(Reading time: 10 - 20 minutes)

 

"வளை திருப்பி அனுப்பிடுங்க!"-நீலக்கண்டச்சாரியார்.

"யாரை?"

"ஷைரந்தரி!"-அனைவரும் விழித்தனர்.

"சொல்றதை கேளுங்க... அவளை அனுப்பிடுங்க!"

"ஐயா...!"

"சொல்றதை செய்ங்க!"

"சரிங்க!"-அவர்,சிவாவிற்கு தொடர்பு கொள்ள கைப்பேசியை எடுத்தப்போது,சிவாவும்,ஷைரந்தரியும் வந்த கார் கோவில் வாசலை தொட்டது.

அடுத்தக்கட்டமாக,ஷைரந்தரி கோவில் வாசலை தொட்டப்போது,மழை பிய்த்து கொட்டியது.

"குட்டிம்மா!மழை நிறைய பெய்து,வீட்டுக்கு போயிடலாமா?"

"என்ன பேசுற நீ?வா!"-என்று அவள் முன்னே சென்றாள்.

அவளை கண்டவுடன், அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

"தாத்தா?என்னாச்சு மழையுல நின்னுட்டீங்க?"

"ஒண்ணுமில்லைம்மா!"

"போகலாமா?"

"ஆங்...போகலாம்!"-ஷைரந்தரி,முன்னே நின்றாள்.அனைவரும் அவளை பின் தொடர்ந்தனர்.

வேள்வி பூஜை தொடங்கிற்று.ஷைரந்தரிக்கு அங்கு வந்ததில் இருந்து ஏதோ சிலிர்த்துக் கொண்டே இருந்தது.

"கங்கை ஜலம் எடுத்துட்டு வந்தீங்களா?"- நீலக்கண்டச்சாரியார்.

"ஆ...சிவகாமி கங்கை நீர் தா!"

"என்னங்க...கங்கை ஜலம் இன்னும் வந்து சேரலை."

"என்ன?என்ன சொல்ற?முதல்லயே சொல்ல மாட்டியா?"-அவர் தலை குனிந்தார்.

"தாத்தா...அவங்க என்ன பண்ணுவாங்க?எதுக்கு அவங்களை திட்டுற?"

"அது இல்லைம்மா..."

"உஷ்!"-பின்,     நீலக்கண்டச்சாரியாரிடம்,

"கங்கை நதி அவசியம் வேணுமா?"-அவர்,அவள் பேச்சுக்கு கட்டுப்பட்டதை போல,

"ஆமாம்மா!"என்றார்.

".............."-அவள்,சிறிது யோசித்தாள்.

"நீ நினைத்தால்,கொண்டு வர முடியுமேம்மா!"-ஷைரந்தரி,இதழில் புன்னகை மலர்ந்தது.

"நிச்சயமா!"-அவர்கள், பேசுவது எவருக்கும் விளங்கவில்லை.

ஷைரந்தரி முன்னே செல்ல,கங்கை நதிக்கென்ற விஷேசமாக தயாரிக்கப்பட்ட குவளையை எடுத்துக் கொண்டு அவள் பின்னே சென்றார்            நீலக்கண்டச்சாரியார்.

பழக்கப்பட்டதைப் போல,அவள் சென்ற விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.ஒரு இடத்தில் தனித்தனியே அமைக்கப்பட்ட இரு குளங்கள் இருந்தன.அதில், ஒன்றில் நீர் முழுவதுமாக நிரம்பி இருந்தது. மற்றொன்றில் வறட்சி மட்டுமே நிரம்பி இருந்தது.ஷைரந்தரி, வறண்டிருந்த குளத்திற்குள் இறங்கினாள்.அவள், செய்கையை கண்ட சிவா,அவளை தடுப்பதற்காக அடியெடுத்து வைத்தப்போது,நீலக்கண்டச்சாரியார் அவனை தடுத்தார்.

"வேணாம்பா!இது விதி!"-ஷைரந்தரி அக்குளத்தின் கடைசி படியில் நின்றாள்.அவள்,கண்களுக்கு முன் ஏதேதோ காட்சிகள் தோன்றின.அவள், செவிகளில்,

"எந்த இடத்தில் பரிசுத்தத்தின் அவதாரமான என்னை அவமதித்தீர்களோ!அந்த மண்ணில் இனி,பவித்ரத்தின் உச்சக்கட்டமான கங்கை நதி பாயாது!"-என்ற பேச்சு ஒலித்து கொண்டிருந்தது. அவள்,கண்களில் கண்ணீர் வந்து அக்குளத்தின் வீழ்ந்தது.ஷைரந்தரி தன் இரு கரம் குவித்து நின்றாள்.வானில்,இடி முழக்கம் பலமானது.அவள், தனது வலது காலை அக்குளத்தில் ஊன்றினாள். பின்,தன் இடக்காலையும் ஊன்றினாள்.மின்னலோடு மழை பிய்த்தது.

அவள்,கண்கள் வானை பார்த்தன.பின்,திரும்பி தான் வந்த திசை நோக்கி நடந்தாள்.

ஒருவரையும் கவனிக்காமல்...

சிவா,அவளை அழைத்தப் போதும் அவள் திரும்பி பார்க்கவில்லை.திடீரென்று, ஏதோ சப்தம் கேட்க அனைவரும் திரும்பினர். ஷைரந்தரியின் பாதம்பட்ட அக்குளத்தில் மெல்ல ஈரப்பதம் தென்பட்டது. நடப்பவை ஒன்றும் புரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டிருந்தனர்.திடீரென்று,வானில் இருந்து விழுந்த இடி இறங்கி,மண் பிளந்து வறண்டிருந்த மண்ணில் நீர் சேர்ந்தது.சிறிது,சிறிதாக அது முதல் படி,இரண்டாம் படி என உயர்ந்து நல்ல நிலையை எட்டியது.அவ்வதிசயத்தை ஊரே கண்டது.ஆம்....நீங்கள் நினைத்தது சரியே...அது கங்கை நீரே தான்.பல நூறு ஆண்டுகளாக வெளிவராத கங்கை நீர் அன்று தடையை உடைத்துக் கொண்டு வெளி வந்தது.

"சாமி?இது?"

"ஷைரந்தரி உங்க வீட்டு வாரிசு இல்லை.அவ,இந்த கங்கை நதியோட குழந்தை.பரிசுத்தத்தோட உச்சக்கட்டம்.அந்த ஆதிபராசக்தியே நேரடியா மகேசனை வழிப்படுற பஞ்சாக்ஷர திதியில பிறந்தவ.இன்னிக்கு,பல நூறு வருஷமா இந்த பாஞ்சாலபுரமே அனுபவிச்ச சாபத்துல இருந்து விமோர்சனம்    கொடுத்திருக்கா!"-அவரின்,வார்த்தைகள் அனைவரையும் அதிர வைத்தது.

நீலக்கண்டச்சாரியார் சென்று கங்கை நீரை எடுத்து வந்தார்.

"இனி...நடக்கறது நடந்து தான் ஆகணும். கவலைப்படாம வாங்க!"-அனைவரும் அவரை தொடர்ந்து சென்றனர். சிவாவை தவிர!அவன்,அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.

"இல்லை...இப்படி நடக்க கூடாது!ஷைரந்தரிக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்.கடவுளே...என் தங்கச்சியை காப்பாற்று!"-என்று எண்ணிக் கொண்டான்.

சங்கு முழங்கிற்று,மேள தாளம் தொடங்கியது.வேள்வி ஆரம்பித்தது.வேத மந்திர கோஷங்கள் முழங்கின.அனைத்தும் நல்லப்படியாக முடியும் நேரத்தில்...

"அம்மா...ஷைரந்தரி...வந்து கங்கை நீரால    ஆதிபராசக்திக்கு அபிஷேகம் பண்ணும்மா!"-ஷைரந்தரி ஒரு அடி எடுத்து வைத்த போது,

"ஒரு நிமிஷம் சாமி!"-தடுத்தது ஒரு பெண் குரல்.

"ஈஸ்வரி அம்மா?நீங்களா?"

"ம்...ஒவ்வொரு வருஷமும் என் பேரன் தானே அபிஷேகம் பண்ணுவான்?இப்போ என்ன யார்யாரோ பண்ணுறாங்க?"-ஷைரந்தரி அசையாமல் நின்றாள்.

"அம்மா!அது...வந்து."

"அதெல்லாம்...எந்த சமாதானமும் வேணாம்.என் கவுரவம் எனக்கு முக்கியம் இல்லையா?"- ஷைரந்தரியின் பார்வை தன் தாத்தாவை நோக்கியது. அவர்,தலை குனிந்தார்.

"அவங்களே ஒதுங்கிட்டா நல்லது!"-ஷைந்தரியின் இதழில் ஏளன புன்னகை உதித்தது.

"தாராளமா...நீங்களே பண்ணலாம்!ஆனா,அதை ஏத்துக்க வேண்டியவங்க ஏத்துக்கணும்."

"ம்...இத்தனை வருஷமா ஏத்துக்கிட்டவங்க இப்போ ஏத்துக்க மாட்டாங்களா?அவங்களே...எழுந்து வந்து எனக்கு நாங்க பண்றது பிடிக்கலைன்னா சொல்ல போறாங்க?"

"அது நடக்காதுன்னு தானே இத்தனை வருஷமா ஆடுனீங்க...எந்த தப்பும் பண்ணாத,ஒருத்தர் மேலே பழி போட்டு,அவர் குடும்பமே அவரை வெறுக்கிறா மாதிரி பண்ணீங்க!"-அவளது பேச்சை கேட்ட மாத்திரத்தில் அசோக் கேள்வியுடன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.

அதை கேட்டு ஈஸ்வரிக்கும் அதிர்ச்சி தான்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.