(Reading time: 17 - 33 minutes)

 

ப்போதோ சிறு வயதில் கற்றுக்கொண்ட நீச்சல் ஓரளவு கைக்கொடுத்தது. எப்படியோ முயன்று நீந்தி அவனையும் இழுத்துக்கொண்டு கரை சேர்ந்தாள் அபர்ணா.

கரை சேர்ந்ததும் இருவருமே மயங்கி விட்டிருந்தனர். கண்விழிக்க சில நிமிடங்கள் ஆனது.

அதன் பின். கல்லூரி ஆசிரியர்களின் அர்ச்சனை ,ஆராதனை எல்லாம் ஒவ்வொன்றாக தொடர்ந்து வந்தது .

ஆண் மாணவர்களுடன் நீ எதற்காக தனியாக சென்றாய்? அந்த கேள்விதான் அவளிடம் திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.

'விஷ்வா என் நண்பன். அதனால் அவனுடன் சென்றேன்'. அந்த பதிலை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இருவருக்கும் கல்லூரியிலிருந்து தாற்காலிக இடைநீக்கம் கிடைத்தது.

'அதனாலே என்ன விஷ்வா? புன்னகைத்தாள் அவள். எப்படியோ உன்னை காப்பாத்திட்டேன் விஷ்வா அது போதும் எனக்கு.

அந்த ஏரியோட ஆழம் கூட தெரியாது உனக்கு. நீ நீச்சல் அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு. எந்த தைரியத்திலே குதிச்சே அப்பூ?

அதெல்லாம் தெரியாது. 'நீ என் friend விஷ்வா நீ விழுந்திட்டே அதனாலே குதிச்சிட்டேன்.' அவ்வளவுதான். கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனான் விஷ்வா.

அதன் பின் அவளுக்கு அறிவுரைகள் தொடர்ந்தன.

'போதும். அவன் friendshipபை கட் பண்ணு.' அவளை பார்ப்பவர்களெல்லாம் அவளிடம்  சொன்னார்கள்.

இதை முன்மொழிந்தவன் அவளது ஒரே அண்ணன் அஷோக். அவளிடம் கை ஓங்கும் அளவுக்கு போனான் அவன் .அவளுடன் பேசுவதையும்  நிறுத்தினான்.

சிலர் இருவரையும் சேர்த்து வைத்து பேசினார்கள். இது எதுவுமே அவளை பாதிக்கவில்லை. எல்லாவற்றையும் மிக தைரியமாய் எதிர்க்கொண்டாள் அபர்ணா.

'நீ என் friend விஷ்வா. நான் எதுக்கு உன்னை விடணும். நம்ம friendship யாருக்காவது பிடிக்கலைனா அவங்க தான் நம்மை விட்டு போகணும்.' தப்பு பண்றவங்கதான் பயப்படணும் விஷ்வா .நாம எதுக்கு பயப்படணும்' எப்போதும் சொல்வாள் அவள்.

அந்த நேரத்திலும் அவர்களுடன் நின்றவர் அவள் அப்பா மட்டுமே. 'அவர் சொன்ன ஒரே வார்த்தை 'என் பொண்ணு தப்பு பண்ண மாட்டா எனக்கு தெரியும்'

அவனிடம் ஒரு பெருமூச்சு எழுந்தது.

கடைசியில் ஜனனி கூட இதை புரிந்துக்கொள்ள வில்லையே. சில வருடங்கள் முன் நடந்த இந்த கதையெல்லாம் தெரிந்திருந்தும் அவளை விட்டுவிடு என்றாளே? எப்படி விடுவேன் அவளை.

என் தாய் எனக்கு உயிர் கொடுத்தாள் என்றால் அது ஒரு வகையில் அவள் கடமை. இவள் தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் எனக்கு உயிர் கொடுத்தாளே அவளை எந்த ஸ்தானத்தில் வைப்பது? தாய்க்கும் மேலான இடமா?

உயிர் கொடுத்ததை விட பெரிய விஷயம் இத்தனை பேரையும் எதிர்க்கொண்டு இன்னமும் என்னுடன் நிற்கிறாளே இவள். இவளை என்னவென்று சொல்வது?

விஷ்வா.... மாடி ஏறி வந்த அபர்ணாவின் குரல் அவனை, கலைத்து எழுப்பி  அமர வைத்தது.

என்னாச்சு விஷ்வா? புன்னகையுடன் அவன் அருகில் அமர்ந்தாள் அபர்ணா.

என்ன தோன்றியதோ அருகில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான் விஷ்வா.

அவன் தலையை வருடியபடியே கேட்டாள் என்ன விஷ்வா? ஜனனி ஞபாகமா? ஏன் விஷ்வா? என் கிட்டே முன்னாடியே சொல்லியிருந்தா நான் கண்டிப்பா ஏதாவது பண்ணி இருப்பேன் விஷ்வா.

'நோ.' என்றான் விஷ்வா. இனிமேல் அவள் மிஸஸ் சுதாகரன். அவளை பத்தி பேசறது தப்புடா. அதை இதோட விட்டுடு.

சின்னதாய் ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடத்தில் 'சரி விட்டுடுவோம்' அதுதான் சொல்லிட்டே இல்ல அப்புறம் ஏன் டல்லா இருக்கே விஷ்வா?

'இது வேறடா. காலையிலே எங்க அம்மாவை பார்த்தேன் அப்பூ'

'அம்மாவா? பேசினாங்களா உன் கூட?' குரலில் சேர்ந்த உற்சாகத்துடன் கேட்டாள் அபர்ணா.

எங்கே பேசறது?. அதுதான் அந்த கடங்காரன் கூடவே இருந்தானே.

யாரு விஷ்வா.?

வேற யாரு? எல்லாம் அவன்தான். என் மாமா பையன்.

கண்ணன்னு சொல்லுவியே அவரா?

'அவனேதான். அந்த கடன்காரனே தான்' என்றான் விஷ்வா.

விஷ்வாவின் வாழ்க்கையில் நடந்தது எல்லாமே அவளுக்கு தெரியும். ஆனால் அவன் உறவினர்களில் அவள் பார்த்தது அவன் அப்பாவை மட்டுமே. அவருக்கும் அபர்ணா மீது பாசம் அதிகம்.

வேறு யாரையும் அவள் பார்த்ததில்லை. பரத்தை பற்றி எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறான் விஷ்வா. ஆனால் பரத்தை பற்றி  விஷ்வா குறிப்பிடும் போதெல்லாம் அவன் சொன்ன பெயர் கண்ணன். வீட்டில் அவனை 'கண்ணா' என்றே அழைத்து பழக்கம் என்பதால் அவனை பற்றி பேசும்போதெல்லாம் கண்ணன் என்றே சொல்வான் விஷ்வா.

ஆனால் அந்த கண்ணன் தான் இந்த பரத் என்று இந்த நிமிடம் வரை சத்தியமாய் நினைக்கவில்லை அபர்ணா.

'எனக்கும் எங்கம்மாவுக்கும் ஆயிரம் இருக்கும், இவன் யாரு அப்பூ நடுவிலே.?' பெரிய இவன் மாதிரி எங்கம்மாவோட தோளிலே கைய போட்டு கூட்டிட்டு போறான். பத்திட்டு வருது எனக்கு. இருக்கட்டும் எனக்கும் ஒரு நேரம் வராமலா போயிடும்.

விஷ்வா..... என்றாள் அபர்ணா. எல்லாம் சரியாகும் விடு விஷ்வா.

இல்லை அப்பூ. என்னாலே முடியலே எல்லாரும் என்னை விட்டு போயிட்டாங்க அப்பூ. என்றவன் சட்டென எழுந்து அமர்ந்தான் விஷ்வா.

கண்களில் பரவிய தவிப்புடன் அவளை பார்த்து கேட்டான் 'யார் வந்து கூப்பிட்டாலும் நீ என்னை விட்டு போக மாட்டே இல்லையா அப்பூ'

ஹேய்! லூசாடா நீ? கேட்கிறான் பார் கேள்வி. என்றாள் சட்டென. உன்னை விட்டு போறதா இருந்தா எப்பவோ போயிருப்பேன். இத்தனை நாள் வெயிட் பண்ணி இருக்க மாட்டேன். புரியுதா ...

அதுக்கில்ல அப்பூ.....

எதுக்கும் இல்லை. சும்மா சும்மா சோக கீதம் பாடினே கொன்னுடுவேன். இப்போ என்ன உங்கம்மாவோட நீ சேரணும் அவ்வளவுதானே ஏதாவது செய்திடுவோம். அவன் யாரு? கண்ணன்தானே? அவனையும் யாருன்னு பார்த்திடுவோம்.

மெல்ல சிரித்தான் விஷ்வா. நீ என்ன பண்ண முடியும் அப்பூ?

ஏதாவது செய்வேன். என் மனசு சொல்லுது விஷ்வா. நீ சீக்கிரம் உங்க அம்மாவோட சேர்ந்திடுவே. வேணும்னா பாரு.

'தேங்க்ஸ் அப்பூ' புன்னகைதான் விஷ்வா. அப்போ நீயும் என் கூட இருப்பேதானே.

நானா.....? நீ வேணும்னா பாரு உங்கம்மாவோட நீ சேர்ந்தப்புறம் என் ஞாபகமே உனக்கு வராது.

ஹேய் அப்பூ....

சரி.சரி. சரி. நோ சோக கீதம். நான் உன் கூடவே இருப்பேன் போதுமா. போய் தூங்கு விஷ்வா. என்று சிரித்தவளை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான் விஷ்வா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.