(Reading time: 12 - 23 minutes)

 

வெரி குட், இப்படிதான் எப்பவும் தலையாட்டணும்… நல்லப்பையன்… சமத்து…”

“ஓ… நீ சொல்லறதுக்கெல்லாம் தலையாட்டினா நான் சமத்து… அப்போ நீ சொல்லுறத நான் செய்யலைனா கெட்டப்பையனா?..”

“கண்டிப்பா….”

“சரி.. இனி நீ சொல்லுறத நான் செய்யமாட்டேனே… ஹாஹாஹா……. இப்போ என்ன செய்வ…?’

“டிவோர்ஸ் தான்….”

“அடிப்பாவி !!!!???...”

“என்னது!!!???...”

“அத நான் கேட்கணும்டி…”

“போதும்…சொல்லிட்டேன்…”

“எதுடி போதும்???”

“வேண்டாம்…”

“எனக்கு பதில் வேணும்… சொல்லுடி… “

“என்ன சொல்லணும்.. ???”

“அப்படிக்கேளு…”

“கேட்டாச்சு.. சொல்லுங்க…”

“எதுக்குடி டைவர்ஸ் சொன்ன??”

“சொன்னப்பேச்சு கேட்கலைனா… வேற என்ன செய்ய???..”

“ஆமாம்டி… உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, டெய்லி எஸ்.எம்.எஸ்… மட்டும் அனுப்பிகிட்டு, வாரத்துல பேசுற அந்த ரெண்டு நாள் போன் காலுக்குக்காக வெயிட் பண்ணிகிட்டு, நீ சொல்லுறதுக்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டிகிட்டு, நீ வரைஞ்சு வச்சிருக்கியே ஒரு உலகமகா எல்லைக்கோடு, அதையும் தாண்டாம இருக்கறேன் பார்த்தியா… என்ன டைவர்ஸ் பண்ண வேண்டியது அவசியம் தான்டி ரொம்ப…”

“……………………………..”

“பேசுடி… வாய் வலிக்கிற வர பேசுவல்ல… இப்போ மட்டும் என்னாச்சு… பேசுடி.. உலகத்துலேயே காதலன விவாகரத்து பண்ணிடுவேன்னு சொன்ன முதல் காதலி நீ தான்டி, என் ஆருயிர் காதலியே…“

“கல்யாணத்துக்கு அப்புறமா டைவர்ஸ் னு சொன்னா தான் தப்பு… காதலிக்கும்போது சும்மா கூட சொல்லக்கூடாதா ???...”

“வந்துட்டியா இப்போ பாயின்ட்-க்கு… நீ சொன்னா சும்மா… அதுவே நான் எதுவும் செய்ய மாட்டேன்னு சொன்னா மட்டும் குத்தம்… ரொம்ப நல்லா இருக்குடி உன் நியாயம்…“

“நிறைய தடவ இன்னைக்கு சொல்லிட்டீங்க.. போதும்… சும்மா இருங்க…”

“அதான பாத்தேன்… ஏண்டி, இதுல மட்டும் இவ்வளவு கணக்கா இருக்க தெரியுதுல்ல, அப்புறம் ஏண்டி இருக்க வேண்டியதுல இருக்க மாட்டேங்குற…???”

“……………………………………….”

“பேசமாட்டியே…. சே….”

“சாரிங்க…”

“……………………..”

“ப்ளீஸ்… பேசுங்க… “

“……………………”

“எனக்கு பயமா இருக்குங்க.. அதான்… “

“………………….”

“நீங்களே என்னை புரிஞ்சிக்கலைன்னா… நான்…. நா……..ன்….”

“ஹேய்…. மயூ…. வேண்டாம் டா… அழாத… நான் தான் கோபத்துல ஏதேதோ பேசிட்டேன்… சாரி டா மா… “

“இல்லங்க… நான் தான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்… மன்னிச்சிடுங்க… ப்ளீஸ்…”

“இப்போ நீ அழுதுட்டே இருந்த, நான் “டீ” சொல்லுவேன்…”

“பரவயில்லை… இன்னைக்கு ஒரு நாள் சொல்லிக்கோங்க…”

“அடியே… ஏண்டி… அதுல கூடவா உனக்கு ஓரவஞ்சனை… இனி இப்படியே கூப்பிடுங்கனு சொன்னாதான் என்னவாம்…???.. உன்ன… என்ன தான்டி பண்ணுறது…”

“கல்யாணத்துக்கு அப்பறமா என்ன வேணா பண்ணிக்கோங்க… இப்போ நல்லப்பிள்ளையா, சமத்தா…. இருக்கணும்…. சரியா மாமா…” என்றபடி சிரித்த மயூரி அழகாக சந்தன நிறத்தில் பார்ப்பவர் நின்று மீண்டும் ஒருமுறை பார்க்கும்படி இருந்தாள்…

“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. மயூ…………… “ என்ற ஆனந்த கூச்சலிட்டவன்.. பெங்களூரில் பிரபலமான ஐ.டி. கம்பெனியில் உயர்பதவியில் இருக்கின்றான்… அவனுடைய காதலி மயூரி அதே கம்பெனியில் அவனுக்குக் கீழே பணிபுரியும் டீம் லீடராக இருக்கின்றாள்…

முகிலன்… பார்ப்பதற்கு கண்ணனைப் போன்றே இருப்பான்… அதனால் எப்பொழுதும் அவனைச் சுற்றிலும் கோபியர் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்… எனினும், அவன் குணத்தில் ராமனாய் இருந்தான்…

அவனுடைய வேலையில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை… அவனிடம் நெருக்கம் காட்ட ஆயிரம் பேர் முயன்றாலும், அவன் அவளின் கைகளுக்குள் மட்டுமே சிக்க விரும்பினான்…

அது அவளுக்கும் தெரியும்… இருந்தும் என்ன செய்வது.. அவள் மற்ற நகரத்துப் பெண் போல் இல்லையே… யாரேனும் பார்ப்பார்களோ, பார்த்துவிட்டால் என்ன செய்வது?.. அப்பாவிடம் என்ன சொல்வது?... என்ற பயத்திலேயே விலகி நின்றாள்…

அதனாலேயே அவன் காதல் சொல்லிய நொடியிலிருந்து உலகத்தில் யாரும் போட முடியாத எல்லைக்கோட்டை வகுத்தாள், பைக்கில் வரமாட்டேன், காராக இருந்தால் பின்சீட்டில் தான் அமர்வேன், கோவிலில் மட்டுமே பார்த்து பேசி கொள்ளலாம்… … டீ சொல்ல வேண்டாம், அதிகம் கொஞ்சி பேச வேண்டாம், ஒரே ஆபீசில் வேலை செய்தாலும் அங்கே காதலர் என்ற முறையில் பேசிக்கொள்ள வேண்டாம்.. என்று இத்தனை வேண்டாம் விதித்தால் எந்த காதலன் தான் கோபம் கொள்ளமாட்டான்..

எனினும் அவனுக்கு அவள் வகுத்த நியதிகள் பிடித்திருந்தது… இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா?... என வியந்தான் அவன்… என்னதான் வியந்தாலும் பிடித்தாலும் அவனும் மனிதன் தானே.. அதுவும் காதலன்… ஆதலால்.. அவ்வப்போது சிறு சிறு ஊடல்களும் கூடல்களும் அவர்களுக்குள் நடைபெறும்… அதில் இதுவும் ஒன்று…

“மயூ…………..”

“ஹ்ம்ம்ம்.. சொல்லுங்க….”

“என்னை உனக்குப் பிடிக்குமா?...”

“இது என்ன அபத்தமான கேள்வி…”

“சொல்லு… பிடிக்குமா?...”

“பிடிக்காம தான் இப்படி பேசிட்டிருக்கேனா?...”

“ஹூஹூம்ம்ம்….”

“என்ன ஹூஹூம்?...”

“இதெல்லாம் பத்தாது… “

“பத்தாதா?...”

“ஆமா…”

“ஏன்?..”

“வார்த்தையால சொல்லுடி… ப்ளீஸ்டி… “ என்றதும் அவளுக்குப் புரிந்துபோயிற்று…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.