(Reading time: 12 - 23 minutes)

னைவரும் யோசனையுடன் பார்க்க, மது முகத்தில் அதிர்ச்சியும், ரகு முகத்தில் கோபமும் அப்பட்டமாய் தெரிந்தது.

மேகாவிற்கு முழு கதை தெரியாது என்ற போதிலும், oralavu தெரிந்த விஷயங்களை வைத்து அவளுக்கும் பிரகாஷை பிடிக்காது போனது. அவள் கேள்வியாக மதுவை நோக்க அவள் பார்வை அண்ணனிடமே இருந்தது. ரகு கொஞ்சம் பொறு என்பது போல் சைகை செய்து விட்டு எழுந்து திவக்கரின் அருகில் சென்றான்.

"என்ன சொல்ல வரிங்க திவாக்கர், இவன் சாரி இவரு எதுக்கு இப்போ கூட்டிட்டு வந்தீங்க"

"எல்லாம் தெளிவா சொல்றேன் ரகு"

என்றவன்,

"அப்பா அம்மா இது பிரகாஷ், மது சென்னையில வேலை பார்த்தப்போ அவளோட க்ளோஸ் ப்ரெண்டு"

"வணக்கம் அங்கிள் வணக்கம் ஆன்ட்டி"

"வணக்கம் பா"

" இதுக்கு மேல நானே சொல்றேன் அங்கிள், எனக்கு மதுவ முதல்ல பார்த்த உடனே பிடிச்சுருச்சு, எங்க அம்மா கிட்டயும் ஒரு தடவை கேட்டேன் அவங்களும் சம்மதம் சொல்லிடாங்க,அதனால அவளை நேசிக்க ஆரம்பிச்சேன், அதை நான் அவ கிட்ட சொல்ல போன நேரம் ஏதேதோ குழப்பங்கள் நடந்து, அவ வேலைய விட்டு போயிட்ட,அதுக்கு அப்புறம் இப்போ தான் பாக்க முடிஞ்சுது, இவ்வளவு நாளும் அவளுக்காக தான் நான் காத்திருந்தேன்"

என்று எல்லாவற்றையும் சுருக்கமாக சொல்லி முடிக்கவும், மூர்த்தி மகளை ஒரு தரம் பார்த்து விட்டு மனைவியை பார்த்தார் அவர் குழம்பி இருபது தெரியவும்,

"இப்படி திடீர்னு நீங்க கேட்டா"

என்றவரை இடைமறித்து

"இல்லப்பா பிரகாஷ் ஏற்கனவே கேட்டுட்டார், நானும் இவர பத்தியும் இவங்க பேமிலி பத்தியும் விசாரிச்சுட்டேன், ரொம்ப நல்ல குடும்பம், அவங்க அப்பா கூட உங்களுக்கு சம்மதம்னா பிள்ளைங்க சந்தோசத்தை விட எனக்கு ஏதும் முக்கியம் இல்லைன்னு சொல்லிட்டார்,இத விட நம்ம மிதுக்கு என்னப்பா வேணும்" எனவும்,

பெற்றோர் இருவரும் மௌனமாக யோசிக்க, கோபத்தின் உச்சத்தில் அவர்கள் என்ன சொல்வார்கள் என்று காத்திருக்க, கைகளை பிசைந்த படி என்ன செய்வது என மதுமிதா தவித்து கொண்டிருந்தாள்.

ங்கு ஆதியின் நிலையோ இதை விட மோசம்.

அவள் கலங்கிய தோற்றமும், பின் அவள் சட்டென்று சென்றதுமே அவன் நினைவில் இருந்தன. அவளை அங்கு அந்த அறையில் பார்த்தது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று தான் என்றாலும் தான் தடுமாறி தன் தடம் மாறி போனது புதிராகவே தோன்றியது.

கீழே வந்தவுடன் நிச்சயதார்த்தம் என்று எல்லோரும் கூற, அது வரை மதுவை பழி வாங்க வேண்டும் என்று இருந்தவன். மனதில் ஏற்பட்டு இருந்த சிறு தடுமாற்றத்தால், கோபம் எல்லாம் எங்கே போனது என்றே புரியவில்லை.

முந்தைய இரவில் கூட அவள் நினைவு வேண்டாமென பின் தள்ளியவன், இன்று அவளை நேரில் அதும் அருகில் கண்டவுடன் மதி மயங்கி நின்றதை என்னவென்று சொல்வான்.

அதன் பின் நடந்த எதுவும் அவன் நினைவில் இல்லை, மேடைக்கு சென்றது இரு குடும்பத்து பெரியவர்களும் தட்டை மாற்றி கொள்ள, அவனும் ஸ்வேதாவும் மோதிரங்கள் மாற்றி கொண்டது என எதுவுமே கருத்தில் பதியவில்லை.

எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கீ கொடுக்க பட்ட பொம்மையை போல் பரிசு பொருகளை வாங்கி கொண்டு செயற்கை புன்னகை ஒன்றை முகத்தில் அப்பி கொண்டு நின்றான்.

புரியாமல் போனது எல்லாம், இல்லை புரிய வேண்டாம் புரிந்து கொள்ள மாட்டேன் என அவன் விலக்கியது எல்லாம் அவள் கலங்கிய கண்களுடன் அர்த்தம் பொதிந்த ஒரு பார்வை பார்த்து விட்டு செல்லவும்,, ஆதிக்கு எல்லாமே புரிந்து போனது.

எல்லாமே தான்!

குடும்ப படம் எடுக்க வேண்டுமென போடோக்ராபர் சொல்ல, தன்னை ஒட்டி காதலும் பெருமிதமும் பொங்க நின்றவளை சற்று தள்ளி நின்று போடோவிற்கு இயந்திரமான ஒரு புன்னகையை உதிர்த்து மனதிற்குள்

கண்ணீருடன் மானசீகமாக அவளிடம் சொன்னான்

லவ் யூ மிது!!!!!

காதல் பெருகும்… 

Episode # 05

Episode # 07


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.