(Reading time: 37 - 74 minutes)

 

ன்னவென்று சொல்வது அந்த உணர்வினை, சுற்றி இருப்போர் எல்லாம் பரபரப்பாக இருக்க, ஒரு சின்ன வீறிட்ட அழுகை ஏன் அனைவர் முகத்திலும் புன்னகையை கொண்டுவருகிறது... அந்த நொடி மனம் கண்ட பயமெல்லாம் பறந்தோட, நெஞ்சமெல்லாம் ஆனந்தபூ தான். குழந்தையை செவிலியர் எடுத்துவரவும் அருகில் சென்று கூடிக்கொண்டனர். அழகான அந்த குட்டி கண்கள் வெளிச்சத்தில் கூச, கண்களை லேசாக சுருக்கி, உருவமே புரியாமல் சுற்றி இருப்பதை சின்ன இடைவெளியில் பார்த்துவிட்டு கண்களை மீண்டும் மூடிக்கொண்டது நவீனின் செல்ல தேவதை... இறுகி மூடியிருந்த கைகள் கன்னத்தோடு உரசிக்கொள்ள தன் கைகளுக்குள் அடங்கிபோகும் தன் செல்ல தேவதையின் பால்வாடை முகர்ந்து முத்தமிட்டான் நவீன். அழகாக வரைந்த புருவமும், சுருள் முடியும் நவீனை போன்று இருக்க, செதுக்கிய மூக்கும், சின்ன இதழும் அர்ச்சனாவை போல் இருந்தது. (கண்ணு யார் மாதிரின்னு இன்னும் ஒரு முடிவுக்கு வரலைங்க அவங்க)

அனைவரும் கொண்டாடிகொண்டிருக்க, அதே நேரம் அர்ச்சனாவை காண காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அவளை காண அனுமதிக்க, அர்ச்சனை காணவிரைந்தான்... அருகில் அமர்ந்து நெற்றியில் இதழ் பதித்து அவள் வழியில் பாதியை பகிர்ந்துகொள்ள கைகொர்த்திருந்தான் நவீன். அன்பு கணவனின் கைபட்டு கண்கள் திறந்தவளுக்கு, என்றும் இல்லாத நிம்மதி தன்னவனுக்கு ஒரு பிள்ளை பெற்றுதந்த பெருமை.

அவளை காண ஒவ்வொருவராக வர துவங்க, தேஜுவுக்கு தொல்லை தராமல் தன் அக்கா மகளை கண்ட உடனேயே சென்றுவிட்டான் நிரஞ்ஜன். அவனுக்கும் அவளை காணும் ஆவல் இருந்தது ஆனால் இப்போது அல்ல, அதற்கும் ஒரு திட்டம் வைத்திருந்தான். எப்போதும் போல் அனுவும் அஸ்வத்தும் தள்ளிநின்றே பார்த்துகொண்டதை பார்த்த அனைவருக்கும் பொறுமையே போய்விட்டது. இன்னும் எத்தனை நாட்கள் என்று அலுத்துவிட்டு கண்டுகொள்ளாதது போல் இருந்துவிட்டனர். அனு MBA சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகபோனது... தேஜுவும் அப்படித்தான் ஆனால் அவள் கொஞ்சம் நாட்கள் கழித்து சேர்ந்தமையால் அவள் தனக்கு பிடித்த gynacology படிப்பில் 7 மாதங்களை கடத்தி இருந்தாள். இருவர் வீட்டிலும் கல்யாண பேச்சே எடுக்க முடியாத நிலையில் இருந்தனர். அனுவின் வீட்டிலோ மாப்பிள்ளை ரெடி பெண்ணும் ரெடி ஆனால் எப்போது பேசுவது என்றே அவர்களுக்கு புரியவில்லை. தேஜு வீட்டிலோ முதலில் படிப்பை முடிக்கட்டும் என்று எண்ணினார்கள், அதைவிட அவளுக்கும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று தோன்றியது அவர்களுக்கு...

(5 மாதம் கழித்து)

ப்போதெல்லாம் வார விடுமுறை என்றால் தேஜு வீட்டிற்கு வந்துவிடுகிறாள். சென்னை கல்லூரியில் சேர்ந்திருக்க, அங்கே தனியே இருக்க மனமின்றி வந்துவிடுவாள். அப்படி வரும்போதெல்லாம் என்னதான் மறைத்தாலும் அனுவுக்கு நன்றாகவே அவளை தெரியும் பொய்யாக நடிக்கின்றாள் என்று. ஏதாவது செய்தாகவேண்டும் என்று தோன்ற, பேசாமல் அவளது பெற்றோரோடு பேசிப்பார்க்கலாமா என்று தோன்றியது அனுவுக்கு. பின்பு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு இது சரியாக இருக்காது முதலில் அவளது பிறந்தநாள் இன்னும் 2 நாட்களில் வர இருக்கிறது முடிந்தவரை அவளை அன்றாவது நிம்மதியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணமிட்டாள். தோன்றிய எண்ணத்தை செவ்வனசெய்ய ஒரு எண்ணுக்கு அழைத்தாள்.அழைப்பு முடித்து நிம்மதியுற்றவள், தான் நினைத்தது நினைத்தபடி நடக்குமா என்று சிறு கவலையும் வந்தது.

இரண்டு நாள் கடந்திருக்க, தேஜுவின் பிறந்தநாளும் வந்தது, முதல் ஆளாக 12 மணிக்கே அழைத்து பேசும் தோழி இன்னமும் அழைக்காமல் இருப்பது வியப்பாக இருக்க, தானே அழைத்துவிடலாமா என்று யோசித்துவிட்டு ச்சே நான் ஏன் பண்ணனும் அவளே பண்ணட்டும் என்று எழுந்த கோவத்தில் படுத்துவிட்டாள். என்னதான் தவிர்த்தும் மனதின் ஒரு ஓரத்தில் நிரஞ்ஜன் வந்துநின்றான். அங்கு நிரஞ்ஜனுக்கோ கைகள் அவனது அலைபேசியிலேயே இருந்தது.. அழைக்கலாமா வேண்டாமா என்று... (இவங்க என்ன பண்ண போறாங்கன்னு நெக்ஸ்ட் எபிசோடுல பார்க்கலாம்.... நோ நோ திட்டாதிங்க)          

Go to Kadhal payanam # 19

Go to Kadhal payanam # 21

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.