(Reading time: 10 - 20 minutes)

 

"டந்த எல்லாத்துக்கு சாட்சி நான்!ஞாபகம் இருக்கட்டும்.உங்களால் முடிஞ்சா நீ நினைத்ததை சாதித்து காட்டுங்க!"-கூறிவிட்டு அவள் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.அவள்,எதிரில் கேள்வியுடன் வந்து நின்றான் சிவா.

"உன் ஆசைப்படியே, வீட்டுக்கு கூட்டிட்டு போ சிவா!"-அவன்,சரி என்பது போல தலையசைத்துவிட்டு காரை நோக்கி சென்றாள்.செல்லும் முன்,

"ஒரு வேளை...அவங்களால் இந்த வேள்வியை முடிக்க முடியலைன்னா..பார்வதியை முடிக்க சொல்லுங்க!"என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

காரில் பயணித்துக் கொண்டிருக்கையில்,

"ஹே...சிவா!"

"ம்...சொல்லுமா!"

"கோவிலுக்கு போகலை?எங்கே போயிட்டு இருக்க?"-அதைக் கேட்ட மாத்திரத்தில் வண்டியை நிறுத்தினான் அவன்.

"அம்மூ???"

"என்ன அம்மூ?கோவிலுக்கு போகலை?"

"அது...இல்லைடா...மழை பெய்துல்ல...அதான், வீட்டுக்கு போயிட்டு இருக்கோம்.அவங்க பின்னாடி வராங்க!"

"ம்...சரி!சிவா,ரொம்ப தலைவலிக்குது."

"கொஞ்ச நேரம்மா! வீட்டுக்கு போயிடலாம்.."

"சரி!"-வீட்டிற்கு வந்தவள்.

"நான் போய் தூங்க போறேன்."-என்று கூறிவிட்டு சென்றாள்.

"அம்மூ..."

"ம்...."

"இல்லை...ஒண்ணுமில்லை!"

"ம்..."-ஷைரந்தரி செல்வதை பார்த்துக் கொண்டே அப்படியே நின்றான் சிவா.

(அங்கே கோவிலில்)

"வினய்...நீ போய் யாகத்தை முடி!அப்படி,என்ன சக்தி தடுத்துவிடுதுன்னு பார்க்கிறேன்."

"சரி பாட்டி!"-அவன்,ஒரு அடி முன் வைத்தது தான் தாமதம்.அங்கிருந்த தீபங்கள் அனைத்தும் அணைந்தன. புயல் காற்று வீசியது.வானில் நிலநடுக்கம் போல இடி,மின்னல்...

"அம்மா...இந்த விளையாட்டு வேணாம்மா!"-நீலக்கண்டச்சாரியார்.

"என்ன ஆனாலும் பரவாயில்லை.என் பேரன் தான் இதை முடிக்கணும்!"-அந்நேரம்,அதுவரையில் எரிந்து கொண்டிருந்த வேள்வித்தீ அணைந்தது.

"மகேஷ்வரா!"-என்று முணுமுணுத்தார் நீலக்கண்டச்சாரியார்.

அனைவரும்      அதிர்ந்துவிட்டனர்.

"போதுமா...உங்க பிடிவாதம்?"-விஸ்வநாதன்.

"ஏங்க...இப்படி இருக்கீங்க?ஷைரந்தரி சொன்னது சரியாப் போச்சு!"

"வினய்...நீ வா!போகலாம்."-அவர்கள்,வெளியே சென்ற நேரம்...

ங்கே வீட்டில்..

"அம்மூ!"

"ம்..."

"பூஜை ரூம்ல விளக்கு அணைந்திருக்குடா!கொஞ்சம் வந்து ஏத்துறீயா?"

"சரி!"-ஷைரந்தரி விளக்கை ஏற்றினாள்.

அது...அங்கே கோவிலில் அம்மன் முன்னிலையில் உள்ள இரு தீபங்களில் ஒளி வீச வைத்தது.

"அம்மா!விளக்கு எரியுதும்மா!"-யுதீஷ்ட்ரன்.

மஹாலட்சுமி திரும்பி பார்த்தார்.அவர் கண்களில் ஆச்சரியம் மின்னியது.

அனைவரும் திரும்பினர்.

"சாமி?"

"உங்க பேத்திக்கு அந்த மகேஷ்வரன் அருள் பரிபூரணமா கிடைத்திருக்கு!"-அடுத்ததாக அவர், வேள்வியில் சிறிது கங்கை நீரை விட,பற்றி எரிந்தது வேள்வி.

"பார்வதி...நீ வந்து பூஜையை முடிம்மா!"

"நான்?"

"நீ தான்!"-பின்,பார்வதி வந்து அவ்வேள்வியை அபிஷேகம் செய்து நிறைவேற்றினாள்.

அனைத்தையும் முடித்துவிட்டு,வீட்டிற்கு கிளம்பினர்.

செல்லும் வழியில்...

"அண்ணா!"

"என்ன பாரு?"

"ஷைரந்தரி?"

"அவளுக்கு என்ன?"

"அவ சொன்னது எப்படிண்ணா நடந்தது?"

"அதான் சொன்னாங்களே!அவளுக்கு பரிபூரண அருள் கிடைச்சிருக்குன்னு."

"............"

"இதுவரைக்கும் கடவுள் மேல நம்பிக்கை இல்லை.ஆனா,நடந்ததை பார்த்தா நம்பாம இருக்க முடியலை."

"உனக்கு ஷைரந்தரியை பிடிக்கும்னு தெரியும்.ஆனா,அவளுக்கு உன்னை பிடிக்குமா?இங்கே நடக்கறதை பார்த்தா?எனக்கு உன் ஆசை நிறைவேறாம போயிடுமோன்னு பயமா இருக்குண்ணா!"

"அதுக்கு தான் நான் எதுக்கும் ஆசை படுறது இல்லை.ம்ஹீம்...பார்ப்போம்,ஆனா,இப்பவும் ஷைரந்தரி மேல அன்பு வளர்ந்துட்டு தான் போகுது! குறையவில்லை."

"அண்ணா?"

"எதையும் போட்டு குழப்பிக்காதேடா!சிவா,உன்கிட்ட எதாவது பேசினானா?"

"இல்லை.."

"சரி...வா!வீட்டுக்கு போனா,அவனே பேசுவான்."

"எப்படி?"

"உன் அண்ணி...அது வந்து...ஷைரந்தரி பேச வைத்துவிடுவாள்."-அவன் கூறியதை அவள் கவனிக்காமல் இல்லை.... பார்வதியின் மனதில் பயம் படர்ந்தது.

'கடவுளே...அண்ணனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துவிட்டது. ஷைரந்தரி,அவனுக்கு மனைவியாக வாய்த்தால், அவனை விட பாக்கியம் செய்தவன் உலகில் இருக்க முடியாது.ஷைரந்தரியின் மனதில் இவனுக்கு இடம் வாய்க்க வேண்டுமே!சிவாவிற்கு இவன் மேல் உள்ள கோபம் மறைய வேண்டுமே!அனைத்தும்... நல்லப்படியாக நிகழ வேண்டும்."-என்று வேண்டிக் கொண்டாள்.அவள் ஆசை நிறைவேறுமா????????

தொடரும்

Go to Episode # 06

Go to Episode # 08

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.