(Reading time: 21 - 42 minutes)

"டேய் பேசு டா, உன்னால ஒரு போன் கூட பண்ண முடியாதா? அவ்ளோ பிஸி ஆகிடிங்க சார்"

"இல்லடி அம்மு ஐயம் ரியல்லி சாரி டா கொஞ்சம் ப்ராஜெக்ட் ஒர்க் அதான் கூப்பிட முடியலை"

"ஒன்னும் தேவை இல்ல போடா"

"ஹேய் சாரி சொல்றேன்ல ப்ளீஸ் மன்னிச்சுக்கோ"

" முடியாது, நான் இன்னும் உயிரோட தான் இருக்கனான்னு கேட்க கால் பண்ணியா"

"டேய் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"

"ஹ்ம்ம் பொழச்சு போ, ப்ராஜெக்ட் எல்லாம் எப்படி பண்ண? எப்போடாஆஆ இந்தியா வர ஐ மிஸ் யூஊஊஊ"

"எல்லாம் ஐயா சூப்பரா பண்ணிட்டோம்ல"

"ம்ம்ம் இன்னொரு கேள்விக்கு பதிலே காணோம், எப்போ இந்தியா வர?"

"இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல வருவேன் டா ஆனா ஒரு வாரத்துல மறுபடியும் லண்டன் வரணும்"

"வாட் அகேயின் லண்டனா?"

"யெஸ் எனக்கு இங்கயே வேலை கெடச்சுருச்சு அம்மு"

"ம்ம்ம்" முகத்தில் இருந்த சந்தோஷம் அனைத்தும் துடைத்து எடுத்தாற் போல சென்று விட அமைதியானாள் மது.

"எவளோ பெரிய குட் நியுஸ் சொல்றேன் இப்படி சந்தோசமே இல்லாம பியுஸ் போன பல்பு மாதிரி ம்ம்ம்ம்னு மட்டும் சொல்ற"

"ஒன்….னும் இல்ல…… போ….னை வை"

பேச முடியாமல் குரல் உடைந்து அழுதே விட்டாள்.

"ஏய் இப்போ எதுக்கு அழுது தொலைக்கற" கோவத்துடன் கத்தினான் ரகு.

"இல்....." வார்த்தை முடியாமல் கேவலாய் முடிந்தது அவள் குரல்.

"ச்சை உனக்கு போய் கால் பண்ணேன் பாரு பை" என்று போனை வைத்து விட்டான். போனை வைத்தவனின் கைகள் நடுங்குவதை உணர்ந்து நீண்ட மூச்சுகள் எடுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.அவளை திட்டி இருக்க கூடாது.அவன் தேவதை, அவன் வாழ்வின் ஆதாரம் அவள் தான். அவளை அழவைத்து விட்டேனே.பாவம் அவளை மிகவும் ஏங்க வைக்கிறேன் என்று தன்னையே கடிந்து கொண்டான்.

இங்கு மதுவின் நிலைமையோ அதை விட மோசம். முகத்தில் அறைந்தாற் போல் அவன் கோபத்தில் போனை வைத்தது ஒரு புறம் வலியை தந்தாலும் அவன் கோபப் படும் அளவு நடந்து கொண்டேனே என்று எண்ணி வருந்தினாள். அவளுக்கு நன்றாகவே தெரியும் அவள் தான் ரகுவிற்கு எல்லாம் அவள் சின்னதாக சிணுங்கினாள் கூட பதறி விடுவான்.அந்த அளவு அவளை நேசிக்கும் ஒருவன். அவன் மேற்படிப்பிற்காக லண்டன் செல்லுகையில் மது அழுத போதே வலியை மறைத்து அவளிடம் இனி அழ கூடாது என்று கேட்டு சத்தியம் வாங்கிக் கொண்டு தான் சென்றான். அன்று அவன் கண்களில் கண்ட வலி மதுவை கட்டி போட்டது. ஆனால் இன்று கட்டு படுத்த முடியவில்லை.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, கண்களை அவசரமாய் துடைத்துக் கொண்டு தொண்டையை செருமி சீர் செய்து கொண்டு போனை எடுத்தாள்.

"ஹலோ ரகு ஐயம் சாரி"

"ரகுவா அவன் கால் பண்ணானா?" மேகாவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

"ஐயையோ இவ கிட்ட மாட்டிகிட்டோமே யாரு போன் பண்ணாங்கனு கூட பாக்காம இப்படியா பேசுவ மது ச்சே முதலே இவளுக்கு ரகுவ பிடிக்காது இப்போ இது வேறயா?" என்று மனதில் தன்னை திட்டிக் கொண்டாள்.

"உன்ன தாண்டி கேட்கிறேன் அவன் போன் பண்ணானா? மேடம் அழுதிருப்பீங்க போல, எல்லாம் சாரோட கைகரியமாக்கும்?" கோபத்தின் உச்சிக்கே மேகா சென்றிருந் தாள் என்று குரலே காட்டி கொடுத்தது.

இருக்கும் தானே அவள் உயிர் தோழியை அழ வைத்தவன் தானே அவன். அவனை எப்படி மன்னிப்பாள்.அவன் பெயரை கேட்டாலே மேகா எரிந்து விழுவாள் இன்று அவனுடன் பேசியது அவனுக்காக அழுதது எல்லாம் தெரிந்தால் என்ன ஆகும் மதுவின் நிலை?!  

"இல்லடி இது வேற ரகு, அவரு பொண்ண நம்ம டான்ஸ் ஸ்கூல்ல சேர்த்துக்க சொன்னாரு ஏற்கனவே நமக்கு ஸ்டுடண்ட்ஸ் நிறைய பேர் இருகாங்க வேண்டாம் சாரின்னு சொல்லிட்டு இருந்தேன், ஹிஹிஹி" என்று சமாளித்து வைத்தாள் மது.

"நம்பற மாதிரி இல்லையே"

"நிஜமா டா"

"ஹ்ம்ம் சரி சரி, நீ ரெடியா இருந்தா என்னை பிக் அப் பண்ணிக்கோன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்"

"ஹ்ம்ம் நான் ரெடி, அண்ணா அண்ணி வந்திருக்காங்க அவங்க கிட்ட சொல்லிட்டு ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவேண்டி"

"ம்ம்ம் ஓகே பை"

"பை பை"

ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு கீழே வந்தாள். அங்கே ப்ரிஷன் கோபமாக அமர்ந்திருக்க அருகில் சென்று அவனை அருகில் அமர்ந்து "என்னடா செல்லம்" என்று கேட்டாள்.

"போ உன்கூட டூ, நீ என்கூட விளையாடவே வரல" என்று முகத்தை திருப்பிக் கொண்டு எழுந்து சென்றான். மது அவனை தடுக்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு அமரவும் என்ன செய்வதென்று தெரியாமல் அவனே அருகில் வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து அவளை போலவே "எண்டா செல்லம்" என்று கேட்க மது அவன்புறம் திரும்பி சிரித்தாள்.

அவனும் சிரித்துக் கொண்டே "இன்னைக்கு என்கூடவே இருப்பியா மத்து" என்று வினவ "கண்டிப்பா" என்று அவனை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்கு சென்று அனைவரிடமும் விடை பெற்று ப்ரிஷனையும் அழைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள். மேகாவின் ரூமிற்கு சென்று அவளையும் கூட்டிக் கொண்டு தன் நாட்டிய பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்.வழி எல்லாம் ப்ரிஷன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் இருவரும் திணறி போயினர்.

அவனை மேகாவிடம் விட்டு விட்டு அன்றைய பயிற்ச்சியை மாணவிகளுக்கு கற்று கொடுக்க மது உடையை மாற்றிக் கொண்டு சென்று விட்டாள்.

அவளுக்கு இரண்டாவது ஆறுதல் இந்த நாட்டிய பள்ளியின் பயிற்சியாளராக இருப்பது தான். அவள் சென்னையை விட்டும் அங்கு அவள் செய்த வேலையை விட்டும் மனம் ஒடிந்து வந்த பிறகு அவளுக்கு நடந்த நல்ல விஷயங்கள் இரண்டு தான். மேகா மூலமாக ரேடியோவில் தொகுப்பாளர் வேலை கிடைத்ததும், அவள் உயிரான ரகுவின் மூலம் இந்த நாட்டியப் பள்ளியில் வேலை கிடைத்ததும் தான். சிறு வயது முதலே நாட்டியத்தின் மீது ஆர்வம் அதிகம். பள்ளி பருவத்திலேயே அவள் ஆர்வத்தை கண்டு லலிதா தான் அவளை ஊக்குவித்தார். அதன் பலனாக இன்று அவளுக்கு இந்த வேலை மூலமாக ஆறுதல் கிடைப்பதில் அவருக்கும் திருப்தி தான்.

கல்லூரியில் அனைவரையும் கலாய்த்து மது பண்ணும் அலப்பரையில் அவளிடம் வாய் கொடுக்க அனைவரும் யோசிப்பர்.கல்லூரி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளர் பொறுப்பை அவள் சிறப்பாக செய்வதை அருகில் இருந்து பார்த்ததால் மேகாவிற்கு இந்த யோசனை வந்தது. ரகுவோ இன்னும் ஒரு படி மேல் சென்று அவளுக்காக நாட்டிய பள்ளியே நிறுவ முடிவ செய்தான்.அவன் செல்ல அம்மு வருத்த படுவதை எப்படி தாங்க முடியும் அவனால்.ஆனால் மது தான் பிடிவாதமாக மறுத்து விட்டாள். இப்படி தன் திறமைகளை அறிந்து தனக்காக

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.