தது. அவர்களோடு சேர்ந்து அமர்ந்து அன்புகரசியும் கவனித்து கொண்டிருந்தார். எப்போதும் போல் சின்னதாக ஆரம்பித்த கிண்டல் வெகுவாக உயர, அர்ச்சனா சிணுங்க துவங்கினாள்... “அம்மா இங்க பாருங்கம்மா” என்று அன்புவிடம் தஞ்சம் தேட, அவரோ “எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைப்பா” என்று சிரித்தவாறே கலந்துக்கொண்டார். அந்த நேரம் பார்த்து நவீனும் அர்ச்சனாவின் கைபேசிக்கு அழைக்க, “ஓஓஓஓ....” என்று ஒரே கூராஸ் தான். அர்ச்சனாவிற்கு வெட்கம் இன்னும் அதிகமாகிவிட்டது. அவளிடம் இருந்து கைபேசியை வாங்கி அர்ஜுன் அட்டென்ட் செய்தான்.

“ஹாய்... சனா...” என்று உற்சாகமாக மறுமுனை ஒலிக்க, அர்ஜுன் பதிலுக்கு குலைவது போல “ஹலோ....மாமா...” என்று ராகமாக இழுத்தான்.

குரலை உடனே கண்டுக்கொண்டவன், “நினைச்சேன்டா நீங்க திருப்பூர் போறதே என் பொண்டாட்டியை கிண்டல் செய்யத்தானோனு நினைச்சேன் கரெக்டா போச்சு” என்று அவன் பேசுவதை எல்லாம் ஸ்பீக்கர் மூலம் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அவன் அப்படி கூறவும் மீண்டும் அனைவரும் சேர்ந்து கத்த “டேய் எத்தனை பேருடா அங்க இருக்கீங்க பாவம்டா என் சனா” என்று பரிந்து பேசினான். அவன் பேசுவதற்கெல்லாம் அர்ச்சனா வெட்கபட்டுக்கொண்டு மேலே பேசவேண்டாம் என்று சொல்ல வந்தவளை மிரட்டி அமைதியாக உட்கார வைத்தனர். “எனக்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்ட இரு உன் தங்கச்சி பேசனுமாம்” என்று கூறி அர்ஜுன் அஹல்யாவை பேசவிட்டான்.

“அண்ணா...”

“தங்கச்சி சொல்லும்மா....”

“என்ன அண்ணா அங்கே சத்தம்ம்ம்ம்ம்???”

“சத்தமா ச்சே ச்சே அதெல்லாம் சும்மா... உளுலாய்க்கு...” என்று பயந்து பேசுவது போல் நடித்தான்.

“நாங்க இப்படிதான் உங்க அத்தை பொண்ண கிண்டல் பண்ணுவோம் ஏதாவது objection இருக்கா அண்ணா???” என்று கேட்கவும் பட்டென மறுத்துவிட்டான் நவீன்.

“தங்கை சொல்மிக்க மந்திரம் உண்டா சொல்லு நீ எப்படி வேணும்னாலும் கிண்டல் பண்ணிக்கோடா...” என்று மொத்தமாக விழுந்துவிட்டான். அவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் சிரிப்பாக இருந்தது. அர்ச்சனா மட்டும் பொய்யாக முறைத்து கொண்டிருந்தாள்.

அழைப்பை சிறிது நேரம் பேசிவிட்டு துண்டிக்கவும் பழையபடி நேரம் செல்வது தெரியாமல் பேச துவங்கினர். இடையில் அன்பு எழுந்து, “சரி நீங்க பேசிகிட்டே இருங்க நான் போய் நீங்க சாப்பிட ரெடி பண்ணுறேன்” என்று கிளம்பியவரை “அதெல்லாம் கொஞ்ச நேரம் ஆகும்மா நீங்க குடிக்க மட்டும் காப்பி எடுத்திட்டு வாங்க” என்று கூறினாள் அர்ச்சனா. அவரும் காபி கொண்டுவர சென்றுவிட, அர்ச்சனா அஹல்யாவின் பக்கம் திரும்பி “நீ என்ன அவர் பக்கமே பேசுற? நீ மணப்பெண் தோழி இல்லையா?” என்று போட்டியாக கேட்டாள்.

“நானா? யாரு சொன்னது? நான் மாப்பிளை வீட்டு சைடுப்பா... இது எங்க அண்ணன் கல்யாணமாக்கும்” என்று மிடுக்காக கூறினாள். அர்ச்சனாவின் முகம் சுருங்கிவிட, அர்ஜுன் அவளுக்கு பரிந்துப் பேசினான். “அவள் கிடக்குறாள் அர்ச்சனா, அண்ணா நான் இருக்கேன்ல” என்று பரிவாக பேசினான்.

“பாருடா தங்கச்சி பாசமாக்கும்...” என்று அஹல்யா இழுவையாக கூறிவிட்டு, “அப்போ இப்பவே செட்டு பிரிக்க வேண்டியது தான். நானும் அர்ஜுனும் மாப்பிள்ளை பக்கம்பா... நிரு நீடா?” என்று அஹல்யா கேட்கவும் திருதிருவென அக்காகள் இருவரையும் பார்த்தான்.

அவனை சில நொடிகள் பார்த்த அர்ச்சனா “அவனை ஏன் கேட்குற?? அவன் என் தம்பி என் பக்கம்தான் இருப்பான். என் தம்பியா மாப்பிள்ளைக்கு எல்லா சடங்கும் இவன்தான் செய்ய போறான்” என்று கூறி அவன் தோள்களில் கை போட்டுக்கொண்டாள் அர்ச்சனா. அவளது பேச்சில் நிருவின் கண்கள் சட்டென கலங்கிவிட, உடனே சுதாரித்தும் கொண்டான். அவனுக்கு மனம் படுகுஷியில் இருந்தது. இருவரையும் அக்கா என்று அழைத்துதான் பழக்கம் எனினும் இந்த அளவிற்கு உரிமை கிடைக்கும் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை நிரஞ்ஜன். கடைசியாக மிச்சமிருப்பது அனுவும் தேஜுவும் இருவரும் நிருவை போல் இருவரையும் மாறி மாறி பார்க்க, நொடியில் சுதாரித்து, “தேஜு என் பக்கம் அனு உன் பக்கம்” என்று கூறி குழப்பத்தை நிறுத்தினாள் அஹல்யா. என்னவோ அனு வெகு தூரம் தள்ளி சென்றதுப் போல் அஸ்வத் அஹல்யாவை முறைக்க, “டேய் அறிவாளி அவளும் நவீன் அண்ணாவை அண்ணானு கூப்பிட்டால் முறை மாறும்டா” என்று அஹல்யா கிசுகிசுத்த பின் தான் முகம் தெளிந்தது அவனுக்கு.

ஒருவழியாக எல்லா கதைகளும் பேசி பேசி வாய் வலித்தது அனைவருக்கும். இரண்டு மூன்று முறை துளசி சாப்பிட அழைத்துவிட, அஹல்யா கொஞ்ச நேரத்தில் வருவதாக கூறிவிட்டு அன்பு கொண்டுவரும் காப்பியை வாங்க எழுந்தாள். கண்கள் லேசாக இருட்ட சிறிது கண்மூடி திறந்தவள் அடுத்த நொடி மயக்கம் இன்னும் அதிகமாக தடுமாறி விழசென்றாள். அருகிலேயே நின்றிருந்த அர்ஜுன் சட்டென அவளை கையில் தாங்கிவிட, முழுதாக தோய்ந்து விழுந்தாள் அஹல்யா. (கரெக்ட்டுங்க அதே தான் நீங்க நினைக்குரதுதான்)

சில நிமிட பரபரப்பிலேயே மயக்கத்தின் காரணம் கண்டுபிடித்துவிட, அனைவருக்கும் இருப்புக்கொள்ளவில்லை. கண்கள் மூடி இருந்தவளின் நினைவு திரும்ப தவம் புரிந்தான் அர்ஜுன். செய்தி தெரிந்த அடுத்த நொடியே அஸ்வத்தும் நிருவும் துளசிக்கும் கண்ணனுக்கும் செய்திகூற சென்றுவிட்டனர். அனு ஒருபுறம் தன் அன்னையை கைபேசியில் அழைக்க, தேஜு அவளது தாய்க்கு அழைத்தாள். இதற்கிடையே அர்ச்சனா நவீனுக்கு அழைத்து அஹல்யா கருவுற்றிருக்கும் செய்தியை கூறினாள். அனைவருக்கும் மகிழ்ச்சியே... அஹல்யா கண்விழிக்கவும் அர்ஜுனையும் அவளையும் தனியேவிட்டு நகர்ந்தனர் அனைவரும்... இதற்காகத்தானே காத்திருந்தான் அவன். அவனை நோக்கி எழுந்த அவளின் கரத்தை இறுக பற்றிக்கொண்ட அர்ஜுன் அதில் மெல்லியதாக இதழ் பதித்து அவளை மென்மையாக தன்னோடு அணைத்துக்கொண்டான். தன்னுள் ஒரு உயிரை சுமக்கபோகும் ஆனந்தம் அஹல்யாவிற்கு என்றால், தந்தை என்ற ஸ்நானத்தை பெற்றுவிட்ட மகிழ்ச்சி அர்ஜுனுக்கு... தன் உயிரான லியாவையும் அவள் வயிற்றில் உருவாகிருக்கும் தன் உயிரையும் சேர்த்து அணைத்துக்கொண்டு வெகுநேரம் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

ரு வழியாக எல்லா பெற்றோரும் வந்து பார்த்து இன்ப செய்தியை கொண்டாடிவிட்டு சென்றுவிட, சென்னை வாசிகள் எல்லாம் காரில் கிளம்பினர். போகும்முன் அனு தேஜுவிடம் பத்திரமாக செல்லும்படி கூறிவிட்டு கிளம்பினாள். என்னதான் தேஜுவும் நிருவும் சேர்ந்து செல்வது சிறியவர்களுக்கு தெரிந்தாலும் பெரியவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டனர். விடைபெற்று கிளம்பிய அஹல்யாவிடம்... “ஏய் பத்திரமா பார்த்துக்கோடி ரொம்பல்லாம் வேலை செய்ய வேண்டாம் சரியா?” என்று அக்கறையாய் கூறினாள் அர்ச்சனா. “ஆமா ஆமா பத்து குழந்தை பெற்ற கிழவி நீ சொன்னாள் சரிதான்” என்று அந்த நேரத்திலும் கிண்டல் செய்து கிளம்பினாள் அஹல்.

“இனிமே எப்படி இப்படி எல்லாரும் சேருறது?” என்று சோகமாக கேட்ட அர்ச்சனாவிடம். “ஏன் உன் கல்யாணம்தான் அடுத்து.... கூடிய சீக்கரமே உன் கல்யாணத்துல சேரத்தானே போறோம்” என்று அவளையும் தேற்றிவிட்டு அனைவரும் அவரவர் இடத்திற்கு கிளம்பினர்...

கூடிய சீக்கரம் அர்ச்சனா நவீன் கல்யாணத்தில மீட் பண்ணலாங்க எல்லாரும் வாங்க...         

Go to Kadhal payanam # 15

Go to Kadhal payanam # 17

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.