(Reading time: 21 - 42 minutes)

"ன்னும் இல்ல நாளைக்கு தான் பேசணும்"

"ம்ம்ம், எங்க இருக்க? சாப்டியா?"

"இல்லை, பீச் வந்தேன்"

புரிந்து போயிற்று, ஆதி முழுமனதோடு சம்மதிக்கவில்லை. நடந்தவை எல்லாம் நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறான்!! அதனால் தான் கடலை நாடிச் சென்றிருக்கிறான். வருந்துவதை தவிர தமையனுக்காக எதையும் செய்ய முடியவில்லை அவளால்.

"ஆரு லைன்ல இருக்கியா?"

"ம்ம்ம் ஆங்.. ஆமா சொல்லு"

"சாரி டி நீயாவுது என்ன புரிஞ்சுக்கோ ப்ளீஸ் "

"பரவால்ல டா நீ சந்தோசமா இருக்கணும் எனக்கு அது தான் வேணும்"

"கண்டிப்பா மா, ஓகே அப்போ வெச்சுடவா"

"ஓகே டா சீக்கிரம் வந்துடு உன்ன பாக்கணும் போல இருக்கு.. பை பை"

போனை வைத்தவனின் கோபம் சகோதரியின் அன்பினால் கொஞ்சம் தணிந்திருந்தது. ஏதோ ஒரு வகையில் மனம் அமைதிபட காரை எடுத்துக் கொண்டு தான் தங்கியிருந்த பிளாட்டிற்கு வந்தான். சாப்பிட மனமில்லாமல் கட்டிலில் விழுந்தவன் உறங்கியும் போனான்.

ண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை………..

ஊதுபத்தியும் சாம்பிராணியும் காற்றில் வாசம் பரப்பிக் கொண்டிருக்க, ஹாலில் ஒலித்த முருகன் பாடல் காதுகளுக்கு இனிமை சேர்க்க அன்றைய காலை அழகாகவே விடிந்தது மதுவிற்கு.

தினமும் காலையில் அன்னை ஒலிக்க விடும் முருகன் பாடல்களும் பூஜை அறையில் இருந்து வரும் வாசனையும் தான் மதுவிற்கு அலாரம். மெதுவாக எழுந்து சோம்பல் முறித்து படுக்கையை விட்டு எழுந்தாள்.

வாசலில் கார் சத்தம் கேட்கவே இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று ஜன்னல் திரையை விலக்கி பார்த்தவளுக்கு ஒரே ஆனந்தம். வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி வந்து அன்னத்தின் மேல் முட்டிக் கொண்டாள்.

"என்ன மதும்மா பாத்து போவ கூடாதா இப்போ என்னத்துக்கு காலையிலே இப்படி ஓடி வர"

"ஐயோ அன்னம்மா வாசல்ல வந்து பாரு உனக்கே புரியும்" என்று விட்டு மீண்டும் வாசலை நோக்கி ஓடினாள் .

அன்னம்மாவும் பின்னோடு வேகமாக சென்றாள்.

"மத்துதுது" என்று ப்ரிஷன் தன் மழலை குரலில் அவளைக் கூப்பிட்டபடி இரு கைகளையும் நீட்டி தாவினான்.

"அச்சோ என் சமத்து குட்டி அத்தைய பாக்க வந்துடின்களா" என்று அவனை அள்ளி எடுத்து முத்தமிட்டவள் அண்ணனும் அண்ணியுடன் வந்திருப்பது கண்டு இன்னமும் மகிழ்ந்து போனாள்.

“அண்ணா நீயும் வந்திருக்க அதிசயம் தான் வார வாரம் அண்ணி மட்டும் தான் வராங்க. அம்மாக்கும் அப்பாக்கும் கூட சந்தேகமே வந்துருச்சு நீ அவங்க பையன இல்ல அண்ணி அவங்க பொண்ணான்னு”

"ஹே அருந்த வாலு வந்த உடனே ஆரம்பிச்சுட்டியா, முதல்ல எங்கள உள்ள வர விடு டி அப்புறம் எல்லாம் பேசலாம்"

"ஐயையோ சாரி திவா உள்ள வா வாங்க அண்ணி" என்று கூறி உள்ளே நடந்தாள்.

தண்யாவுடன் திவாகரையும் பார்த்த அன்னத்திற்கும் சந்தோஷம் தாளவில்லை.

"அம்மா… அம்மா… சீக்கிரமா பூஜையை முடிச்சுட்டு வாங்களேன், யார் வந்திருக்கானு பாருங்க" என்று குரல் கொடுத்து விட்டு."இருங்க தம்பி சூடா காபி போட்டு கொண்டு வரேன்" என்று சமயலறைக்கு விரைந்தாள்.

"எப்படி இருக்கீங்க அண்ணி, இந்த ரெண்டு வாலுகளையும் மேய்க்கறது கஷ்டமா இருக்கா?" என்று திவாகரை வம்பிற்கு இழுத்தால் மது.

"அதை ஏன் கேட்கற மிது, சின்ன வாலு கூட பரவாயில்லை ஆனா இந்த பெரிய வால தான் என்னால சமாளிக்க முடியல எதாவது ஐடியா இருந்தா குடு மா" என்று தன் பங்கிற்கு வாரி விட்டாள் தன்யா.

"அடி பாவிகளா ரெண்டு பெரும சேர்ந்து என்ன ஏன்டி ஓட்டுறிங்க வேற ஆளே கிடைக்கலையா" அன்ற அவன் அங்கலாய்த்துக் கொள்ள பெண்கள் இருவரும் சிரித்தனர்.

அதற்குள் பூஜையை முடித்து லலிதா வரவும் பேச்சு திசை மாறியது. மகனை பார்த்தது சந்தோஷம் தான் என்றாலும் மனதில் இருந்த கவலையும் இரவு உறங்காததால் வந்த களைப்பையும் அவர் முகம் காட்டிக் கொடுக்க தவறவில்லை. யாரும் அதை கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு  சமையலறையில் உதவு வந்த போது தன்யாவும் , தோட்டத்திற்கு அழைத்து சென்று திவாகரும் கேட்க, அந்த தாயுள்ளம் நெகிழ்ந்து போனது. இருவரிடமும் எல்லாவற்றையும் பிறகு கூறுவதாகவும் இப்போது சென்று சாப்பிட்டு விட்டு ஓய்வெடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். காலையிலேயே ஒரு வேலையாக சென்றிருந்த மூர்த்தியும் வந்து விடவே அனைவரும் காலை உணவை உண்டனர். ஆனால் ப்ரிஷனை தூக்கிக் கொண்டு தன் ரூமிற்கு சென்ற மதுவை மட்டும் காணவில்லை.

"மிது ப்ரிஷனை கீழ கூட்டிட்டு வா அவனுக்கு சாப்பிட எதாவது கொடுக்கலாம், அப்படியே நீயும் சாப்பிடு" என்று குரல் கொடுத்தார் லலிதா.

மதுவிடம் இருந்து சத்தமே வராததால் தானாவே மாடிக்கு சென்று பார்த்தால், அங்கு ப்ரிஷனுக்காக தான் வாங்கி வைத்த உடைகளை அவனுக்கு அணிவித்து தன் செல்போனில் விதவிதமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள் மது.அவனும் சளைக்காமல் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"ஏய் வாலு எல்லாரும் சாப்பிட உள்கந்துடு மேடம் வருவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா இங்க என்ன போட்டோ செசன் நடத்திட்டு இருக்க?"  என்று அவள் கதை திருகியவாரே கேட்டாள் தன்யா.

"ஐயோஒஒஒ  அண்ணி வலிக்குது விடுங்க, வந்துடறேன்" என்று கத்தினால் மது.

அதை பார்த்த ப்ரிஷன் "மம்மி மத்துவ விடு அடிக்காத அப்பம் உண்ட பேச மாட்ட உன்குட டூ போ" என்று கோவமாக தன் கைகளை ஆட்டி அழகாக மிரட்டினான்.

அவனை தூக்கி செல்லம் கொஞ்சிக் கொண்டே "பாருங்க அண்ணி எனக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்  இருக்கு ஜாக்கிரதை” என்று அவளும் ஆட்காட்டி விரலை காட்டி மிரட்டினாள்.

“அது சரி, வாங்க சீக்கிரமா கீழ போகலாம்” என்றவாறு முன்னே சென்றாள் தன்யா.

மதுவும் ப்ரிஷனை தூக்கி கொண்டு பின்னோடு வர கீழே லலிதாவின் பேச்சு சுவிட்ச் போட்டதை போல மகளை கண்டவுடன் நின்று போனது. ப்ரிஷனுடன் விளையாடியவாறு வந்தாலும் தாயின் தடுமாற்றத்தை கவனிக்க தவறவில்லை அவள். தெரியும் அண்ணனிடம் அனைத்தையும் ஒப்பிப்பார் என்று. அவர்களை சொல்லியும் குற்றமில்லை அவளுக்காக தானே இத்தனை தவிப்பும்!!

எல்லோரும் அமர்ந்து உணவருந்த துவங்க மது ப்ரிஷனுக்கு ஊட்டி விட்டவாறே தானும் உண்டாள். சாப்பிட்டு முடித்து ஹாலிற்கு வரவும் மதுவின் கைப்பேசி அலறியது.மாடியிலே விட்டு விட்டு வந்தது நினைவு வர ஓடிச் சென்று அதை எடுத்தாள். திரையில் தோன்றிய புகைப்படத்தை பார்த்தவுடன் நீண்ட நாள் காணமல் போயிருந்த மலர்ச்சி முகத்தில் தோன்ற அழைப்பை எடுத்தாள்.

"ஹலோ பிசாசு"

"......."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.