(Reading time: 21 - 42 minutes)

வ்வளவும் செய்த உயிர் தோழிக்காகவும், உயரினும் மேலான ஒருவனுக்காகவும் தான் மது இன்று மாறியிருப்பது.

வகுப்பு முடிந்து மாணவிகள் செல்லவும், ப்ரிஷனுடைய அட்டகாசம் பொறுக்காமல் மேகா மதுவை தேடி வரவும் சரியாக இருந்தது.

"ஹேய் ஏன் டி இப்படி வர?"

"எல்லாம் இந்த வாழு பண்ற வேலை தான் எப்படி தான் உங்க அண்ணி இவன சமாளிக்கறாங்க"

"ஹிஹிஹி, விடுடி கொழந்த தான"

"ம்ம்ம் ஏன் மா சொல்ல மாட்ட என்கிட்டே விட்டுட்டு மேடம் ஹாயா வந்துடிங்க, எனக்கு தான என் பாடு தெரியும், அப்புறம் அண்ணா சீக்கிரமா வீட்டிற்கு வர சொல்லி மெஸ்சேஜ் பண்ணி இருந்தார் "

"ஹ்ம்ம், கிளம்பலாமா?"

"ஓகே டி கிளம்பலாம்"

பரிஷன் அடம் பிடித்ததால் பள்ளியில் இருந்து கிளம்பி மூவரும் ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று ஐஸ்க்ரீமை சாப்பிட்டு விட்டு ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மேகாவிடம் விசாரிப்பு எல்லாம் முடிந்ததும் திவாகர் மதுவிடம் பேச தொடங்கினான்.

" மிது நீயும் சென்னைக்கு எங்களோட வரியா?"

"ஐயோ இல்லைண்ணா ஷோ இருக்கு"

"ரெண்டு நாள்ல வந்துடலாம் மிது உங்க அண்ணியும் ரொம்ப ஆச படற"

"ஆமா மிது நீயும் வா எனக்கும் கொஞ்சம் வெளில சுத்த ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும் உங்க அண்ணன் எங்கயுமே கூட்டிட்டு போக மட்டேன்கிறாரு" என்று திவாகரை ஒர கண்ணால் பார்த்தவாறு கூறினாள் தன்யா.

திவாகர் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டு மதுவை பார்த்தான். உள்ளுர கோபித்து கொண்டால் தன்யா. "வீட்டுக்கு வாங்க வெச்சுக்கறேன்" என்று முனுமுனுத்தாள்.

மது யோசிக்கவும் அவள் அறியாமல் திவாகரும் தன்யாவும் லலிதாவை "என்ன செய்வது" என்பது போல பார்த்தனர்.

இதை கவனித்த மேகா என்ன என்று கண்களால் கேட்டாள்.மூவரும் கவலையுடன் மதுவை பார்க்கவும் மேகாவிற்கு ஓரளவு புரிந்து போனது. தான் பார்த்துக் கொள்வதாக செய்கையிலே உணர்த்தி விட்டு தன் அலைபேசியை எடுத்து மேனஜருக்கு கால் செய்தாள்.

"ஹலோ சார்"

"-----"

"இப்போ நான் மதுமிதா  வீட்ல இருந்து தான் பேசறேன் சார், மதுவிற்கு உடம்பு சரி இல்ல ஒரு மூணு நாள் லீவ் வேணும் சார்" என்று கூலாக பொய் சொன்னாள். அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க மேகாவோ சிரித்துக் கொண்டே கண்ணடித்தாள்.மதுவிற்கு கோபம் தான் என்றாலும் அனைவரின் முன்னால் அதை காட்டிக் கொள்ளவில்லை.

"ஷோ நம்ம வேற யாரையவுது வெச்சு பண்ணிக்கலாம் சார், நான் ஈவனிங்க்குள்ள ரெடி பண்ணிடறேன் சார்"

"......"

" எந்த ப்ரோப்ளேமும் வராது சார் நான் கேரன்ட்டி" என்று அவள் வாக்கு கொடுக்க மதுவிற்கோ பற்றி கொண்டு வந்தது.

".........."

" ஓகே சார் தேங்க்ஸ்"

"லீவ் கன்பர்ம், மது இப்போ உன் ப்ரொப்லெம் சால்வ்டு, எப்ப்ப்ப்புடி" என்று தான் சுடிதார் காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

"பிரமாதம் போ என்னமா பொய் சொல்ற" என்று திவாகர் பாராட்ட, வேறு வலி இல்லாமல் மது தயாராக தன் ரூமிற்கு சென்றாள்.

ஒரு வழியாக அவள் கிளம்பி வர, இருட்டுவதற்கு முன்பே வீடு சென்று விடலாம் என மாலையே கிளம்பி விட்டனர்.பாதி தூரம் வரை பேசிக் கொண்டே (இல்லை நட்சிக் கொண்டே) வந்த ப்ரிஷனும் தூங்கி விட மது என்னவோ போல் உணர்ந்தாள். முன்னே அண்ணனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அண்ணியும் கண் அயர்ந்து விட அமைதியாக கார் சென்றது. சென்னையை அடைந்தவுடன் ஏதோ இனம் புரியா ஒன்றை மது உணர்ந்தாள்.அவளுக்கா புரியாது! புரிந்த ஒன்று தான் அதை ஏற்க மனமில்லாமல் தவித்தாள். வழியிலேயே

ஹோட்டலில் சாப்பிட்டு வந்ததால் பயண அலுப்பில் இருவரும் உறங்க சென்று விட ப்ரிஷனை தன்னுடன் வைத்துக் கொள்வதாக கூறி விட்டு தன் அறைக்கு வந்து அவனை படுக்க வைத்து தானும் படுத்தாள்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எழுந்து அமர்ந்து விட்டாள். தனது ஐபாடை எடுத்து பேஸ்புக்கை திறந்து, தன் நண்பர்களுடைய பதிவுகளை பார்த்தாள். அதில் ரகுவுடைய பதிவு ஒன்று இருக்கவும் அவசரமாக அதை திறந்தாள்.

" ஐயம் சாரி ஸ்வீட்டி, உன்ன அழ வைச்சதுக்கு... இனி நீ எப்பவும் அழுக கூடாது அதுக்கு ஒரு சூப்பர் ஏற்பாடு பண்ணிருக்கேன்.... வெயிட் அண்ட் வாட்ச்.... லவ் யு" என்று இருந்தது அந்த பதிவு. ஏதோ ஒன்று மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஐபாடை வைத்து விட்டு மெத்தையில் சரிந்தாள். அவனுடன் இருந்த நாட்கள் மனதில் திரைப்படம் போல் ஓட மெல்லிய புன்னகையுடன் நினைத்துக் கொண்டாள் "அவனுக்கு என்மேல எவ்வளவு அக்கறை" என்று.

திடீரென்று அது என்ன ஏற்பாடு என்ற யோசனை வர எதுவும் பிடிபடாமல் அப்படியே உறங்கிப் போனாள்.

காலை ஏழு மணி.. உறங்கிக் கொண்டிருந்தவளை எழுப்ப சென்ற தன்யா தன் குழந்தை பக்கத்தில் இன்னொரு குழந்தையை போல் மது அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே நின்று விட்டாள். திவாகர் வந்து கேட்கவும் மனதில் தோன்றியதை கூறி " நம்ம மது சீக்கிரம் சரி ஆகிடனும்ங்க, குழந்தை மாதிரி இருக்குற அவளுக்கு ஏன் இவளோ மனக்கஷ்டமோ கடவுளே" என்று பெருமூச்சுடன் கூறி விட்டு சென்று விட்டாள்.சிறிது நேரம் திவாகரும் அவள் சிறு வயதில் செய்த குறும்புகளை எல்லாம் மனதில் அசை போட்டு விட்டு ஏதோ யோசனை வந்தவனாக உறுதியான புன்னகையுடன் சென்று விட்டான்.

எட்டு மணிக்கு ப்ரிஷன் தான் மதுவை எழுப்பி விட்டான். "இவ்வளவு நேரம் தூங்கிட்டனே ச்ச என்ன மது நீ"  என்று தன்னையே திட்டிக் கொண்டு எழுந்து குளித்து விட்டு கிச்சனிற்கு சென்றாள்.அங்கு தன்யா அவளுக்கு காபி போட்டுக் கொண்டிருந்தாள்.

"என்ன அண்ணி நீங்க என்னை எழுப்பி இருக்க வேண்டியது தானே"

"இல்லடா நீ அசந்து தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பல"

"ம்ம்ம் நீங்க தனியா கஷ்ட பட்டுடு இருக்கீங்க நான் பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கேன் பாருங்க ஐயோ குடுங்க நான் கபி போடறேன்"

"ஹேய் ஹேய் அதெல்லாம் ஏதும் இல்ல இப்போ தான் கற்பகம் வந்து சமைச்சு துணியெல்லாம் துவைச்சு வெச்சுட்டு போனா, எனக்கு இங்க எந்த கஷ்டமும் இல்ல"

"ஒ வேலைக்கு ஆள் போட்டுடிங்களா?"

"ம்ம்ம் அமாம் மது இந்த வால வைச்சுகிட்டு ஒரு வேலையும் செய்ய முடியல, அதான் உங்க அண்ணனே ஒரு ஆள் போட்டுக்கலாம்னு சொன்னாரு"

"ஒ அப்படி போகுதா கதை பொண்டாட்டி கஷ்ட படரத சார் பாக்க முடியாம இந்த ஏற்பாடா?"

"ஹேய் என் புருஷன கலாய்ச்ச அப்புறம் பாரு நான் அண்ணியா இருக்க மாட்டேன் அந்நியனா மாறிடுவேன்" என்று தன்யா மிரட்ட மது விழுந்து விழுந்து சிரித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.