(Reading time: 23 - 45 minutes)

 

வளருகில் வந்து அவள் தலையில் கொட்டியவன், “அனு. டூர் அரேஞ் செஞ்சிருக்காங்க” என்றான்.

“எங்களுக்கு யாரும் சொல்லலையே” என்று கவின் கேட்டான்.

“இல்ல. இப்ப தான் ஓகே சொல்லிருக்காங்க. சொல்லுவாங்க”  என்றான்.

“ஓஹோ நீங்க அதுக்குள்ளே இங்க சொல்ல வந்துட்டீங்களா” என்று சிரித்தார்கள் அருணும், கவினும்.

அனு தான் உற்சாகமானாள்.

“ஹே. சூப்பர் சூப்பர். ஜாலியா டூர் போகலாம்” என்று கத்தினாள்.

“ம்ம்ம். உங்களுக்கு ஏதாச்சும் பிளேஸ் பிடிச்சிருந்தா சொல்லுங்க. நான் அந்த இடத்தையே போகலாம்ன்னு சொல்லி பார்க்கறேன். வர பிப்டீன்த் தான் டேட் பிக்ஸ் பண்ணி இருக்காங்க. கன்டினியூயஸா த்ரீ டேஸ் லீவ் வருது. அதான்”

“ஓ ஓகே” என்று அனு சீரியசாக யோசித்துக் கொண்டிருக்க,

“டூர் போறாங்க சரி. நீ ஏன் இவ்வளவு எக்ஸைட்டிங்கா இருக்க” என்றாள் ஆரு வின்சியை பார்த்து.

ஒன்றும் புரியாமல் அவன் விழிக்க,

“ஒழுங்கா வச்சிருக்க அரியர் எல்லாம் கிளியர் பண்ணு. எந்த டூரும் நீ போகத் தேவை இல்லை” என்றாள்.

அனு அதற்கு ஆட்சேபனையாக பேச வாயெடுக்க, “அனு நான் உன் கிட்ட சொல்லலை. நீ இதுல பேசாத.” என்று சொல்லி விட்டு வின்சியிடம் “புரிஞ்சிதா. பர்ஸ்ட் அரியர் கிளியர் பண்ணு” என்றாள்.

அவனும் தலையை ஆட்டினான்.

(இது தேறாது என்று எண்ணிக் கொண்டாள் அனு)

அவன் அங்கிருந்து அகல, அனுவும் அவனுடன் சென்றாள்.

சிறிது தூரம் சென்ற பிறகு, “அவ கிடக்குறா, நீ பீல் பண்ணாத சரியா” என்றாள்.

அவனோ சிரித்த முகத்துடன் “அனு ஆரு என் கிட்ட பேசிட்டா” என்றான்.

அப்போது தான் அனுவிற்கும் புரிந்தது, ஆரு அவனிடம் நேராக பேசி விட்டாள் என்பது.

இருவரும் மகிழ்ந்தனர்.

“இருந்தாலும் அவ உன்னை எப்படி டூர்க்கு வர கூடாதுன்னு சொல்லலாம்” என்றாள் அனு.

“ஆரு என் மேல இருக்கற அக்கறைல தானே அனு அப்படி சொன்னா. அதுவும் எவ்வளவு உரிமையா சொன்னா. டூர் எங்க போயிட போகுது அனு. சரி நான் போய் படிக்கணும். நான் போகவா” என்றவாறு கிளம்பினான்.

இது தேறவே தேறாது என்று எண்ணிக் கொண்டே அனு மற்றவர்களிடம் வந்து சேர்ந்தாள்.

அதற்குள் அங்கு சந்துரு வந்து விட்டிருக்க, நந்து முகம் உம்மென்றிருந்தது.

“என்ன அண்ணா. என்ன ஆச்சி” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அனு.

“அது ஒன்னும் இல்லை. டூர் அரேஞ் பண்றாங்க. என்னால வர முடியாதுன்னு சொன்னேன். அதான் மேடம் உம்முன்னு இருக்காங்க”

“ஓ. ஏன் வர முடியாது.”

“இல்லடா. ஏற்கனவே அந்த டேட்ல எனக்கு வேற வொர்க் இருக்கு. அதான்.”

என்ன சொல்லியும் நந்து சமாதானம் ஆகவில்லை.

“அது சரி. நான் நந்துவை மட்டும் தானே வெயிட் பண்ண சொன்னேன்” என்றான் சந்துரு.

“அது நாங்க நந்துவோட பாடி கார்ட்ஸ் சார்” என்றான் கவின்.

“ஓ. உன் பாடிக்கே நாலு கார்ட்ஸ் வேணும். நீ எல்லாம் பாடி கார்டா” என்று கவின் முதுகில் ஒரு தட்டு தட்டினான் சந்துரு.

“சார். எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாவே இருக்க கூடாதா” என்றான் கவின் முதுகை தடவிக் கொண்டே.

சந்துருவோ சிரிக்க,

“சார். கவினை என்னவோன்னு நினைக்காதீங்க. அவன் ஜிம்க்கு எல்லாம் போக ஆரம்பிச்சிட்டான் தெரியுமா. இப்படி வலிக்கற மாதிரி எல்லாம் செய்யறது சும்மா ஆக்ஷன்” என்றான் அருண்.

“அடப் பாவி” என்று கவின் அவனை பார்த்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த அடி கவினுக்கு விழுந்தது.

“ஐயோ” என்று கதறினான் கவின்.

இன்னைக்கு நான் பார்ம்ல இல்ல, அதோட எனக்கு டைமும் இல்ல, சோ இந்த வீக் நோ ட்விஸ்ட். எல்லாரும் ஜாலியா இருங்க. எனக்கு தான் கொஞ்சம் பீலிங்கா இருக்கு

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 16

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 18

நினைவுகள் தொடரும்...

Bala is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the two writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.