(Reading time: 21 - 42 minutes)

02. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

ஆர்பரிக்கும் கடல் அலை நான்!

அமைதியான நிலவு நீ !

நான் ஓயாமல் பேசியதை எல்லாம்

அயராமல் கேட்டுக் கொண்டாய்

மெல்லிய புன்னகையுடன்!!!!

Nenjamellam kathal

டலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி சட்டென்று மதுவின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

ரசனையும் குறும்பும் கலந்த புன்னகையுடன் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் மதுமிதா.  "ஹேய் நீ இங்க எப்படி வந்த? யார் கூட வந்த? ஆமா  உனக்கு கவிதை எல்லாம் வருமா? என்கிட்ட சொன்னதே இல்ல...."

" கூல் கூல், எவ்வளவு கேள்வி அப்பப்பா..  நான் இங்க உட்காந்து அப்புறமா பதில் சொல்லலாமா?"

" ஹ்ம்ம் உட்காரு, என்ன இந்த பக்கம்"

" ஏன் இந்த டைம்ல மெரினா பீச்சுக்கு நீ தான் வரணும்னு புது சட்டம் போட்டிருக்காங்களா, நான் என் friend கூட வந்தேன் அவன் முக்கியமான வேலை இருக்குனு பாதியில ஓடிட்டான், எனக்கு பீச் ரொம்ப பிடிக்கும் அதான் அப்படியே நடந்துட்டு இருந்தேன் இங்க பாத்தா சார்  மெய் மறந்து கடல பார்த்துட்டு இருந்தீங்க"

"ஓஹோ அப்படியா, ஆமா அது என்ன கவிதை எல்லாம் புதுசா இருக்கு"

"ம்ம்ம் புதுசு இல்ல, சின்ன வயசுல இருந்தே கவிதைனா ஆர்வம், 10த் படிக்கும் போது விளையாட்டா கிறுக்க ஆரம்பிச்சேன் அதை பார்த்துட்டு friends எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நிறைய எழுது அப்படி இப்படின்னு உசுப்பி விட்டுட்டாங்க, அதான் இப்படி எல்லாம்"

"ஓஹோ"

"இவ கண்ணா பின்னான்னு உளறதை  எல்லாம் நம்ம கேட்க வேண்டி இருக்கேன்னு தான?"

“ச்சே ச்சே.. நிஜமாவே கவிதை நல்லா இருந்துச்சு மது, இது மட்டும் தான இன்னும் எதாவது இருக்கா"

"ஏன் இல்ல, டான்ஸ் ஆடுவேன் ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் ஸ்டேஜ் பெர்பாமன்ஸ் பண்ணிருக்கேன், அப்புறம் கொஞ்சமா பாடுவேன் ஐயம் பாத்ரூம் சிங்கர் தெரியுமா"

"ம்ம்ம் தெரியாதுங்களே மேடம், இன்னும் எதாவது இருக்காங்க " என்று கைகளை கட்டிக் கொண்டு பவ்யமாக அவன் கேட்க விழுந்து விழுந்து சிரித்தாள் மது.

"ஹேய் ஹேய் ஸ்டாப் இது அவ்ளோ பெரிய ஜோக் இல்ல மா யூ கண்டின்யூ"

"ம்ம்ம் இப்போதைக்கு அவ்ளோ தான்"

"ம்ம்ம்"

"நீ பேசவே மாடியா ஆதி எப்பவும் அமைதியா இருக்க?"

"யாரு நானா? வீட்ல கேட்டு பாரு எப்போடா இவன் வாயை மூடுவானு அம்மாவும் அக்காவும் நொந்து போயிடுவாங்க"

"ஓஹோ அவனா நீ?  "

"ஏய் என்ன?"

"சும்மா சொன்னேன் ஒண்ணுமில்லை"

"ம்ம்ம் பரவால, எனக்கு பிடிச்சவங்க என்கூட நெருக்கமா இருக்கவங்க கூட தான் நான் மனசு விட்டு பேசுவேன் அவங்களுக்கு தான் என் உண்மையான கேரக்டர் தெரியும்"

"ஒ.. ஆமா அப்படி என்ன பார்த்துட்டு இருந்தநான் வரும் போது"

"அலையை தான்… அலை ரொம்ப அழகா இருக்குல்ல மது எனக்கு எப்போ மனசு சரி இல்லனாலும் இங்க தான் வருவேன் கொஞ்ச நேரம் இந்த அலைகள பார்த்தாலே மனசு லேசாகிடும் தெரியுமா இட்ஸ் என் அமேசிங் பீலிங் "

என்று கூறி தன்னையே மறந்து அலைகளை பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தவனை வியந்து பார்த்தாள் மது.

"என்னை மாதிரியே இருக்கான்"மனதில் குறித்துக் கொண்டாள்.

மொபைல் வெகு நேரம் சிணுங்கி அமைதியானது.அன்றைய நினைவுகள் மனதை ஒரு புறம் அரிக்க வேதனையும் வெறுப்பும் அதிகமாயின. எப்போது வந்தாலும் மனதை இனிமையாக்கும் கடல் கூட இப்போதெல்லாம் ஏனோ பிடிப்பதில்லை ஆதிக்கு. அது தானே அவளை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறது. நிஜ உலகிற்கு வந்து கண்களை சுழல விட்டான் லேசாக இருட்டி விட்டிருந்தது. மீண்டும் அலைபேசி சிணுங்க எரிச்சலுடன் அதை எடுத்தவனின் கண்களில் கனிவு தென்பட சிறு முறுவலுடன் ஆன் செய்து பேசினான்.

"ஹலோ பிசாசு என்னடி விஷயம்"

"எருமை எத்தன தடவ அக்கானு கூப்பிடுன்னு சொல்லிட்டேன்"

"போடி அதெல்லாம் முடியாது , ஆமா மாம்ஸ் எங்கே?"

"அவரு ஜாக்கிங் போயிருக்காரு டா"

"ஓஹோ என் குட்டி ஏன்ஜல் என்ன பண்றா?"

"அவ தூங்குறா டா"

"ஹேய் இப்போ மணி 6 தான ஆகிருக்கும் என்ன மார்னிங் கால் பண்ணிருக்க, எதாவது ப்ரோப்ளேமா"

"ஆமா டா பெரிய ப்ரொப்லெம் தான்"

"ஏய் என்னடி சொல்ற யாருக்கு என்ன ஆச்சு, அம்மா நல்லா தான இருக்காங்க" 

"அவங்க நல்லா இருக்க தான் நீ லூசு தனமா என்னென்னமோ பண்றியே டா, அவங்களுக்கு வேற என்ன வேணும்"

தெரியும் ஆதிக்கு அவள் எதை கோடிட்டுக் காட்டுகிறாள் என்று தெரியும் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மௌனம் சாதித்தான்.

"பேசு டா நான் கேட்கறது காதுல விழலையா"

"என்ன தனா உன் பிரச்சனை இப்போ"

"சரி நேரா விஷயத்துக்கு வரேன் கல்யாணத்துக்கு சம்மதம்னு அப்பா கிட்ட சொன்னியா?"

"ஆமா"

"நிஜமாவே உனக்கு சம்மதம் தானா"

"ஆமா இதவே ஏன் கேட்டுட்டு இருக்க" , குரலில் எரிச்சலுடன்.

"அப்படி என்ன தான் டா உனக்கு பிடிவாதம்"

கோபம் ஆராதனாவிற்கு. தம்பி தன் கண் முன்னாலேயே கஷ்ட பட்டுக் கொண்டிருந்தும் எதுவும் செய்ய இயலவில்லையே என்கிற இயலாமை தந்த கோபம். எப்படியவுது சீர் செய்து விட மாட்டோமா என்கிற தவிப்பு. ஆனால் இவையெல்லாம் ஆதிக்கு புரிந்தால் தானே.

"ப்ளீஸ் ஆரு சேஞ்ஜ் தி டாபிக்"

"இதுக்கு மேல உன் இஷ்டம் டா, எப்போ இந்தியா வர?"

"இன்னும் ஒரு வாரத்துல"

"ஸ்வேதா கிட்ட பேசிட்டியா, அவ என்ன சொல்றா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.