(Reading time: 17 - 33 minutes)

 

ரண்டு நாட்கள் கடந்திருந்தன.

அன்று காலை ஒன்பது மணி. எல்லாரும் வேலைக்கு கிளம்பி சென்றடவுடன் ஒலித்த  தனது கைப்பேசியை எடுத்தார் தாத்தா.

திருச்சியிலிருந்து வந்திருந்தது அந்த அழைப்பு.

'ஹலோ' என்றார் தாத்தா.

'இன்னைக்கு நைட் கிளம்பறீங்களா நீங்க?

'ம். டிரெயின்லே டிக்கெட் புக் பண்ணிட்டேன். ஆனா வீட்டிலே எல்லார்கிட்டேயும் என்ன சொல்றதுன்னு தெரியலை. எப்படியாவது சமாளிச்சிட்டு வரேன்' என்றார் தாத்தா.

மாலை வீட்டுக்கு கிளம்பும் எண்ணத்துடன் staff ரூமில் அமர்ந்திருந்தான் பரத்.

தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் அபர்ணா. அவன் பார்வை அவளை தொடர்ந்தது.

எப்போதும், ஒவ்வொரு முறை அவனை கடந்து செல்லும் போதும் அவளது தென்றல் பார்வை அவனை உரசிவிட்டுதான் செல்லும். இது பல நாட்களாகவே தெரியும் அவனுக்கு.

ஆனால் இந்த இரண்டு நாட்களாய் அவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை.

என்னதான் எல்லாம் சரியாக நடந்துக்கொண்டிருக்கிறது என்று மனதை சமாதான படுத்திக்கொண்டாலும், எதையோ இழந்த உணர்வு அவனுக்குள்ளே இருக்கத்தான் செய்தது.

எல்லாரும் வீடு வந்து சேர்ந்ததும் துவக்கினார் தாத்தா.

என் friend ஒருத்தன் திருச்சியிலே ஹாஸ்பிடல்ல கொஞ்சம் சீரியஸா இருக்கான் மைதிலி. நான் போய் பார்த்துட்டு ரெண்டு மூணு நாளிலே வந்திடறேன்.

எனக்கு தெரியாம திருச்சியிலே யாருப்பா உங்களுக்கு friend? வியப்புடன் கேட்டார் மைதிலி.

ரொம்ப பழைய friendமா உனக்கு தெரியாது. நான் போயிட்டு சீக்கிரம் வந்திடறேன்.

அப்பா. இந்த வயசிலே ஏன்பா தேவை இல்லாம அலையறீங்க. அவாய்ட் பண்ண முடியாதா?

'அதுதானே' வழி மொழிந்தான் பரத். 'முன்னாடியே சொல்லியிருந்தா நானாவது உங்க கூட வந்திருப்பேன்.'

டேய். ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆறவன் முன்னாடியே சொல்லிட்டாடா ஆவான்.? நான் உன்கிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கேன் நான் போற இடத்துக்கெல்லாம் உன்னை கூட்டிட்டு போக முடியாதுன்னு. நீ பேசாம இரு' என்றவர் நான் பத்திரமா போயிட்டு பத்திரமா வந்திடுவேன் நீ கவலை படாதே என்றார் மைதிலியை பார்த்து. 

காரை செலுத்திக்கொண்டிருந்தான் பரத். அது எக்மோர் ரயில் நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்தார் தாத்தா.

அந்த நேரத்தில் காரணமே இல்லாமல் அவன் மனம் அபர்ணாவிடம் சென்றது.

கடந்த மூன்று நாட்களாய் அவள் அவனை விட்டு வெகு தூரம் விலகி சென்று விட்டதை போன்றதொரு எண்ணம் அவன் அடி மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது..

சாலையில் பதிந்திருந்த அவன் கண்கள் சட்டென விரிந்தன. அங்கே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாள் அபர்ணா.

நிற்கிறாள் பார் சின்னதொரு பார்வையினாலேயே என்னை கொள்ளையடித்துக்கொண்டு போகும் ராட்சஸி.

இந்த நேரத்தில் எங்கே போக காத்திருக்கிறாள்? அவளை காரில் ஏற்றிக்கொள்ள விழைந்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு காரை செலுத்தினான்.

வேண்டாம். அவள் மனதில் தேவை இல்லாமல் எதையும் விதைக்க வேண்டாம்.

கார் அவளை கடந்த நேரத்தில் அவன் கண்ணில் பட்டார் அவர். அவள் அருகில் நின்றிருந்த அவளுடைய அப்பா.

சட்டென அவரை அடையாளம் தெரிந்தது அவனுக்கு. இந்த உலகத்தில் அவன் அதிகம் மதிக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.

திருச்சி பல்கலைகழகத்தில் அவன் முடித்த ஆராய்ச்சி படிப்புகளுக்கு அவனுக்கான வழிக்காட்டி (கைட்) அவர்தான். திருச்சி பல்கலை கழகத்தில் பேராசிரியர் சந்திரசேகர்.

அபர்ணாவின் அருகில் நிற்கிறாரே இவர். அப்படியென்றால் இவர்தான் அபர்ணாவின் அப்பாவா?

அவன் ஆராய்ச்சிப்படிப்பில் அவர் அவனுக்கு செய்த உதவிகள் ஏராளம். அவரை பார்த்துவிட்டு பார்க்காதது போல் போக அவனுடைய கொள்கைகள் நிச்சியம் இடம் கொடுக்காது.

வேறு வழியில்லை. முன்னால் சிறிது தூரம் சென்று விட்ட கார், நின்று, பின்னால் வந்து அவர்கள் அருகில் சென்று நின்றது .'ஒரு நிமிஷம் தாத்தா' என்றபடியே கீழே இறங்கினான் பரத்.

எப்படி இருக்கீங்க சார்? அவன் முகம் மலர்ந்தது.

தனது அப்பாவிடம் மலர்ந்த புன்னகையுடன் கைகுலுக்கி பேசிக்கொண்டிருந்தவனை வியப்புடன் பார்த்தப்படியே நின்றிருந்தாள் அபர்ணா.

பார்வை அவள் பக்கம் திரும்பி விடாமல் இருக்க கஷ்டப்பட்டு முயன்றுக்கொண்டிருந்தான் பரத்.

இவ என் பொண்ணு அபர்ணா.... அறிமுக படுத்தினார் அவர்.

எனக்கு இவரை தெரியும்பா. என் கூடத்தான் வேலை பார்க்கிறார் என்று அவள் சொன்ன நொடியில்

அபர்ணா.... எப்படிம்மா இருக்கே? என்று சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கினார் தாத்தா.

இருவரும் கைகுலுக்கி சிரித்து பேச துவங்க....

புருவங்கள் உயர திரும்பினான் பரத் 'அடப்பாவிகளா என்னடா நடக்குது இங்கே? என்பதை போலே.

தா......த்தா. இது எ.....த்தனை நா.....ளா? என்றான் வியப்பு விலகாமல்.

நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா friends இல்லையா அபர்ணா? என்று தாத்தா கண் சிமிட்ட

ம். ரொம்ப நாளா. என்று சிரித்தாள் அபர்ணா.

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது பரத்திற்கு. தாத்தா இவளிடம் என்னைப்பற்றி என்னவெல்லாம் உளறி வைத்தாரோ?

அவர்களும் எக்மோருக்கே செல்கிறார்கள் என்று தெரிந்தது. அதன் பிறகு அவர்களை காரில் ஏற்றிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை அவனால்.

இத்தனை நேரம் அவன் அருகில் முன்சீட்டில் அமர்ந்திருந்த தாத்தா பின் சீட்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு அபர்ணாவை முன்னால் அனுப்பியது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது அவனுக்கு.

கார் நகர்ந்துக்கொண்டிருந்தது. அவன் அருகில், கரும் பச்சை சுரிதாரும், அழகாய் பின்னி முடித்த நீள் கூந்தலும், கை நிறைய கண்ணாடி வளையல்களுமாய் அமர்ந்திருந்தவளை தன் பார்வை ஓரிரு முறை உரசி செல்வதை அவனாலேயே தடுக்க முடியவில்லை.

ஜன்னல் வழியே சாலையின் மீது பார்வை பதித்திருந்தவள் அதை உணர்ந்த போதும் அவன் பக்கம் திரும்பவே இல்லை. ஆனால் அந்த நேரத்தில் அவள் உள்மனதின் ஓரத்தில் சட்டென ஒரு கேள்வி பிறந்தது. ஒரு வேளை அவனுக்கு திருமணம் ஆகவில்லையோ?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.