(Reading time: 37 - 74 minutes)

 

தேங்க்ஸ்டா மச்சா... இருந்துமே ஏதோ மிஸ் ஆகுதடா என்னனு தெரியலை” என்று அவன் கூறவும், “இதோ இப்போ சரி பண்ணிடலாம்.. உன்கிட்ட skype இருக்குல்ல, வீடியோ chatku வா” என்று கூறி கைபேசி அழைப்பை நிறுத்திவிட்டு கணினியை உயிர்பித்தான். அதில் skype கால் போட்டு இருவரின் முகமும் வந்ததும். எங்கிருந்து தான் அவ்வளவு சந்தோஷம் என்றே புரியவில்லை இருவருக்கும்.

“மாப்ள......”

“மச்சா...”

என்று இருவரும் கத்தி அணைத்துக்கொள்வது போல் கைகளை மற்றவரை நோக்கி விரித்துக்கொண்டனர். அஸ்வத்தின் குரலில் அருகில் இருந்தவன் பதறி போக, சாரி என்று அழகாக முகம் சுருக்கி சொல்லிவிட்டு நிரஞ்ஜனிடம் திரும்பினான். அவர்களின் செயல்களில் அவர்களுக்கே சிரிப்பாக இருந்தது. இத்தனை நாள் எப்படி பேசாமல் கடத்தினோம் என்று வியக்கும்வண்ணம் நேரம் கடக்க பேசினர். “அருகில் இருந்தவனோ டேய் என்னடா நடக்குது இங்க? ஏன்டா உன் காதலிக்கிட்ட பேசுற மாதிரி மணிகணக்கா பேசுற? மனுஷன தூங்கவிடுங்கடா” என்று அழுகாத குறையாய் கதறினான். அவன் கெஞ்சவும் நிருவின் பக்கம் திரும்பி, “சரிடா ரொம்ப கெஞ்சுறான் நீ தூங்கு நாளைக்கு பேசலாம்” என்று கூறினான். அதற்கு மறுப்பாக நிரஞ்ஜன் “என்னடா அவ்வளவு தானா? எத்தனை மாசம் ஆச்சு இப்படி பட்டுன்னு கடையை சாத்துற?” என்று கிண்டலாக பேசிவிட்டு கைபேசியில் அலைப்பதாக கூறினான். அஸ்வதிற்கும் சரியெனபட தொலைபேசியில் தொடர்ந்தனர்.

“அப்பறம் என்ன மாப்ள பிளான்? மும்பைலேயே தங்கிட போறியா?”

“இல்லைடா இன்னும் ஒரு 6 மாசம் அப்பறம் bond முடிஞ்சதும் சென்னைக்கே வந்திடலாம்னு இருக்கேன். வேற வேலை தேடனும்.”

“அதுக்கு ஏன்டா வேலையை விடுற? இங்க உங்க நிறுவனத்தோட branch இருக்கும்ல அதிலேயே தொடர்ந்து வேலை செய்ய வேண்டியது தானே...”

“நானும் யோசிச்சு பார்த்தேன்டா ஆனால் இது பத்தாது அஸ்வத்.. இன்னும் நிறைய பண்ணனும் பெருசா, ஆனால் என்ன பண்ணலாம்னு தான் தெரியலை” என்று யோசிக்கும் விதமாக சொன்னான்.     

அஸ்வத் இத்தனை நாட்கள் யோசித்து ஒரு பிளான் போட்டு வைத்திருக்க, அதை  அவனிடம் கூறினான். “இதான்டா என்னுடைய பிளான் financial background கொஞ்சம் வேணுமே அதனால தான் நானும் இங்க வேலை செய்யுறேன் இன்னும் கொஞ்ச மாசத்தில அதை தொடங்கிட வேண்டியது தான். உனக்கு சம்மதம்னா ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம்..” என்று கேள்வியாக முடித்தான்...

“ரொம்ப நல்ல ஐடியா மச்சா.. உடனேயே பிரதிபலிப்பு தெரியாது ஆனால் நல்ல பிளான்டா.. பண்ணிடலாம். நானும் இந்த 6 மாசம் முடிஞ்சதும் சென்னைக்கு வந்திடுறேன் சேர்ந்தே செய்யலாம்” என்று பேசிக்கொண்டனர்.

“டேய் சென்னைல வேண்டாம் திருப்பூர்ல தான் இந்த பிளான்” என்று அஸ்வத் கூறவும் சிறிது யோசித்தவன் “சரிவா பார்த்துக்கலாம் திருப்பூரின் தலைஎழுத்து நம்மகிட்ட மாட்டிகிச்சு” என்று என்று கூறி சிரித்தான் நிரஞ்ஜன்.

ஒருவழியாக தங்கள் வருங்காலத்தை பற்றி ஒரு முடிவெடுத்தபின் நிம்மதியாக உறங்கினர். பல நாட்களுக்கு பின் இருவரின் மனமும் நிறைந்தது.

ஹாய் டி பொண்டாட்டி...” என்று சமையல் செய்யும் மனைவியை பின்னால் இருந்து அணைத்தவாறு கொஞ்சினான் நவீன்.

“யோவ் புருஷா...” என்று ஆனந்தமாக அவன் அணைப்பை ஏற்று சமையலை தொடர்ந்தாள்.

“என்னது யோவா?!?! என்னடி மரியாதை கொஞ்சம் கொஞ்சமா தேயிது?” என்று கிண்டலாக கேட்டாலும் கொஞ்சல் மட்டும் நிக்காமல் அதன் வேலையை தொடர்ந்தது...

அவன் இன்ப இம்சைகளை தடுக்க மனமின்றி “பின்ன வீட்டில ஆளே இல்லை அப்பறம் எதுக்கு மரியாதையா கூப்பிடனும்?” என்று அவன் தோணியிலேயே பதில் தந்தாள்.

“அதுசரி இந்த வீட்ல யாருமே இல்லன்ற செய்தி இப்படி பேசுறதுக்காக மட்டும் தானா????” என்று அவன் மேலும் அவளை அணைத்தவாறு கேட்டான். அவனது பேச்சின் அர்த்தம் புரிந்துபோக முகம் சிவந்துவிட்டது அவளுக்கு. “அடடா உங்களுக்கு வேற வேலையே இல்லங்க போதும் போய் டிவி பாருங்க என்னை சமைக்க விடுங்க” என்று பொய்யாக மிரட்டினாள்.

“அதுசரி... உனக்கு என்னவோ ஆசையே இல்லாத மாதிரி என்ன ஒரு நடிப்புடா சாமி...” என்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நகர்ந்தான் நவீன்.

அவன் நகர முயல அவனை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தம் தந்தாள் அவனது அன்பு மனைவி... அவன் கிறக்கமாக பார்க்க சரியான நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. இருவருக்கும் வீட்டு பெரியோர் வந்துவிட்டனர் என்று புரிந்து போக, நவீன் ஏக்கமாக போவதை சிரிப்போடு பார்த்தாள் அர்ச்சனா.

ல்லூன்ஸ ஒழுங்கா ஓட்டுடா... பாரு எல்லாம் கீழ விழுது...” அதட்டுவது போல் கூறினான் அர்ஜுன்.

“பார்த்துதாண்டா ஓட்டுறேன்” பொறுமையை இழுத்துபிடித்து கொண்டு கூறினான் நவீன்.

“அனு என்ன பல்லூன் ஊதுற? இத்துநூண்டா கொஞ்சம் பெருசாதான் ஊதேன்” என்று அனைவரையும் அதிகாரம் பண்ணிக்கொண்டு இருந்தான்.

அனு வெறும் முறைப்போடு நிற்க, நவீன் வந்து சேர்ந்தான். “டேய் உன் அலப்பறை தாங்க முடியலை எங்க நீ ஊதேன் பார்ப்போம். வயித்துல இருக்க stove காலி ஆகிடும் போல அவ்வளவு பல்லூன் ஊதிருக்காள்...” என்று அனுக்கு பதில் நவீன் கூறினான்.

“சரிடா சரிடா விடு....” என்று திருதிருவென முழித்துவிட்டு இடத்தை காலி செய்தான் அவன்.

அஹல்யா பார்த்து பார்த்து தன் செல்லகுட்டி விபுனுக்கு ஆடையை உடுத்தினாள். அவனது முதல் பிறந்தநாள்... ஊரையே கூட்டியாயிற்று, அஹல்யா விபுனுக்கு ஆடை அணிவிக்க, அனு அவனுக்கு அலங்காரம் பண்ணிவிட, அர்ச்சனா அவனுக்கு சுத்திபோட்டாள். தேஜு இவர்கள் பண்ணுவதெல்லாம் பண்ணட்டும் என்று அருகிலேயே நின்று கொஞ்சிக்கொண்டிருந்தாள். அனைவரும் தயார் ஆனதும் விபுனை தூக்கிக்கொண்டு அஹல்யா வந்தாள். விபுனுக்கு benten பிடிக்கும் என்பதால் அழகாக பெரிய benten கேக் தயார் செய்திருந்தனர். தத்தி தத்தி நடந்து தன்னை சுற்றி உள்ளோரை வித்தியாசமாக பார்த்து தெரிஞ்சவருக்கு மட்டும் தன் அழகு பற்கள் காட்டி சிரித்து விளையாடினான் விபுன். அவன் கைகளை பிடித்து கேக் வெட்டி கொண்டாடினர் சுற்றமும் நட்பும். அழகழகாக புகைப்படம் எடுக்கப்பட்டது.

“விபுன் குட்டி அத்தைட்ட வாங்கடா...” என்று அர்ச்சனா விபுனை நோக்கி கை நீட்ட அதே நேரத்தில், “அந்த அத்தை வேணாம் என்கிட்ட வாங்கடா” என்று தேஜு கை நீட்டினாள்.

இப்படி மாறி மாறி அனைவரும் அவனிடம் கைநீட்ட ஆனால் அவனோ யாரோடும் செல்லாமல் மாறி மாறி முகத்தை பார்த்து சிரித்து ஓடி விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான். வேகமாக ஓடிசென்றவன் அனு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க, அவளிடம் ஒட்டிக்கொண்டான். அவனை வாரி அள்ளி தூக்கி முத்தமிட்டாள். “என் செல்லம் என்கிட்ட தான் வருவான்” என்று மனம் குளிர்ந்துபோனாள்.

“ம்க்கும் ரொம்ப தான் ஏதோ வாங்கிதந்தே நல்லா ஐஸ் வச்சிருக்காள்” என்று இருவரும் கிண்டல் செய்யவும் விபுனுக்கு கோவம் வந்துவிட்டது...

“அத்த தித்தாத...” என்று மழலையாய் திட்டினான் விபுன். அவன் பேசும் அழகை ரசித்தவளுக்கு தன்னை ஒரு கண்கள் ரசித்து பார்ப்பது தெரியாமல் போனது.

விபுனுக்கு பிறந்தநாள் பரிசாக அழகிய செயின் வாங்கிவந்தான் அஸ்வத். அவனுக்கு அணிவிக்க விபுனை தேடுகையில் தான் அனு அவன் கண்ணில்பட்டது. கண்ணை கவரும் வண்ணம் மயில்கழுத்து நிறத்தில் ஒரு சல்வார் அணிந்து வந்திருந்தாள். பார்க்க பார்க்க மயங்கி போனான். ஒரு நிமிடம் அவளிடம் சண்டை போட்டதெல்லாம் மறந்துபோக இமைக்கு மறந்து பார்த்திருந்தாள். இவன் பார்த்துக்கொண்டே இருந்ததை தேஜு பார்த்துவிட்டு, “பார்த்து அப்படியே கண்ணுல வந்து ஓட்டிக்க போறாள்...” என்று கிண்டல் செய்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.