(Reading time: 18 - 36 minutes)

 

ம்மா..”

“என்னடா?”

“அனு எங்கமா?”

“வீட்டுக்கு போயிட்டு ரெடி ஆகிட்டு வரேன்னு சொன்னடா...”

“அக்கா மாமா, அண்ணி அண்ணா எல்லாம் எங்க?”

“அவங்களும் தான்டா...நீ போய் தலையை காயவச்சிட்டு வா, நான் சாப்பிட ரெடி பண்ணுறேன்...” என்று இன்முகமாகவே கூறினார். என்றும் இல்லாத மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. காலை உணவோடு கேசரி பாயசமும் ரெடி ஆவதை பார்த்துவிட்டுத்தான் சென்றாள் “என்னதிது ஒரு நாளில் எல்லாம் மாறிபோச்சு? நமக்கு பிறந்தநாள் அதுனால எதுவும் சொல்லகூடாதுன்னு இருக்காங்க போல” என்று எண்ணிக்கொண்டு போய்விட்டாள்.

சிறிது நேரம் சென்றிருக்க, அனு என்றும் இல்லாமல் புடவையில் வந்தாள் என்னடா இது என்றும் இல்லாத அதிசயம் என்று நினைத்துக்கொண்டாள் தேஜு... மேலே இருந்து அவளை பார்த்து புன்னகைத்துக்கொண்டே வந்தவள் அவள் நேரே லதாவிடம் செல்வதை பார்த்துவிட்டு அவளிடம் வந்தாள். அவள் அருகே வரவும், ரவி, லதாவிடம் அனு செல்லவும் சரியாக இருந்தது.

“அங்கிள்... நான் சொன்னேனே அண்ணி சைடு allianceனு” என்று ஒரு கவரை ரவியிடம் நீட்டினாள். “ரொம்ப நல்ல பையன்னு கேள்விபற்றுக்கேன்... உங்களுக்கு ஓகேனா இன்னைக்கே பொண்ணு பார்க்க வரதாக சொல்லிருக்காங்கலாம்... என்று கூறியவாரே அனு தேஜுவை பார்த்தாள். அவள் பார்வையில் முற்றிலும் அதிர்ச்சி தெரிந்தது. என்ன பேசுகிறாள் இவள்? இல்ல இல்ல நம்ம காதுக்கு தான் சரியாக கேட்கலை என்று தலையை உலுப்பி திருப்பி கேட்டாள்.

ரவி அனுவுக்கு பதில் தந்தார். “நீ ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னபவையே யோசிச்சிடோம்மா... அவளுக்கு எது நல்லதுன்னு எங்களுக்கு தெரியும். இந்த சம்பந்தம் எங்களுக்கு பிடிச்சிருக்குன்னு அவங்கள்ட்ட சொல்ல சொல்லுமா... இன்னைக்கு வேற எங்கயும் போகவேண்டியதில்லை அதுனால நல்ல நேரமா பார்த்து வர சொல்லுமா...” என்று இத்தனை நாள் இல்லாத மகிழ்ச்சியோடு ரவி கூறினார். இவர்கள் பேசுவதெல்லாம் கனவாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதளோடு தேஜு அனுவை பார்க்க, அவளோ ஒரு தடுமாற்றத்தோடு புன்னகைத்தாள். கண்களில் கண்ணீர் தயாராக இருக்க, விறுவிறுவென தனதரைக்கு சென்றுவிட்டாள். அவளை பின்தொடர்ந்து சென்ற அனுவோ அவளை சாமதானம் செய்ய முயன்றாள்.

“தேஜு ப்ளீஸ் நான் சொல்லுறதை கேளு... இன்னும் எத்தனை நாளைக்கு தான் அப்பா அம்மாவை கஷ்ட்ட படுத்த போற...????”

“பேசாத அனு... உன்ன ரொம்ப நம்பினேன். நீ கூட என்ன புரிஞ்சுக்கலையே” என்று கூரியவளின் குரல் கம்மிவிட்டது... அவள் அழுக போவதை உணர்ந்தவள்...

“சரி நான் பண்ணது உனக்கு தப்பாக தான் தோணும் ஆனால் தயவு செஞ்சு அழுகாதே... இதை மட்டும் எனக்காக பண்ணு...  போக போக எல்லாம் உன் நல்லதுக்கு தான்னு உனக்கே புரியும்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். அவள் செல்வதையே வெறுமையோடு பார்த்துக்கொண்டிருந்தவள் சிறுது நேரம் தன்னை சமணபடுத்திகொள்ள முயன்றாள். எவ்வளவு நேரம் இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருந்தாள் என்று அவளுக்கே தெரியாது, காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். அங்கு அனு நின்றுக்கொண்டிருந்தாள்... ஒருவரைஒருவர் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு இருக்க, அனு அருகில் வரவும் அவளை கட்டிக்கொண்டாள் தேஜு. அவள் முதுகை தடவிகொடுத்த அனு, தொடங்கினாள்... “உன் விருபத்தை மீறி நடுக்குதுன்னு கவலை படாத தேஜு... உன் நல்லதுக்காகத்தான் நான் பண்ணுவேன்னு தெரியாதா?” மீண்டும் அந்த பேச்சில் கோவம் வர தேஜு விலகி நின்றாள்...

“சரி சரி நீ அப்பறமா கோச்சுக்கோ மாப்பிள்ளை வீட்டுல இருந்து எல்லாரும் வந்திட்டாங்க” என்று அவள் கூறவும் இன்னும் கோவம் அதிகமானது தேஜுவுக்கு...

“என்ன கோவப்படுத்தி பார்க்கணும்னே இங்க வந்தியா? ஒழுங்கா எனக்கு சம்மதம் இல்லைன்னு சொல்லி அவங்களை இடத்தை காலி பண்ண சொல்லு” என்று கத்திக்கொண்டு இருந்தாள்.

அவள் வேறு யாரிடமோ பேசுவது போல் அனு பேச துவங்கினாள். “சரி அங்கிள்கிட்ட நான் மாப்பிள்ளையோட போட்டோ குடுத்திட்டு போனேனே பார்த்தியா? பார்த்திருக்க மாட்டனுதான் நானே கொண்டு வந்தேன்” என்று அவளிடம் நீட்டினாள். அதை பார்க்கும் ஆர்வம் இன்றி திரும்பிக்கொண்டாள் தேஜு... அனுவுக்கு சிரமப்பட்டு கட்டுபடுத்திய சிரிபெல்லாம் இப்போது வந்தது. அவளும் தோளை குலுக்கிக்கொண்டு... “நீ பார்க்காட்டி என்ன? மாப்பிள்ளை உன்னை ஏற்கனவே பார்த்திருக்காரு... ரொம்ப பிடிச்சிபோனதால நார்மல் formalities கூட இப்போ கிடையாது... தாம்பூலம் மாத்திறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை உன்கிட்ட பேசனுமாம்” என்றாள் கிண்டல் தோணியில் அனுவின் குரலில் இருந்த கிண்டல் இன்னும் அவளுக்கு எருச்சலை தர, “வர சொல்லு அவனை என் கையாள அடிவாங்கனும்னு இருக்கு அவன் தலைவிதி” என்று திட்டிக்கொண்டிருந்தாள். அவள் பாவம் அந்த மாப்பிள்ளை என்று நினைத்துக்கொண்டு தோளைகுளுக்கிவிட்டு “இரு வர சொல்லுறேன்” என்று சென்றுவிட்டாள்.

அவள் அந்த மாப்பிள்ளைகாக காத்திருக்கும் நேரத்தில் கீழே அவர்கள் சிரித்து பேசுவது என்னவென்று புரியாவிட்டாலும் எருச்சலாக இருந்தது. என் நிம்மதியை கெடுத்திட்டு என்ன சிரிப்பு? வரட்டும் இருக்கு அவனுக்கு என்று கோவம் அதிகமானது... சில நொடிகளிலேயே அரை பக்கம் அரவம் கேட்க, “உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிரு....” என்று திட்டியவாறு திரும்பினாள்.

எதிரில் நிரஞ்ஜன் நின்றுக்கொண்டிருந்தான்...( நீங்களெல்லாம் சீக்கரமே இதை கண்டுபிடுச்சிடுவிங்கன்னு தெரியும் அதனாலதான் நான் இந்த விஷயத்தை போஸ்ட்போன் பண்ணலை ஹி ஹி..)

அவனை கண்டதும் அவளுக்கு சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும் ஆனால் மாறாக சேர்ந்த கோவமெல்லாம் அவனிடத்தில் வந்து குவிந்தது... (ஸ்டார்ட் மியூசிக் என்பது போல் ஆரம்பிச்ச நம்ம தேஜு நிற்காம ஒரு 20 நிமிஷம் பேசிருக்காங்க... வாங்க அதைபத்தி நிரஞ்ஜன்கிட்ட கேட்கலாம்) அவள் ஆரம்பித்த முதல் நிமிடமே மானம் போகாமல் இருக்க அவன் கதவை சாத்திவிட, தேஜுவிற்கு அது வசதியாக போனது... அவள் பேசிக்கொண்டே போக தன் கையால் அவள் வைபோத்திவிட்டு, “ஏய் கொஞ்சம் கேப் விடுடி... காதில இருந்து ரெத்தம் வருது... எப்போ இருந்து உனக்கு இவ்வளவு கெட்ட வார்த்தை தெரிஞ்சிது?!?! சப்ப்ப்பா.. கண்ணை கட்டுது...” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளிடம் இருந்து ஒரு அறையும் கிடைத்தது அவனுக்கு... அவன் மொத்தமாக அதிர்ந்துபோய் பார்க்கையில் “இது என்னை இத்தனை வருஷம் கஷ்ட்டபடுத்தினதுக்கு... சும்மா ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்குவேன்னு நினைச்சியா? உதை விழும்” என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டினாள். அவள் அறைந்ததில் ஒன்றும் அவன் பெரிதாக அதிர்ந்து போகவில்லை, என்று இருந்தாலும் அவளிடம் இது கிடைக்கும் என்று அவன் அறிந்ததே... ஆனால் முன்னெச்சரிக்கை இல்லாமல் போனது தான் அவனுக்கு அதிர்ச்சி. “அப்பறம் இது...” என்று அவள் மீண்டும் கை உயர்த்த, “ஒய் இரு இரு நீ என்ன வருங்கால புருஷன்னு ஒரு மரியாதை இல்லாமல் கண்டபடி கைநீட்டுற ஜாக்குரதை இது எதுக்கு” என்று பெரிதாக ஆரம்பித்து சின்ன குரலில் முடித்தான்.

“ம்ம்ம்ம் இது என் பிறந்தநாள்னு கூட பார்க்காமல் இன்னைக்கும் ஷாக் தரேன்னு இவ்வளவு நேரம் நீங்க தான் பொண்ணு பார்க்க வரிங்கன்னு சொல்லாம இருந்ததுக்கு.”

“ஐயோ கடுவுளே இவளை என்ன செய்றது??? எனக்கே இந்த விஷயம் தெரியாதுடி இழுத்து பிடிச்சு வண்டில தள்ளி கூட்டிட்டு வந்திட்டாங்க நானே வீட்டை பார்த்துதான் விஷயம் கேட்டேன்” என்று பாவமாக கூறினான்.

இத்தனை நாள் பிரிவுக்கு பின் ஒரு நல்ல செய்தி பெற்றோரே சம்மதம் சொல்லி கூடிவந்து திருமணம் நடக்க போகிறது என்ற செய்தி இனிப்பாக இருந்தது அவளுக்கு. அவனை பார்த்து மெல்லியதாக சிரித்துவிட்டு “சாரி...” என்றாள்.

“என்னது வெறும் சாரி தானா? இவ்வளவு அடிச்சிட்டு பாரு என் கன்னமே சிவந்திருச்சு” என்று தன் கன்னத்தை காட்டினான். அவனது செய்கையில் இன்னும் சிரிப்பு வர, “அதுக்கு என்ன செய்யனும்?” என்று தோரணையாக நின்றுகேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.