(Reading time: 12 - 23 minutes)

தித்யன் ஒரு பெண்ணின் கையில் மோதிரம் அணிவித்துக் கொண்டிருந்தான். அது ஸ்வேதா, ஆம் அவளே தான் சற்று முன்பு கூட  ஏதோ அவளுக்கு நிச்சயதார்த்தம் என்று கூப்பிட்டாளே? ஆனால் ஆதி?

அப்போது தான் உரைத்தது, அவன் கூட போனில் என்கேஜ்மன்ட் என்று யாருடனோ பேசினானே?

அவன் பிங்க் குர்தா, அவளின் பிங்க் நிற சேலை இந்த ஹால்?

அப்போது இவை அனைத்தும் நிஜம் தான?

என்ன இது? அப்போது அந்த ரூமில் நடந்தது?

ஒன்றும் புரியாமல் கண்கள் குளமாக அவனையே பார்த்தபடி நின்றவளின் நம்பிக்கை கரைய துவங்கியது.அப்போது ஆதியும் அவள் புறம் பார்க்க, அவளின் வெளிறிய முகமும், கலங்கிய கண்களும் கண்டு என்ன நினைத்தானோ? முகத்தில் கனிவும் கவலையும் ஒரு சேர தோன்றி இருந்தது அப்படி தான் மது நினைத்தாள்.

 ஆனால் ஆதி மனதிலோ??

( அதை அப்புறம் சொல்றேங்க, பர்ஸ்ட் எப்படி இந்த என்கேஜ்மன்ட் நடந்தது? ஸ்வேதா எப்படி வந்தாள்? இதெல்லாம் உங்களுக்கு தெரிய வேண்டாமா? வாங்க பார்க்கலாம்)

தியை வழி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்த மூவரும் அவரவர் வேளையில் ஈடுபட.. சரண்ராஜ் திவ்யாவை அழைத்து சீக்கிரம் கிளம்புமாறு சொன்னார். திவ்யா என்ன என்று விசாரிக்க,

“ரஞ்சனியும், மகேஷும் நேத்து போன் பண்ணி இருந்தாங்க, ஆதி அங்க வரும் போது அவனுக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்னு உங்க அண்ணன் என்கேஜ்மன்ட் ஏற்பாடு எல்லாம் பாத்துட்டு இருக்காராம்”.

"அப்படியா?! அண்ணா என்கிட்டே சொல்லவே இல்லையே"

"என் தங்கச்சி தாண்டி என்கிட்ட சொன்னா"

"ஓஹோ அப்படியா கதை இந்தியா போய் பேசிக்கறேன் அண்ணிய"

"ஆமாம் நம்ம பாப்பா கிட்ட சொல்லலாமா இல்ல அவளுக்கும் சர்ப்ரைஸ் தரலாமா?"

"வேண்டாங்க அவளுக்கும் சர்ப்ரைசா இருக்கட்டும் நான் போய் அவளையும் ரெடியாக  சொல்றேன்"  

"சரி சரி சீக்கிரம் நான் என்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சு நீங்க தான் பாக்கி"

"ம்ம்ம் சரிங்க" என்று புன்னைகையுடன் சென்று ஸ்வேதாவிடம் இந்தியா போவதாக சொல்ல குதூகலித்த போதும் எதற்காக என்று புரியாமல் கிளம்பினாள்"

தி சென்னை வந்து இறங்கியவுடன், ஸ்ரீகாந்த் அவனை அவன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான். என்ன எது என்று ஆதி கேட்க,

“எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க மாப்பிள, ஏதோ வேண்டுதலாம் அத்தை தான் சொன்னாங்க நீங்க வந்த உடனே போலாம்னு இருந்தாங்க ஆனா நம்ம கோவில் திருவிழா இன்னைக்காம் அதான் இப்போவே செஞ்ச நல்லதுன்னு போய்டாங்க, நாளைக்கு தான் வருவாங்க "

என்று அவன் பதில் சொல்ல ஆதி ஒரு சிறு யோசனைக்கு பின் அமைதியானான்.

இருந்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு அவன் வருகிறான் அவனை பார்க்காமல் என்ன கோவில் குளம் என்று சிறு எரிச்சலும் வருத்தமுமாக ஓய்வெடுக்க சென்று விட்டான்.

அவன் வந்த அடுத்த சில மணி நேரங்களில் சரண்ராஜ் குடும்பமும் சென்னை வந்து சேர்ந்தது.

அன்றைய நாள் தனிமையில் கழிய அன்றிரவு மூடி வைத்த நினைவுகள் எல்லாம் வெளி வந்து அவனுக்கு கண்ணாமூச்சி காட்டின. அதற்கு ஒரு காரணம் அவளின் அவன் வெறுத்து ஒதுக்கியவளின்  பிறந்த நாளும் தான்.பழைய நினைவுகளை பின் தள்ளி உறங்கி போனான்.

அதே நேரம் மகேஷின் வீட்டில் எல்லாரும் அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்ய ஒரு வழியாக ஸ்வேதாவிற்கு எல்லாம் புரிந்து போனது.

சந்தோசமும் வெட்கமும் தானாக வந்து ஒட்டி கொள்ள கனவுகளில் சஞ்சரித்தவள் இனிய நினைவுகளுக்கு இடையில் உறங்கி போனாள்.  

அடுத்த நாள் முழுக்க ஆதிக்கக லீவ் எடுத்ததாக கூறி ஸ்ரீகாந்த் வீட்டிலேயே இருக்க அவனுடன் பொழுது கழிந்தது, என்றாலும் அனைவரின் வருகைகாக காத்திருந்தான்.

திடீரென மாலை ஸ்ரீகாந்த் தன்னை அலங்கரித்து அந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.எதுவுமே புரியாமல் தான் அவனும் அங்கு சென்றது.

(பிளாஷ் பேக் முடிஞ்சுது, ஹிஹி ஓகே, பேக் டு பிரசன்ட்)

தற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் சட்டென்று வெளியேறி விட்டிருந்தாள் மது. என்ன ஆனாலும் சரி அழ கூடாது என்று நினைத்த படி ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து தன்னை நிலை படுத்தி கொண்டு நகர எத்தனித்த நேரம்,

"மது இங்க என்ன பண்ற? ஒ இந்த பார்ட்டி ஹல்னு நினைச்சிய இல்லடா அங்க"

என்று தன்யா கையில் ப்ரிஷனுடன் வரவும், அவசரமாக சிரிப்பை வரவழைத்து, ப்ரிஷனை தூக்கி அவனுடன் பேசிய படியே தன்யாவுடன் நடந்தாள்.

அங்கே மது, ரகு, தன்யாவின் குடும்பம்,மதுவின் நண்பர்கள், அவளுடன் வேலை செய்பவர்கள் என அனைவரும் இருக்க,

அங்கே கதாநாயகி ஆகி போனாள் மது.

எல்லாம் எங்க ஏற்பாடு தான் என்று ரகுவும், திவக்கரும் காலரை தூக்கி விட்டு கொள்ள, ஒரு சிறு புன்னகையுடன் அவர்களிடம் சென்றாள்.

"ஹாப்பி பர்த்டே டார்லிங்" என ரகு கண் சிமிட்ட

"என்னடா இதெல்லாம்" என்று போய் கோபம் காட்டினாள்.

"சும்மா டீ உனக்கு பிடிக்கும்னு கோவில்,டான்ஸ் ஸ்கூல் எல்லாம் போனோம்ல"

"இது என் திருப்திக்காக" என்று சொன்னவன்,அவளிடம் கத்தியை கொடுக்க

இரண்டாம் முறை கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடினால் மது.

ஆனால் மனது முழுதும் ஆதி நிறைந்திருந்தான்.

அனைவரும் பரிசுகள் கொடுத்து , எல்லாருடனும் மதுவை நிற்க வைத்து போட்டோ எடுத்து, பின் அவளை மட்டும் தனியாக விதவிதமாக போட்டோ எடுத்தனர் ரகுவும், திவாக்கரும்.

பார்ட்டிக்கு வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சம்மாக செல்லவும் அங்கே குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.

அப்போது திவாக்கர், தன் பெற்றோரிடம் பேசினான்,

"அப்பா"

"சொல்லுப்பா"

"நம்ம மதுக்கு நான் எது செஞ்சாலும் அது நல்லதா தானப்பா இருக்கும்"

"இது என்ன டா திடிர்னு லூசு மாத்ரி கேள்வி" என்று லலிதா கேட்கவும்,

"சொல்லுங்க மா"

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அமைதியாக ஆம் என்பது போல் தலை அசைக்க, அங்கே நடப்பதை அனைவரும் புரியாமல் பார்த்தனர் ரகு உட்பட, அவனுக்கும் புரியவில்லை.

"ஒரு நிமிஷம் இருங்க"என்று வெளியே சென்றவன்,

சில நிமிடங்களில் பிரகாஷுடன் வந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.