(Reading time: 17 - 33 minutes)

 

யில் நிலையத்தை அடைந்திருந்தனர். அவன் அவள் அப்பாவுடன் பேசிக்கொண்டே நடக்க, அவர்களுக்கு பின்னால் தாத்தாவுடன் நடந்தாள் அபர்ணா.

அவள் மனதிலிருக்கும் கேள்விக்கு அவரிடம் பதில் கிடைத்துவிடும் என்று தோன்றியது.

தாத்தா, நான் அன்னைக்கே உங்ககிட்டே கேட்டேன் உங்க வீட்டிலே யாரெல்லாம் இருக்கீங்கன்னு. நீங்க சரியா பதில் சொல்லவே இல்லை. யாரோ ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ன்னு சொன்னீங்களே யாரது?

அவர் பதில் சொல்வதற்குள் சட்டென திரும்பினான் பரத். '

'கதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். ட்ரைனுக்கு டைம் ஆச்சு கொஞ்சம் வேகமா நடங்க.'

'நாம ரெண்டு பேரும் பேசினா இவன் ஏன் டென்ஷனாரான்னு தெரியலை. விடும்மா. நான் ஊருக்கு போயிட்டு வந்து உன்கிட்டே நிதானமா நிறைய பேசறேன்' என்றார் தாத்தா.

நடை மேடையில் வந்து நின்றனர். ரயில் வர இன்னும்  பத்து நிமிடங்கள் இருந்தன.

காபி குடிப்போமா சார்? என்றபடியே அங்கிருந்த கடையில் காபி வாங்கினான் பரத்.

நீ போகும் போது என் பொண்ணையும் டிராப் பண்ணிட்டு போயிடறியாபா என்றார் அப்பா. ராத்திரியிலே அவள் தனியா போக வேண்டாம். நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோமே அந்த பஸ் ஸ்டாப்லேயே விட்டிட்டு அங்கிருந்து அவ நடந்து போயிடுவா.

ம்? ஆங்.. கண்டிப்பா.... சற்று தடுமாறித்தான் பதில் சொன்னான் பரத்.

குடித்து முடித்த காபி கப்பை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு அபர்ணா அவர்கள் அருகில் வந்து நின்ற அந்த நொடியில், 'உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாப்பா? திடீரென கேட்டார் அபர்ணாவின் அப்பா. குடித்துக்கொண்டிருந்த காபி சட்டென புரை ஏறியது பரத்துக்கு.

இந்த கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்கவில்லை பரத். என்ன பதில் சொல்வது என்று அவன் தடுமாற, அவனை தாத்தா சற்று வியப்புடன் பார்க்க, நடைமேடையில் வந்த ரயில் அவனுக்கு உதவியது.

அந்த கேள்வி காற்றில் போக எல்லாரும் ரயிலை நோக்கி நடந்தனர். அவன் தடுமாற்றம் அபர்ணாவினுள்ளே அதே கேள்வியை இன்னும் அழுத்தமாய் விதைத்தது.

சட்டென ஏதோ தோன்ற அவள் தாத்தாவிடம் கேட்டாள் தாத்தா உங்க போன் நம்பர் கொடுக்கறீங்களா? நான் அப்புறம் பேசறேன் உங்களோட

நம்பரா....? என்று அவர் திரும்ப 'நான் கொடுக்கறேன் தாத்தா நீங்க கிளம்புங்க'. சட்டென இடையில் புகுந்து சொன்னான் பரத்.

இருவரும் அவர் ,அவர் பெட்டிக்குள் ஏறிக்கொள்ள ரயில் கிளம்பியது.

ரயில் நகர கையசைத்துவிட்டு நடந்தனர் பரத்தும், அபர்ணாவும்.

ஒன்றாக நடந்தவர்களினிடையே அழுத்தமான மௌனம் நிலவியது.

காரின் முன் சீட்டில் அபர்ணா ஏறி அமர காரை கிளப்பினான் பரத்.

அங்கே நிலவிக்கொண்டிருந்த மௌனத்தை  அவ்வப்போது கலைத்தது அவளது வளையல் சத்தம். அவள் பக்கம் அவன் திரும்பாத போதிலும் அவளது கை அசைவுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் எழுந்த அந்த சத்தம் அவனுக்குள்ளே ஊடுருவி விளையாடியது.

அவள் வளையல் சத்தம் மட்டுமில்லாமல் அவள் உள்ளம் தவித்துக்கொண்டிருந்த தவிப்பும் அவனுக்கு கேட்கத்தான் செய்தது.

அந்த சூழ்நிலையை மாற்றும் விதமாக காரில் பாடல்களை ஒலிக்க விட்டான் பரத். எதுவுமே அவள் மனதை திசை திருப்பவில்லை.

அவள் இறங்கும் இடம் வர காரை நிறுத்தினான் பரத். இறங்கவில்லை அவள்.

அவன் மெல்ல அவள் பக்கம் திரும்ப ஒரு முடிவுக்கு வந்தவளாய் 'எனக்கு உங்க கிட்டே ஒண்ணு கேட்கணும் என்றாள் நிதானமான குரலில்.

'ம்'. என்றான் பரத் கேள்வி என்னவாக இருக்குமென்று ஊகித்தபடியே.

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? தவிப்புடன் கேட்டாள் அபர்ணா.

சில நொடிகள் அவள் முகத்தை ஊடுருவியவன் மெல்ல சொன்னான்  'ம்'

'பொய்' அவன் கண்களை பார்த்தபடியே தன்னையும் அறியாமல் சட்டென சொன்னாள் அபர்ணா.

இல்லை. நிஜமா.

'பொய் சொல்றீங்க' என்றாள் மறுபடியும்.

இல்லை. உண்மையிலேயே...

அந்த நேரத்தில் காரில் ஒலித்துக்கொண்டிருந்தது அந்த பாடல் வரிகள்

எனக்கு மட்டும் சொந்தம் உனது

இதழ் கொடுக்கும் முத்தம்.

உனக்கு மட்டும் கேட்கும் எனது

உயிர் உருகும் சத்தம்.

அந்த வரிகளில் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களில் சட்டென நீர் சேர்ந்தது

அடுத்த நொடி கதவை திறந்துக்கொண்டு காரிலிருந்து இறங்கியவள், கதவை வேகமாக மூடிவிட எத்தனிக்க அந்த நொடியில் அவள் கட்டை விரல் கதவினிடையே சிக்கி ஒரு நொடி அழுந்தி...

சட்டென கையை இழுத்துக்கொண்டவள் உயிரை சுண்டி இழுத்தது போல் எழுந்த வலியில் அம்...மா.. என்று துடிக்க...

அடுத்த நொடி பதிறிக்கொண்டு இறங்கி ஓடி வந்தான் பரத். அவனையும் அறியாமல் அவள் விரல்களை கையில் ஏந்திக்கொண்டவன் 'என்னடா கண்ணம்மா சின்ன குழந்தை மாதிரி விரலை நசுக்கிகிட்டு.... ரொம்ப வலிக்குதாடா....' என்றான் இதமான குரலில். 

தொடரும்...

Go to episode # 04

Go to episode # 06

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.