(Reading time: 23 - 45 minutes)

 

துல என்ன யோசிக்கறதுக்கு இருக்கு. அவன் சொன்னது கரெக்ட் தானே ஆரு. எனக்கென்னவோ இது தான் சரின்னு தோணுது.” என்றாள் ஜெனி.

எல்லோரும் அவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் நேரமாகிறது என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள்.

“இந்த பிரச்சனைல இந்த புள்ளைக்கு மர கிர கிழண்டுருச்சோ” என்றான் அருண்.
ஆரு அவனை முறைக்க, “சாரி யுவர் ஹானர்” என்றான்.

டுத்த நாள் காலை கவின் முதல் ஆளாக வந்து விட்டிருக்க, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

அனு, ஆரு, நந்து மூவரும் ஒன்றாக செல்ல, அங்கு ஏற்கனவே அருண், கவின் இருந்தார்கள். கூடவே தீப்தியும்.

ஆரு கவினை கண்டு கொள்ளாமல் இருக்க, அனுவும் முகத்தை திருப்பி கொண்டிருந்தாள்.

(இதை எல்லாம் கூட கவின் அட்ஜஸ் செஞ்சிப்பான்)

நந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். (இதை தான் அவனால ஏத்துக்க முடியலை)

அனு முறைச்சா கூட பரவால்ல, இது எல்லாம் முறைக்குது பார்த்தியா என்று எண்ணிக் கொண்டான்.

இந்த தீப்தி வேறு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் தீப்தி உன்னை ஆபிஸ் ரூம்ல வர சொன்னாங்க. சொல்ல மறந்துட்டேன்” என்றான் கவின்.

“ஓ. சரி. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்” என்றவாறு எல்லோரையும் பார்த்து சிரித்தவாறு சென்றாள்.

“இவ வழக்கம் போல நம்மளை பார்த்து முறைச்சா கூட பரவாயில்லை. பட் தயவு செஞ்சி சிரிக்க வேண்டாம்ன்னு சொல்லு” என்றாள் அனு ஆத்திரத்துடன்.

ஆரு சிரித்துக் கொண்டாள்.

“ஏன் மச்சி. நாம ரெண்டு பெரும் ஒன்னா தானே வந்தோம். எப்ப ஆபிஸ் ரூம்ல இந்த பொண்ணை வர சொன்னாங்க” என்றான் அருண்.

“அது சும்மா லூ லூ லாய்க்கு” என்றான் கவின் கூலாக.

“என்னடா இப்படி சொல்ற. ஏன் இப்படி செஞ்ச. அவ திரும்ப வந்து கேட்டா என்ன சொல்லுவ”

“ஆபிஸ் ரூம்ல எத்தனை பேர் இருக்காங்க. யாராச்சும் ஒருத்தரை கை காமிச்சி விட வேண்டியது தான். யார் அங்க ஒழுங்கா பதில் சொல்ல போறாங்க. பின்ன எவ்வளவு நேரம் இவளை சகிச்சிக்கறதாம்”

அவன் சொன்ன பதில் ஓரளவிற்கு அங்கிருந்த எல்லோருக்கும் சந்தோசமாக தான் இருந்தது.

அருண் மட்டும் தான் ‘இவன் நல்லவனா கெட்டவனா’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

கவினுக்கு அவன் மைன்ட் வாய்ஸ் வெளியேவே கேட்டது. (அருண் தலை மேல ‘இவன் நல்லவனா கெட்டவனா’ ன்னு எப்.பி. ல போட்டோ போட்ட மாதிரி தெரிஞ்சது.)

“ம்ம்ம். கெட்டவன்” என்றான் கவின்.

“என்ன மச்சி. என்ன சொன்ன”

“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத டா”

“அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சி”

“ஆமா”

“அது விடு டா. இந்த பொண்ணுங்க ஏன் டா உன்னையே சுத்தி வராங்க. இங்க பெர்சனால்டியா நான் ஒருத்தன் இருக்கறதே இவங்க கண்ணுக்கு தெரியலையா”

விழுந்து விழுந்து சிரித்தான் கவின்.

அவனை பிடித்து நிறுத்தி “இப்ப ஏன் டா இப்படி சிரிச்சி அசிங்க படுத்தற”

“தெரிஞ்சிடுச்சா. ஓட்டடகுச்சி மாதிரி இருந்துக்கிட்டு என்னடா உன்னை நீயே பெர்சனால்டின்னு சொல்லிக்கற”

“அங்க மட்டும் என்ன வாழுதாம்”

“ஹேய் ஐயா ஜிம்க்கு போக ஆரம்பிச்சிட்டேன் தெரியும்ல. இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்ல பாரு”

“அத விடு. இந்த தீப்தி ஏன் டா உன் பின்னாடியே சுத்தறா”

(எப்படியாவது அவனிடமிருந்து இதற்கு பதில் கிடைத்து விடுமா என்று தான் அருணும் முயற்சி செய்து பார்த்தான். ஆனா கவினா சிக்குவான்)

“என் பேர் என்ன”

“அவ உன் பின்னாடி சுத்துரதுல உனக்கு உன் பேரே மறந்து போயிடுச்சா”

“ஹேய் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“கவின். அதுக்கு என்ன இப்ப”

“அதுக்கு என்ன மீனிங் தெரியுமா”

“அது என்ன எழவோ. அதையும் நீயே சொல்லித் தொலை” (இவன் வேலைக்கு ஆக மாட்டான்னு அருணுக்கு தெரிஞ்சி போச்சி)

“கவின்னா அழகுன்னு அர்த்தம்”

“அது சரி. அப்ப நான் கூட நாளைக்கு போய் ஷாருக் கான் இல்ல ரித்திக் ரோஷன்னு பேரை வச்சிக்கறேன்”

“அது எதுக்கு”

“இல்ல. அப்படி பேரை பார்த்து தான் மயங்குறாங்கன்னா என் பேரை நான் மாத்தி வச்சிக்கறேன்” என்றான் வில்லங்கமாக.

கவின் சிரித்துக் கொண்டே திரும்பி பார்க்க, மற்ற மூவரும் இப்போது கொலை வெறியாக பார்த்துக் கொண்டிருக்க, ஒரு அசட்டு சிரிப்புடன் “ஹேய் அனு. வாயேன் கான்டீன் போகலாம். என்ன வேணுமோ சாப்பிடு. பெட் படி நான் தானே பே பண்ணணும்” என்றான்.

“பேசாம போயிடு. சுடு தண்ணி எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன்”

“இப்படி டீசன்ட்டா சொன்னா போயிட போறேன்” என்று சொல்லி சிரித்துக் கொண்டே அருணை அழைத்துக் கொண்டு (சாரி இழுத்துக் கொண்டு) கிளம்பி விட்டான்.

ந்துரு நந்துவை பார்க்க வருவதாக கூறவே, கிளாஸ் முடிந்து அவள் காத்திருந்தாள். தனியாக அல்ல. அனு, ஆரு, கவின், அருண் படையோடு.

அவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது வின்சி அங்கே வந்தான்.

“ஹாய் அனு” என்று அனுவிற்கு ஹாய் சொல்லிக் கொண்டிருந்தவனின் முகம் மட்டும் ஆருவை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆரு அப்போது தான் ஒரு புத்தகத்தில் தலை விட்டுக் கொண்டிருக்க,

“வின்சி. நான் இங்க இருக்கேன்” என்று அவனை சீண்டினாள் அனு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.